டெல்லி: டெல்லி மாநில முதல்வராக ஒரு பெண் பதவியேற்பார் என்று செய்திகள் பரவி வருகின்றன. பாஜக எம்எல்ஏக்கள் கூடி விரைவில் முதல்வரைத் தேர்ந்தெடுப்பார்கள் என்றும், பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்காவுக்குப் போய் விட்டுத் திரும்பியதும் பதவியேற்பு விழா நடைபெற வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.
டெல்லி சட்டசபைக்கு நடந்த தேர்தலில் பாஜக அபார வெற்றியைப் பெற்றது. மொத்தம் உள்ள 70 தொகுதிகளில் 48ல் பாஜக வெற்றி பெற்றது. மீதம் உள்ள 22 தொகுதிகளில் ஆம் ஆத்மி கட்சி வென்றது. காங்கிரஸ் ஒரு தொகுதியிலும் வெல்ல முடியவில்லை.
இந்த நிலையில் டெல்லியின் அடுத்த முதல்வர் யார் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இதுவரை முதல்வர் யார் என்று தெரியவில்லை. பர்வேஷ் வர்மா, பன்சூரி சுவராஜ் உள்ளிட்ட சிலரின் பெயர்கள் அடிபட்டு வருகின்றன. இருப்பினும் ஒரு பெண் முதல்வருக்கு வாய்ப்பிருப்பதாக தற்போது பலமான பேச்சு அடிபடுகிறது. யார் அந்த பெண் என்பது மட்டுமே சஸ்பென்ஸாக உள்ளது.

அதேபோல பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த ஒருவருக்கு துணை முதல்வர் பதவி தரப்படலாம் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது. பெண்கள் மற்றும் தலித் சமுதாயத்தினருக்கு அமைச்சரவையில் முக்கியத்துவம் தரப்படும் என்ற பேச்சும் அடிபடுகிறது.
தற்போது வெற்றி பெற்றுள்ள 48 பாஜக எம்எல்ஏக்களில் நான்கு பேர் மட்டுமே பெண்கள் ஆவர். ரேகா குப்தா (ஷாலிமார் பாக் தொகுதி), ஷிகா ராய் (கிரேட்டர் கைலாஷ்), பூனம் சர்மா (வாசிர்பூர்) , நீலம் பஹல்வான் (நஜப்கர்) இவர்களில் ஒருவருக்கு முதல்வர் பதவி கிடைக்கலாம் என்று கூறப்படுகிறது. அப்படி இல்லாவிட்டால் தேர்தலில் போட்டியிடாத யாரேனும் முதல்வராகப் போகிறார்களா என்ற எதிர்பார்ப்பும் உள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
"காங்கிரஸ், பாஜக.,வுக்கு இருப்பது ஒரே ஜீன் தான்" நீட் விவகாரத்தில் சி.வி.சண்முகம் காட்டமான விமர்சனம்
21 அதிமுக எம்.எல்.ஏ-க்கள் தகுதி நீக்க விவகாரம்: சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி
Travel story: சொகுசுக் கப்பலின் மொட்டை மாடியில் அமாவாசை தர்ப்பணம்.. அசந்து போன அமெரிக்கர்!
விநாயகர் பெருமான் அவதரித்த விநாயகர் சதுர்த்தி.. ஆவணி மாத சிறப்புகள்!
Short Story: ரிசர்வ் பெட்டியில் ஒரு அன்ரிசர்வ் கலாட்டா!
கடந்த காலத்தின் பசுமை நினைவுகள்
வளர்ந்து வரும் சகிப்புத்தன்மையும் அமைதிப் பேணலும்!
Tamil Short Story: தந்தையாகிய தமையன்!
கோடைக்கால மேகம்
{{comments.comment}}