சென்னை : தமிழக அரசியல் களத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனின் அடுத்தடுத்த அரசியல் நகர்வுகள் அனைவராலும் உற்று கவனிக்கப்பட்டு வருகிறது. அவர் தவெகவில் சேரப் போவதாக தகவல்கள் வலுத்து வரும் நிலையில் திடீரென திமுக உள்ளே புகுந்திருப்பது பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
திமுகவைச் சேர்ந்த அமைச்சர் பி.கே.சேகர்பாபு இன்று ஒரே நாளில் 2 முறை செங்கோட்டையனை நேரில் சந்தித்துப் பேசியிருப்பது பரபரப்பைக் கூட்டியுள்ளது. திமுக தொடர்ந்து தூது விட்டு வருவதால் செங்கோட்டையன் அடுத்து என்ன செய்ய போகிறார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது.
சமீபத்தில் அதிமுக.,வின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பதவிகளில் இருந்தும் நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், விஜய்யின் தவெக கட்சியில் இணைய போவதாக கடந்த 3 நாட்களாக செய்தி பரவி வந்தது. இது குறித்து செய்தியாளர்கள் நேற்று கேள்வி எழுப்பிய போது, அதிக.,வின் அடிப்படை உறுப்பினர் பதவியில் கூட இருக்கக் கூடாது என தன்னை நீக்கியதால் தாங்க முடியாத மன வேதனையில் இருப்பதாக மட்டும் சொல்லி விட்டு சென்று விட்டார். இந்நிலையில் இன்று சபாநாயகர் அப்பாவுவை சந்தித்து, தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்யும் கடிதத்தை அவர் அளித்துள்ளார்.

இன்று மீண்டும் அவரிடம், தவெக.,வில் இணைவது பற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போது, இன்று ஒருநாள் பொறுத்திருங்கள் என சொல்லி விட்டு சென்றார் செங்கோட்டையன். இதற்கிடையில் ராஜினாமா கடிதம் கொடுப்பதற்காக சபாநாயகரை சந்திக்க சட்டசபை வளாகத்திற்கு வந்த செங்கோட்டையனை, தமிழக இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு சந்தித்து பேசி உள்ளார். சபாநாயகர் அறையில் வைத்தே செங்கோட்டையனை, சேகர்பாபு சந்தித்ததாக கூறப்படுகிறது. முன்னதாக இன்று காலையும் சேகர்பாபு, செங்கோட்டையனை சந்தித்ததாகவும் தகவல்கள் உள்ளன.
தவெகவுக்கு செங்கோட்டையன் போகப் போவதாக கூறப்படும் நிலையில் செங்கோட்டையனை வளைக்க திமுக தீவிரம் காட்டுவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்போது செங்கோட்டையனுக்கு முன்பு 4 வாய்ப்புகள் மட்டுமே உள்ளது.
செங்கோட்டையனுக்கு இருக்கும் 4 வாய்ப்புகள் :
1. திமுக.,வின் அழைப்பை ஏற்று அவர்கள் பக்கம் சென்றால், தேர்தலில் போட்டியிட சீட் கிடைக்கும். மீண்டும் எம்எல்ஏ.,வாகும் வாய்ப்பு கூட கிடைக்கலாம். அல்லது தங்கதமிழ்ச் செல்வன் போல் எம்.பி., பதவி கூட கேட்டு வாங்கலாம்.
2. தவெக.,வில் சென்று இணைவது. அங்கும் தேர்தலில் போட்டியிட சீட் கிடைக்கும். ஆனால் அந்த கட்சியில் இருப்பவர்கள் அனைவரும் செங்கோட்டையனை விட வயதில் சிறியவர்கள். மூத்த அரசியல்வாதியான செங்கோட்டையன், அவர்களுடன் செட் ஆவாரா என்பது சந்தேகம் தான்.
3. தனிக்கட்சி துவங்குவது. தற்போது ஓபிஎஸ் அறிவித்திருப்பது போல் தனியாக கட்சி துவங்கி, தேர்தலில் போட்டியிட்டு, கொங்கு பகுதியில் தனது செல்வாக்கை காட்டுவது. எம்டிஏ., உடன் கூட கூட்டணி பேசவும் வாய்ப்புள்ளது.
4. அரசியலில் இருந்து ஓய்வு பெறுவது. ஆனால் இந்த முடிவை செங்கோட்டையன் தேர்வு செய்வதற்கான வாய்ப்பு குறைவு தான்.
திமுகவா.. தவெகவா?.. பரபரக்கும் களம்.. செங்கோட்டையனை சேகர்பாபு சந்தித்தது ஏன்? 4 வாய்ப்புகள்!
இந்திய அரசியலமைப்புச் சட்டம் அனைவருக்குமானது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தார் கே.ஏ.செங்கோட்டையன்.. நாளை தவெகவில் சேருகிறாரா?
புதுச்சேரியில் ரோடுஷோ நடத்தும் தவெக.. விஜய்யின் மாஸான மாஸ்டர் பிளான் இது தானா?
நேற்றைய விலையை தொடர்ந்து தங்கம் விலை இன்றும் உயர்வு... சவரனுக்கு ரூ.640 உயர்வு!
சஷ்டி & திருவோணம் நட்சத்திரம் சேர்ந்த சுப தினம் இன்று!
வங்கக் கடலில் உருவானது சென்யார் புயல்.. தமிழ்நாட்டுக்கு மழை எப்படி இருக்கும்?
எனை வார்த்தெடுத்த என் பள்ளிக்கூடமே!
கிங்கினி நாதம் கல்கல் என ஒலித்திட கண்ணன் நடந்திடுவான்!
{{comments.comment}}