சென்னை: ஆட்சியமைப்பதில் தொடர்ந்து சிக்கல் நிலவி வரும் நிலையில் சட்ட வல்லுநர்கள் பலரும் தவெகவுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வரும் நிலையில், பல்வேறு கட்சிகளும் விஜய்யை ஆதரித்துப் பேசி வரும் நிலையில் அவர் மட்டும் பேசாமல் இருப்பது வியப்பளிக்கிறது.
இன்னும் வாய் திறக்காமல் விஜய் மெளனம் காப்பது ஏன்? என்ற பெரும் கேள்வியும் எழுகிறது. அனல் பறக்க ஒரு பிரஸ் மீட் வைத்தாலே போதுமே.. ஏன் அதைச் செய்ய தவறுகிறார் விஜய் என்பதுதான் மில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது.
தமிழகத்தில் அரசியல் களம் நொடிக்கு நொடி மாறிக் கொண்டிருக்கிறது. அடுத்து என்ன நடக்கும்? முதல்வராக பதவியேற்று தமிழகத்தை அடுத்து ஆள போவது யார்? விஜய் முதல்வர் ஆவாரா? என் பல எதிர்பார்ப்புக்கள் தமிழக அரசியலிலும், தமிழக மக்கள் மனதிலும் பரபரப்பை அதிகரித்துக் கொண்டிருக்கிறது. ஆனால் இந்த சூழலிலும் விஜய் தற்போது வரை வாய் திறக்காமல் மெளனம் காப்பது ஏன் என்பது தான் புரியாத புதிராக உள்ளது.

தமிழக சட்டசபை தேர்தலில் ஆட்சி அமைக்கும் அளவிற்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை என்றாலும், இன்றைய தேதியில் தமிழகத்தில் தனிப்பெரும் கட்சியாக, மிகப் பெரிய கட்சியாக விஜய்யின் தவெக உருவெடுத்துள்ளது. இத்தனை ஆண்டுகளாக தமிழகத்தை ஆண்ட திராவிட கட்சிகளை பின்னுக்கு தள்ளி விட்டு, விஜய்க்கு முதன்மை ஆதரவை தமிழக மக்கள் அளித்துள்ளனர். பெரும்பான்மை பலம் இருப்பதால் அரசியலமைப்பு சட்டத்தின் படி விஜய், தமிழகத்தின் முதல்வராக பதவியேற்க முடியும். ஆனால் அவருக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்க முடியாது. பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என சொல்லி விட்டார் ஆளுநர்.
இரண்டு முறை ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரிய பிறகும், அவர் விஜய்யை ஆட்சி அமைக்க அழைக்கவில்லை. இது ஒரு புறம் இருக்க, பரம எதிரிகளாக இருந்த அதிமுக.,வும் திமுக.,வும் இணைந்து தமிழகத்தில் ஆட்சி அமைக்க போவதாக பேச்சுவார்த்தை நடந்து வருவதாக சொல்லப்படுகிறது. இத்தனை பரபரப்புக்கு மத்தியில், தனக்கு மக்கள் அளித்த தீர்ப்புக்கு எதிரான சூழல் அமைந்தும் விஜய் இதுவரை வாய் திறந்து பேசவில்லை.
ஆளுநருக்குக் கண்டனம், ஆளுநருக்குக் கேள்வி என எதையும் முன் வைக்கவில்லை. குறைந்தபட்சம் சட்ட ரீதியான நடவடிக்கைக்கும் கூட அவர் போகவில்லை. அதிருப்தியை வெளிப்படுத்தவில்லை. குறிப்பாக அரசியலுக்கு வந்து இதுவரை ஒருமுறை கூட செய்தியாளர்களை சந்திக்கவில்லை. தற்போது தேர்தலில் வென்று, முதல்வராகும் நிலை வந்தும் கூட இதுவரை செய்தியாளர்களை அவர் சந்திக்கவே இல்லை. அவரை ஆட்சி பீடத்தில் ஏற விடாமல் சதித் திட்டம் நடப்பதாக செய்திகள் வெளியான பிறகும் கூட அவர் சந்திக்கவில்லை.
தங்கள் தரப்பு நியாயத்தை மக்கள் மன்றத்தில் விஜய் எடுத்து வைத்திருக்கலாம். தாங்கள் தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களில் வெற்றி பெற்றும் ஆட்சி அமைக்க விடாமல் ஆளுநர் தடுப்பது குறித்து செய்தியாளர்களை அழைத்து தனது கருத்துக்களைத் தெரிவித்திருக்கலாம். தங்களை நம்பி ஓட்டளித்த மக்களுக்கு தங்களின் நிலைப்பாடு குறித்து விளக்கி இருக்கலாம்.
