மீண்டும் தாமரையுடன் சங்கமிக்கத் தயாராகிறதா இரட்டை இலை.. பரபரக்கும் அரசியல் களம்!

Mar 04, 2025,05:52 PM IST

சென்னை: தமிழ்நாட்டு அரசியல் களத்தில் மீண்டும் அதிமுக - பாஜக இடையே கூட்டணி அமையப் போகிறதா என்ற பரபரப்பான எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது. இரு கட்சிகளின் மாநிலத் தலைவர்களும் பேசியுள்ள பேச்சுக்கள் அதைத்தான் சுட்டிக் காட்டுவதாக உள்ளன.


ஜெயலலிதா மறைந்த பின்னர் அதிமுக - பாஜக இடையே கூட்டணி உருவானது.  இந்த கூட்டணி 2019 நாடாளுமன்றத் தேர்தலை ஒன்றாக சந்தித்தன. அப்போது கூட்டணியில் இந்தக் கட்சிகள் தவிர்த்து தேமுதிக, பாமக, புதிய தமிழகம், தமிழ் மாநில காங்கிரஸ், என்ஆர் காங்கிரஸ் என ஏகப்பட்ட கட்சிகள் இடம் பெற்றிருந்தன. ஆனால் தமிழ்நாட்டில் இந்தக் கூட்டணி பெரும் தோல்வியைத் தழுவியது. அதாவது தமிழ்நாட்டில் 38 தொகுதிகளில் தோற்று ஒரு தொகுதியில் மட்டும் வென்றது. அதிலும் அதிமுகவே வென்றது. புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது.


பின்னர் 2021 சட்டசபைத் தேர்தலில் இரு கட்சிகளும் கூட்டணி வைத்தன. இப்போதும் அதே கூட்டணி தொடர்ந்தது. இக்கூட்டணிக்கு 75 இடங்களில் மட்டுமே வெற்றி கிடைத்தது. அதிமுக தனது ஆட்சியை இழந்தது. இந்த இரு பெரும் தோல்விக்குப் பிறகு கூட்டணி உடைந்தது. அதன் பின்னர் நடந்த இடைத் தேர்தல்களை அதிமுக, பாஜக ஆகிய இரு கட்சிகளுமே புறக்கணித்தன. இக்கட்சிகளின் கூட்டணியில் உள்ள பாமக, தேமுதிகவும் கூட போட்டியிடாமல் புறக்கணித்தன. தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலைக்கும், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கும் இடையிலான ஈகோ போர் மிகவும் மோசமாக முற்றியதன் விளைவே இந்தக் கூட்டணி முறிவு என்பது இரு கட்சிகளின் மூத்த தலைவர்களின் கருத்தாகும். மறுபக்கம் அதிமுகவும் கூட பல துண்டுகளாகப் போய் விட்டது. எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராகவும் கட்சிக்குள் கலக் குரல்கள் கேட்க ஆரம்பித்து விட்டன.




மீண்டும் பாஜகவுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்று அதிமுகவுக்குள் பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். எடப்பாடி பழனிச்சாமி அதை எதிர்த்து வருகிறார். அவர் தொடர்ந்து எதிர்த்தால் அவரது பதவிக்கே ஆபத்து என்ற சூழல் தற்போது உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில்தான் அதிமுகவின் போக்கில் மாற்றம் தெரிய ஆரம்பித்துள்ளது. அதாவது திமுக மட்டுமே எங்களது. வேறு யாரும் எதிரி அல்ல என்று எடப்பாடி  பழனிச்சாமி இன்று கூறியுள்ளார். இது பாஜகவுக்கான சிக்னலாக பார்க்கப்படுகிறது. 


அதேபோல பாஜக தலைவர் அண்ணாமலையிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, அதிமுக எதிரிக் கட்சி அல்ல என்று கூறியுள்ளார். இதை வைத்து அரசியல் நிபுணர்கள் முடிச்சுப் போட ஆரம்பித்து விட்டனர். இரு கட்சிகளும் தங்களது ஊடல்களை மறந்து விட்டு கூட்டணி சேர முடிவெடுத்து விட்டதாக பேச்சுக்கள் கிளம்பியுள்ளன. இரு தரப்பிலும் காரசாரமான வாக்குவாதங்கள், வார்த்தைப் போர்கள், கடுமையான விமர்சனங்கள் நடந்துள்ள நிலையில் மீண்டும் இருவரும் சேர்ந்தால் அது எப்படி இருக்கும் என்று தெரியவில்லை. அதேசமயம் உள்ளார்ந்த உறவாக இது இருக்குமா என்ற கேள்வியும் எழுகிறது. அதேசமயம், ஓபிஎஸ்ஸையும் அதிமுகவில் இணைக்க பாஜக தீவிரமாக உள்ளது. இதை எடப்பாடி ஏற்பாரா என்றும் தெரியவில்லை. ஒரு வேளை ஏற்காவிட்டால் மறுபடியும் சுயேச்சையாகவே ஓபிஎஸ் தரப்பு போட்டியிடுமா என்ற கேள்வியும் எழுகிறது. நாளை விரிவாகப் பேசுவதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார். இதுவும் எதிர்பார்ப்பை எகிற வைப்பதாக உள்ளது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

இந்த வாழ்க்கை ஒரு கனவா?

news

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை.. முதல்வர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிச்சாமி அஞ்சலி

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் அக்டோபர் 30, 2025... இன்று மகிழ்ச்சி தேடி வரும் ராசிகள்

news

பணியாளர் நியமனத்தில் முறைகேடா?.. களங்கம் கற்பிக்க மத்திய அரசு முயற்சி.. அமைச்சர் கே. என். நேரு

news

2,538 பணியிடங்களுக்கு முறைகேடாக பணி நியமனம் செய்து ரூ.888 கோடி திமுக ஊழல்: அண்ணாமலை குற்றச்சாட்டு

news

Rain Rain come again.. தமிழ்நாட்டில் அடுத்த 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் தகவல்

news

மக்களைக் காக்க யாரும் எங்களுக்கு சொல்லித் தர வேண்டாம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

news

நவ. 5ல் சிறப்பு பொதுக்குழு: ஆழ் நீள் அடர் அமைதிக்குப் பிறகு.. பேசப் போகிறேன்.. விஜய் அறிக்கை

news

காலையில் மட்டுமில்லங்க..பிற்பகலிலும் உயர்ந்தது தங்கம் விலை.. இன்று மட்டும் சவரனுக்கு ரூ.2,000 உயர்வு

அதிகம் பார்க்கும் செய்திகள்