சிவகங்கையில் சிக்கல்.. கார்த்தி சிதம்பரத்திற்கு எதிராக.. போர்க்கொடி உயர்த்தும் சுதர்சன நாச்சியப்பன்!

Feb 04, 2024,07:00 AM IST

சிவகங்கை: சிவகங்கை லோக்சபா தொகுதியை மீண்டும் கார்த்தி சிதம்பரத்திற்குத் தரக் கூடாது. அவர் தொடர்ந்து ராகுல் காந்தியை விமர்சித்து வருகிறார் என்று சிவகங்கையில் போர்க்குரல் எழுந்துள்ளது.


கார்த்தி சிதம்பரத்திற்கு சீட் தரக் கூடாது என்று வலியுறுத்தி மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானமே போட்டிருப்பதால் சிக்கல் எழுந்துள்ளது.


சிவகங்கை தொகுதியில் ஒரு காலத்தில் ப.சிதம்பரம் தொடர்ந்து போட்டியிட்டு வந்தார். மொத்தம் 7 முறை அந்தத் தொகுதியில் ப.சிதம்பரம் வென்றுள்ளார். காங்கிரஸ் சார்பில் 5 முறையும், தமாகா சார்பில்  2 முறையும் இத்தொகுதியில் வென்றுள்ளார் ப.சிதம்பரம். கடந்த 2019 தேர்தலில் இந்த சீட்டில் சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் போட்டியிட்டு வென்றார். 


சிவகங்கை தொகுதியில் 2 முறை அதிமுகவும்,  2 முறை திமுகவும் வென்றுள்ளனர். இது காங்கிரஸ் கட்சியின் கோட்டையாகும். இத்தொகுதியில் ப.சிதம்பரத்திற்கு டப் கொடுப்பவராக  அதே காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சுதர்சன நாச்சியப்பன் இருந்து வருகிறார். இவர் 1999ம் ஆண்டு அங்கு எம்.பியாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஆவார்.




இந்த நிலையில் வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் கார்த்தி சிதம்பரத்திற்கு சீட் கொடுப்பதற்கு சுதர்சன நாச்சியப்பன் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். நேற்று சிவகங்கையில் நடந்த மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் கார்த்தி சிதம்பரத்திற்கு சீட் தரக் கூடாது என்று வலியுறுத்தி தீர்மானமும் போடப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


இதுகுறித்து சுதர்சன நாச்சியப்பன் கூறுகையில்,  கார்த்தி சிதம்பரம் கட்சி நலனுக்கு எதிராக தொடர்ந்து செயல்படுகிறார். ராகுல் காந்திக்கு எதிராக பேசி வருகிறார். அதை காங்கிரஸார் ஏற்றுக் கொள்ள முடியாது. அவருக்கு 2024 லோக்சபா தேர்தலில் சீட் தரக் கூடாது என்று கூறி கூட்டத்தில் தீர்மானம் போடப்பட்டுள்ளது. அவருக்கு சீட் தருவதை நாங்கள் ஏற்க மாட்டோம் என்று கூறியுள்ளார் சுதர்சன நாச்சியப்பன்.


தேர்தல் நெருங்கும் நேரத்தில் சிவகங்கை காங்கிரஸ் கட்சிக்குள் ஏற்பட்டுள்ள இந்த பூசல் கட்சித் தலைமைக்கு கவலையை அளிப்பதாக உள்ளது. அதை விட முக்கியமாக திமுக கவலை அடைந்துள்ளது. இவர்களது உட் கட்சிப் பூசலால் பாஜகவுக்கு லாபம் வந்து விடக் கூடாதே என்பதே திமுகவின் பயமாகும்.


கடந்த லோக்சபா தேர்தலில் பாஜக சார்பில் எச். ராஜா இங்கு போட்டியிட்டு தோல்வி அடைந்தார். மீண்டும் அவருக்கே வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்படிப்பட்ட நிலையில், காங்கிரஸ் கட்சியினரிடையே உட்கட்சிப் பூசல் வெடித்திருப்பது பாஜகவுக்கு சந்தோஷத்தையும், திமுகவுக்கு சங்கடத்தையும் அளிப்பதாக உள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

அமைதி பலவீனம் அல்ல.. காந்தியின் ஆயுதம் அதுதான்.. நோபல் வென்ற வெனிசூலா தலைவர் புகழாரம்

news

தொடர் உயர்வில் தங்கம் விலை... இன்றும் சவரனுக்கு ரூ.800 உயர்வு!

news

அவார்டுகளைக் குறி வைக்கும் சூப்பர் மேன்.. தீவிரப் பிரச்சாரத்தில் குதித்த வார்னர் பிரதர்ஸ்

news

மரத்தை வைத்தவன் தண்ணீர் ஊற்றுவானா?

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் அக்டோபர் 25, 2025... இன்று ஆனந்தம் தேடி வரும் ராசிகள்

news

அக்.27ஆம் தேதி உருவாகிறது மொந்தா புயல்... அலெர்ட் கொடுத்த இந்திய வானிலை மையம்!

news

கடலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் அலர்ட்: சென்னை வானிலை மையம்!

news

23 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்!

news

வங்காளக் கடலில்.. புதிதாக ஒரு காற்றழுத்தத் தாழ்வு.. மீண்டும் வரும் மழை நாட்கள்

அதிகம் பார்க்கும் செய்திகள்