சீனாவில் பரவும் வைரஸ்... இந்தியாவிற்கு பாதிப்பு வருமா?... மத்திய சுகாதாரத்துறை விளக்கம் இதுதான்!

Jan 05, 2025,04:05 PM IST

டில்லி : சீனாவில் பரவி வரும் HMPV வைரஸ் இந்தியாவிலும் பாதிப்பை ஏற்படுத்துமா? இந்தியாவிற்கு அந்த வைரஸ் வருவதற்கான வாய்ப்பு உள்ளதாக சோஷியல் மீடியாக்களில் பரவி வரும் தகவல்கள் மற்றும் பலரின் சந்தேகங்களுக்கும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் பதிலளித்துள்ளது.


சீனாவில் கடந்த சில வாரங்களாக HMPV என்ற வைரஸ் பரவி வருகிறது. அங்கு பலரும் நிமோனியா, இன்ஃபுளுயன்சா வைரஸ்களாலும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த வைரஸ்கள் குழந்தைகள் மற்றும் முதியவர்களை எளிதில் தாக்கக் கூடியது என்பதால் பலரும் இதற்கு சிகிச்சை பெறுவதற்காக மருத்துவமனைகளில் குவிந்து வருகின்றனர். பலரும் பாதிப்பு கருதி மாஸ்க் அணிந்த படி உள்ளனர். இதனால் உலகம் முழுவதும் பதற்ற நிலை உருவாகி உள்ளது.


இந்தியாவிலும் இந்த வைரஸ் பரவ வாய்ப்புள்ளதாக தகவல் பரவியதை அடுத்து மத்திய சுகாதாரத்துறை இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ளது. அதில், சீனாவில் வைரஸ் பரவி வருவது உண்மை தான். இதனால் சீனாவில் பலரும் சுவாச கோளாறுகளால் பாதிக்கப்பட்டு வருவது நாளுக்கு நாள் அதிகரித்து வருவதும் உண்மை தான். சீனாவில் நிலவும் இந்த சூழலை உலக சுகாதார மையம் தொடர்ந்து உன்னிப்பாக கவனித்து அவ்வப்போது தற்போதைய நிலவரம் குறித்த விபரங்களை வெளியிட்டு வருகிறது.




சீனாவில் காய்ச்சல்கள் பரவுவது ஒன்றும் புதியது கிடையாது. இது வழக்கமாக அங்கு ஃப்ளு பரவும் சீசன் தான். இது ஒன்றும் அசாதாரணமானது கிடையாது. சீனாவில் இந்த சீசனில் இன்ஃப்ளுயன்சா, ஆர்எஸ்வி, HMPV போன்ற வைரஸ்கள் வழக்கமாக பரவும் ஒன்று தான் இதனால் யாரும் பீதி அடைய வேண்டாம். இந்திய அரசும் தொடர்ந்து சீனாவின் நிலையை கண்காணித்து வருகிறது. அது மட்டுமின்றி உலக சுகாதார மையத்திடமும் சீனாவின் நிலை குறித்த அறிக்கையை குறிப்பிட்ட கால இடைவெளியில் உடனடியாக அளித்து கொண்டே இருக்கும் படியும் இந்தியா சார்பில் கேட்கப்பட்டுள்ளது. 


தற்போது சீனாவில் பரவி வருவது ஒன்றும் புதிய வைரஸ் கிடையாது. ஏற்கனவே இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளில் இருப்பது தான்.  இது பற்றிய பொது மக்கள் எந்த அச்சமும் கொள்ள தேவையில்லை. இது பற்றிய ஆய்வுகள் நடத்தவும் மருத்துவ கழகங்களை கேட்டுக் கொண்டுள்ளோம். ஒருவேளை நோய்கள் பரவுகிறது என்றால் அது பற்றிய கண்காணிக்கவும், அவற்றை தடுக்கவும் தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு, தயார் நிலையில் வைக்க ஆலோசனை கூட்டங்களும் நடத்தப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தமிழகத்தில் இன்று 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்!

news

தமிழக காங்கிரஸ் கொஞ்சம் கொஞ்சமாக அழிவின் பாதையில் செல்கிறது: ஜோதிமணி எம்.பி.,

news

அச்சச்சோ.. ஆமாங்க இப்ப தாங்க வலிக்குது.. தங்கமே தங்கம்!

news

பராசக்திபட வெளியீட்டிற்கு தடை விதக்க மறுப்பு: சென்னை உயர்நீதிமன்றம்

news

ஜனநாயகன்: ஜனவரி 4 முதல் டிக்கெட் முன்பதிவு ஆரம்பம்

news

தமிழ்ப் படத்துக்கு தமிழ்நாட்டில் தியேட்டர்கள் இல்லை.. தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி குமுறல்!

news

வைகோ நடைபயணம்... திருச்சியில் தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

கடந்த 4 நாட்கள் சரிவிற்கு பின்னர் இன்று மீண்டும் தங்கம் விலை உயர்வு..சவரனுக்கு ரூ.1,120 உயர்வு!

news

ஏறிக் கொண்ட போகும் தங்கம் விலை.. காரணம் என்ன.. இதுக்கு என்ட் கார்டே கிடையாதா?

அதிகம் பார்க்கும் செய்திகள்