சென்னை: நடிகை கெளதமி பாஜகவிலிருந்து விலகிய நிலையில் திடீரென அதிமுகவில் இணைந்துள்ளார். அதிமுக அவரை தன் பக்கம் இழுத்ததன் பின்னணி குறித்து பரபரப்பாக பேசப்படுகிறது.
ஆந்திராவைப் பூர்வீமாகக் கொண்ட நடிகை கெளதி, தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர். குரு சிஷ்யன்தான் அவரது முதல் படம். பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ள கெளதமி பின்னர் அரசியலில் தீவிரமாக இறங்கினார். பாஜகவில் இணைந்து செயல்பட்டு வந்தார்.
கடந்த சட்டசபைத் தேர்தலில் அவர் ராஜபாளையம் தொகுதியில் போட்டியிட மிகவும் ஆர்வமாக இருந்தார். அந்த்த தொகுதியில் களப் பணியெல்லாம் கூட ஆற்றி வந்தார். ஆனால் அவருக்கு சீட் கிடைக்கவில்லை. இதனால் பெரும் ஏமாற்றமடைந்தார். தேர்தலுக்குப் பின்னர் கட்சியில் தீவிரம் காட்டாமல் ஒதுங்கிக் கொண்டார்.
இந்த நிலையில் கடந்த ஆண்டு அவர் பாஜகவை விட்டு விலகினார். அழகப்பன் என்பவர் தன்னிடம் நில மோசடி செய்து விட்டதாகவும், அவருக்கு பாஜக தலைவர்கள் ஆதரவாக இருப்பதாகவும் கூறி அவர் அறிக்கை விட்டார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சென்னை மத்தியக் குற்றப் பிரிவு போலீஸிலும் அவர் புகார் அளித்தார். அதன் பேரில் தற்போது அழகப்பன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு விட்டனர்.
இந்த நிலையில் நேற்று திடீரென அதிமுகவில் இணைந்து விட்டார் கெளதமி. இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிமுகவில் இணைந்தது குறித்து கெளதமி கூறுகையில், நீண்ட காலமாகவே நான் அம்மாவை முன்மாதிரியாகக் கொண்டு செயல்பட்டு வருகிறேன். அவர் மீது நிறைய மரியாதையும், பாசமும் அன்பும் வைத்துள்ளேன். அதை விளக்க வார்த்தைகள் கிடையாது. அதிமுகவில் இணைந்தது திடீர் திட்டம் என்று சொல்வதை விட இந்த பயணத்தை சிறப்பாக மேற்கொள்ள வேண்டும் என்று விரும்புகிறேன் என்றார் கெளதமி.
தேர்தல் சமயத்தில் கட்சியில் சேர்ந்துள்ளதால் கெளதமி லோக்சபா தேர்தலில் போட்டியிடுவாரா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது. அப்படி அவர் ஒருவேளை போட்டியிடுவதாக இருந்தால் விருதுநகர் தொகுதியில் போட்டியிடலாமா என்ற எதிர்பார்ப்பும் உள்ளது. விருதுநகர் தொகுதிக்குட்பட்ட ராஜபாளையம் சட்டசபைத் தொகுதியில்தான் அவர் போட்டியிட முன்பு ஆர்வம் காட்டி வந்தார். அந்த வகையில் விருதுநகர் தொகுதியில் அவரை நிறுத்த அதிமக முடிவு செய்யுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இதுகுறித்து கெளதமி கூறுகையில், அதையெல்லம் போகப் போகப் பார்க்கலாம் என்று மட்டுமே கூறினார். ஆனால் கெளதமியை வைத்து அதிமுக ஏதாவது பிளான் செய்திருக்கலாம் என்று உறுதியாக நம்பப்படுகிறது. கெளதமி வார்த்தையில் சொல்வதானால், போகப் போகப் பார்க்கலாம்.
எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!
கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!
இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?
உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?
விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி
கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்
Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்
ருத்ர தாண்டவம் (சிறுகதை)
உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!
{{comments.comment}}