திமுக அதிமுக கூட்டணி அமைக்கப் போவதாக செய்திகள் வெளியான போதும் கூட அதற்கு தவெக ரியாக்ட் செய்யவில்லை. அதை வைத்து பெரிய பாலிட்டிக்ஸே செய்திருக்கலாம். அதையும் செய்யவில்லை. குறைந்தபட்சம் சட்ட ரீதியாக தீர்வு காண சுப்ரீம் கோர்ட்டை அணுகி இருக்கலாம். அதுவும் செய்யவில்லை. ராகுல் காந்தி வக்கீல்களை ஏற்பாடு செய்து கொடுத்ததாகவும் கூட செய்திகள் வெளியாகின. ஆனால் அதும் நடைபெறவில்லை.
தலைவர்களை நேரடியாக சந்தித்திருக்க வேண்டும்

அதே போல் பெரும்பான்மைக்கு தேவையான ஆதரவை பெருவதற்காக விசிக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் தமிழகத்தின் மூத்த அரசியல் தலைவர்களை கொண்ட கட்சிகள். அவர்களை விஜய் நேரடியாக சந்தித்து, ஆதரவு கேட்டிருக்கலாம்.
குறிப்பாக திருமாவளவனை அவர் நேரில் சந்தித்திருந்தால் சிறப்பாக இருந்திருக்கும். அப்படி செய்திருந்தால் அவர்களும் ஆதரவு அளிக்க முன் வந்திருப்பார்கள். ஆனால் மாறாக ஆதவ் அர்ஜூனா, நிர்மல் குமார், அருண்ராஜ் போன்ற கட்சி நிர்வாகிகளை அனுப்பி பேச வைத்திருப்பதும் சரியான செயல் கிடையாது.
கரூர் விவகாரத்தில் ஆரம்பத்தில் தனக்காக விஜய் பேசவில்லை. மற்ற கட்சி தலைவர் பேசி, விஜய் இதற்கு பொறுப்பு கிடையாது என பேசி, சுப்ரீம் கோர்ட்டும் விஜய்க்காக பேசிய பிறகு தான் தனது தரப்பு நியாயங்களை அவர் வாய் திறந்து பேசினார். அதுவும் கடைசி கட்ட தேர்தல் பிரச்சாரங்களின் போது தான் அவர் தனது மீது தவறில்லை என்பதை விஜய் ஓப்பனாக பேசினார். அதே போல் தற்போது அவர் தரப்பு நியாயங்களை காங்கிரஸ் உள்ளிட்ட மற்ற கட்சிகள் பேசிக் கொண்டு, அவருக்காக குரல் கொடுத்துக் கொண்டிருக்கையில் இப்போதும் விஜய் ஏன் பேசாமல் அமைதி காக்கிறார் என்பது புரியவில்லை. விஜய்யின் இந்த செயல்பாடு, மக்கள் அவர் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை சரிக்கவும் வாய்ப்புள்ளது.
ஆட்சியமைப்பதில் சிக்கல்.. இப்போது கூட விஜய் பேசாமல் இருப்பது ஏன்.. என்னதான் பிரச்சினை?
GenZ effect: அடியோடு மாறுது உலகம்.. இது மாற்றமா? ஏமாற்றமா?
அதிமுக-திமுக இணைந்து ஆட்சி அமைத்தால்.. விஜய் எடுக்க போகும் அடுத்த அதிரடி முடிவு!
அரசுப் பள்ளிகளில் டாப் தேர்ச்சி ஈரோடு.. முதல் 5 மாவட்டங்கள் விவரம்!
பிளஸ்டூ தேர்வில்.. சென்டம் போட்ட தங்கங்கள்.. கம்ப்யூட்டர் சயின்ஸ்தான் டாப்!
பிளஸ்டூ தேர்வு முடிவுகள்: ஆண்கள் பள்ளிகளை விட பெண்கள் பள்ளிகளில் அசத்தலான தேர்ச்சி விகிதம்!
+2 Exam results: பிளஸ்டூ தேர்வு முடிவுகளில்.. அரசுப் பள்ளிகள் அசத்தல்!
வெளியானது பிளஸ்டூ தேர்வு முடிவுகள்.. 95.20% தேர்ச்சி.. வழக்கம் போல மாணவிகள் அசத்தல்
தவெக குழப்பத்தால்.. திமுக, அதிமுகவை வைத்து கொடி கட்டிப் பறக்கும் வதந்திகள்!
{{comments.comment}}