காரடையான் நோன்பு.. ஏன் நோன்பிருக்கிறார்கள்.. என்னவெல்லாம் பலன் கிடைக்கும்?

Mar 14, 2025,03:17 PM IST

- ஸ்வர்ணலட்சுமி


காரடையான் நோன்பு மார்ச் மாதம் 14 ஆம் தேதி மாசி 30ஆம் நாள் கடைபிடிக்கப்படுகிறது. இந்த நோன்பு மாசி மாதம் இறுதி நாள் அல்லது பங்குனி முதல் நாளில் கொண்டாடப்படும். இது பாரம்பரியமாக தமிழ் பெண்கள் விரதம் இருந்து  வழிபடும் சிறப்பான நாளாகும்.


காரடையான் நோன்பு முக்கியத்துவம்:


இந்த நோன்பு சிவபெருமானையும் பார்வதி தேவியையும் வழிபடும் சிறந்த நாளாகும். நற்கண வரை பெறவும் கணவரின் நீண்ட ஆயுளுக்காகவும் பெண்கள்  உண்ணா நோன்பு இருந்து வழிபடுவது வழக்கம். 


காரடையான் நோன்பு புராணக்கதை:




சாவித்திரி சத்யவானின் உயிரை மீட்ட துயரத்தை உடைத்த சாவித்திரியின் கட்டுப்பாட்டை போற்றும் வகையில் அனுஷ்டிக்கப்படுகிறது இந்த காரடையான் நோன்பு. இந்த நோன்பு சாவித்திரி சத்தியவான் கதையை அடிப்படையாகக் கொண்டது. சத்தியவாணை மரணத்திலிருந்து மீட்க சாவித்திரி எமனை பக்தியுடன் விரதம் இருந்து அவனை உயிருடன் மீட்டாள் என்பது புராணக் கதை .இதனாலேயே இந்த நோன்பு 'சாவித்திரி நோன்பு' என்றும் அழைக்கப்படுகிறது.


வழிபடும் நேரம் &முறைகள்:


14 .3 .2025 அன்று காலை 6:00 மணி முதல் 7:50 வரை. காலை 9:30 மணி முதல் 10: 20 மணி வரை வழிபாடு செய்ய உகந்த நேரம். சரடு கட்டும் நேரம் காலை 7:00 மணி முதல் 7 :20 வரை பின்னர் காலை 9:30 முதல் 10 :15 மணிக்குள். காரடையான் நோன்பு அடை சிறப்பு உணவாக உப்பு மற்றும் வெள்ளம் சேர்த்த காரடையான் அடை அல்லது அடையப்பம் தயாரிக்கப்படுகிறது. வீட்டில் அம்மன் அல்லது குலதெய்வம் முன்னாள் பூஜை செய்வர் . அடையுடன்  வெண்ணெய் வைத்து அம்மனுக்கு நைவேத்தியம் செய்வார்.


பெண்கள் "உருகாத வெண்ணையும்  ஒழுகாத தேனும் நான் தரும் காரடையான் நோன்பு நலம் தருக கணவனுக்கு" என்று சொல்லி நோன்பு மேற்கொள்வர். நோன்பு முடியும் சமயத்தில் பெண்கள் பவித்திரம் (நூல்) கட்டிக்கொண்டு மஞ்சள் சரடு அதனுடன் மஞ்சள் கொம்பு, பூ வைத்து கழுத்தில் கட்டிக் கொள்வர். திருமணம் ஆகாத பெண்கள் தனக்கு நல்ல கணவன் வேண்டும் என்று நோன்பு மேற்கொண்டு அந்த சரடுமே கையில் கட்டி கொள்வர் .இது 'காத்தான் காப்பு 'என்று கூறப்படுகிறது.


பெண்கள் வழிபாட்டின் போது "உருகாத  வெண்ணையும் ஓர் அடையும் நான் நோற்று, நல்காத வாழ்வு எனக்குத் தருவாய்-என் கணவர் என்னாளும் பிராணனுடன் வாழ்வானாக "  என்று மனதார கூறி விரதத்தை முடிப்பர்.


காரடையான் நோன்பின் ஆன்மீக பொருள்:


காரடையான் நோன்பு சத்தியத்தின் பெயரில் நிலைத்திருப்பது ஆகும். இது குடும்ப ஒற்றுமையை வலுப்படுத்தும் ஒரு பாரம்பரிய நோன்பாகும். தமிழ் கலாச்சாரத்தில் பெண்களின் உறுதியை, குடும்ப நலனை ,திருமண வாழ்வின் அமைதியை வலியுறுத்தும் ஒரு முக்கியமான நோன்பாகும். குடும்ப வளம் ,மகிழ்ச்சி, கணவர் நலன் மற்றும் ஆயுள் விருத்திக்காக பாரம்பரிய வழியில் தாய்மார்கள் தங்கள் மகள்களுக்கு இந்த வழிபாட்டை பழக்கப்படுத்துவார்கள். பெண்களின் குடும்ப நலனுக்காக செய்யும் பூர்வீக நோன்பு இந்த காரடையான் நோன்பு.


மேலும் ஆன்மீக தகவல்களுக்கு இணைந்திருங்கள் தென் தமிழுடன் .உங்கள் ஸ்வர்ணலட்சுமி.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

கன மழை எதிரொலி.. சென்னை உள்பட பல மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை.. புதுவையிலும் விடுமுறை அறிவிப்பு

news

8 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்... 10 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்... வானிலை மையம் எச்சரிக்கை!

news

தீவிரம் அடைந்து வரும் வடகிழக்கு பருவமழை... முதல்வர் முக ஸ்டாலின் மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோனை!

news

பெங்களூரு - ஓசூர் மெட்ரோ இணைப்புத் திட்டம் சாத்தியமில்லை: மெட்ரோ நிர்வாகம்

news

மகளிர் இலவசப் பஸ்களை விமர்சிக்காதீங்க.. என்னெல்லாம் நடக்குது தெரியுமா.. கேட்டா ஆச்சரியப்படுவீங்க!

news

தீபாவளியன்று குறைந்திருந்த தங்கம் விலை இன்று மீண்டும் உயர்வு....சவரனுக்கு ரூ.2,080 உயர்வு!

news

காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் எதிரொலி.. சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் மழை!

news

தீபாவளியை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி கடிதம்!

news

உழவர்களுக்கு இந்த தீபாவளி இருளாகத்தான் இருந்தது.. கொல்லாமல் கொல்லுகிறது திமுக அரசு:அன்புமணி

அதிகம் பார்க்கும் செய்திகள்