சென்னை: புனித ரமலான் மாதம் தொடங்கி விட்டது. முஸ்லீம்கள் புனித ரமலான் மாதத்தை நோன்பிருந்து முடித்து, பண்டிகையைக் கொண்டாடக் காத்துள்ளனர்.
இஸ்லாமில் ரமலான் மாதம் என்பது புனித மாதமாகும். இந்த மாதம் முழுவதும் நோன்பிருந்து கடைசி நாளை ரம்ஜான் பெருநாளாக இஸ்லாமியர்கள் கொண்டாடுகிறார்கள். ரம்ஜான் மாதம் நோன்பு கடைப்பிடிப்பதன் மூலம், தங்களைத் தன்னம்பிக்கையுடன் கட்டுப்படுத்தி, எல்லா புலன்களையும் அடக்கி ஆன்மீக நம்பிக்கைக்கு வலு சேர்க்கிறார்கள் இஸ்லாமியர்கள்.
காலை முதல் மாலை வரை நோன்பிருக்கும் இஸ்லாமியர்கள் அதன் பின்னர் நோன்பு திறப்பார்கள். அப்போது பேரிச்சை, பழங்கள், காய்கறிகள் போன்றவை அதிக அளவில் சாப்பிடுவது வழக்கம். இது நமது உடலின் சத்தை நீர்த்துப் போகச் செய்யாமல் பிடித்து வைத்திருக்க உதவும்.நோன்பு காலத்தில் உடலிலிருந்து நீர்ச்சத்தை இழந்து விடாமல் தடுக்க அதிகமான நீரை அருந்துவது வழக்கம். சிலர் தண்ணீர் கூட குடிக்காமல் நோன்பு இருப்பதும் உண்டு.
விடியற்கால உணவு அதாவது சஹூர்.. விடியற்காலையில் ஆரோக்கியமான உணவுக்குப் பிறகு நோன்பு தொடங்கும். இப்தார் எனப்படும் நோன்பு திறப்பானது மாலையில், சூரியன் மறைவுக்குப் பிறகு தொடங்கும்.

ரம்ஜான் நோன்புக் காலத்தில் ஏழை எளியவர்களுக்கு உதவி செய்தல், தானம் கொடுப்பது போன்றவற்றை மேற்கொள்ள வேண்டும். முடிந்த அளவுக்கு உதவிகளைச் செய்யலாம். நோன்பு காலத்தின்போது, வாக்குவாதம், குறைசொல்வது, கோபப்படுவது, சண்டை போடுவது போன்றவற்றில் ஈடுபடாமல் அமைதியான முறையில் நோன்புக் காலத்தைக் கடக்க வேண்டும்.
விரதம் அல்லது நோன்பு என்பது நமது உடல் ஆரோக்கியத்திற்கும் மிக முக்கியமானது. பல்வேறு மதங்களிலும் இந்த விரதமானது நடைமுறையில் இருந்து வருவதுதான். நோன்பு காலத்தின்போது நமது உடல் சீராக மாறுகிறது. உடலின் கழிவுகள் சுத்திகரிக்கப்பட்டு உடலும், மனமும் நலமடைகிறது.
நோன்பு இருப்பதன் மூலம் தன்னம்பிக்கை மற்றும் சுய கட்டுப்பாட்டை மேம்படுத்துகிறது. மேலும் மன வலிமையையும் இது அதிகரிக்கிறது.
பட்டினப்பாக்கத்தில் தலைமை செயலகம் கட்டினால்...என்ன அதிமுக ஜெயக்குமார் இப்படி சொல்லிட்டார்?
மதுரை அரசாளும்.. மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்.. 17 ஆண்டுகளுக்குப் பிறகு!
முதல்வர் விஜய் குறித்து அவதூறு பேச்சு: சேகர்பாபு, ஆ.ராசா மீது வழக்குப்பதிவு
சிவன்மலை ஆண்டவர் உத்தரவுப்பெட்டியில் தேங்காய் வைத்து பூஜை...இது நடக்க போவது உறுதியா?
திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு வைரஸ் காய்ச்சல்: திமுக முப்பெரும் விழா ஒத்திவைப்பு!
காலம் மாறிப் போச்சு.. ஒரு நிமிடக் கதை (17)
அரும்பானவள் கொஞ்சம் குறும்பானவள்!
மணவாழ்க்கை.. துணையாள் சொல்படி நட!
சிந்தனைச் சிதறல்.. நல்லவர்களாக இருங்கள்.. நற்சிந்தனையோடு இருங்கள்!
{{comments.comment}}