சென்னை: தேமுதிக, அதிமுக கூட்டணிக்கு தான் செல்லும் என அனைவரும் நினைத்துக் கொண்டிருந்த சமயத்தில், திடீரென தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சென்று சந்தித்து விட்டு வந்தார் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த். இதனால் திமுக பக்கம் செல்ல தேமுதிக தயாராகி விட்டதாக தகவல்கள் வெளியாகின.
ஆனால் இது பற்றி பிரேமலதா விஜயகாந்த்திடம் கேட்டதற்கு, "இரண்டு அரசியல் கட்சி தலைவர்கள் சந்தித்து கொண்டாலே கூட்டணி தானா? இது மரியதை நிமித்தமான சந்திப்பு. நலம் விசாரிப்பதற்காக தான் முதல்வரை சென்று சந்தித்தேன்" என்றார். அதோடு தேமுதிக மாநில மாநாடு ஜனவரியில் நடத்தப்பட உள்ளதாகவும் அப்போது தான் கூட்டணி குறித்து முடிவு செய்யப்பட்டு, அறிவிக்கப்படும் என்றும் கூறி இருந்தார் பிரேமலதா. இதனால் மீடியாக்களும் தேமுதிக.,வின் அரசியல் நகர்வுகளை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.
தேமுதிக, அதிமுக பக்கம் சென்று விடாமல் இருப்பதற்காக தான் திமுக எம்எல்ஏ கதிரவனின் தந்தை சீனிவாசனுக்குச் சொந்தமான தனலட்சுமி சீனிவாசன் மருத்துவ கல்லூரி மூலமாக, தேமுதிக.,விற்கு சொந்தமான ஆண்டாள் அழகர் பொறியில் கல்லூரியை ரூ.150 கோடிக்கு வாங்க ஏற்பாடு செய்யப்பட்டதாம். ஆண்டாள் அழகர் கல்லூரியை விற்பதற்காக பேச்சுவார்த்தைகள் முடிந்து விட்டதாக மீடியாக்களில் தகவல் வெளியானது. ஆனால் ஆண்டாள் அழகர் கல்லூரியை வாங்குவதற்காக ரூ.50 கோடி மட்டுமே தேமுதிக.,விற்கு கொடுக்கப்பட்டுள்ளதாம். மீதமுள்ள ரூ.100 கோடியை பின்னர் தருவதாக கூறி இருப்பதாக சொல்லப்படுகிறது.

ஆண்டாள் அழகர் கல்லூரியை விற்பதற்கான ஏற்பாடுகள் ஒரு பக்கம் நடந்து கொண்டிருக்கும் சமயத்தில், கிட்னி முறைகேடு விவகாரத்தில் சிக்கி உள்ளது தனலட்சுமி சீனிவாசன் கல்லூரி குழுத்திற்குச் சொந்தமான தனலட்சுமி சீனிவாசன் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை நிர்வாகம். இந்த விவகாரம் கோர்ட் வரை சென்றுள்ளது. தற்போது மதுரை ஐகோர்ட் கிளையில் நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியன் தலையிலான பெஞ்ச் கிட்னி முறைகேடு வழக்கை விசாரித்து, கல்லூரி நிர்வாகத்தின் மீது எஃப்ஐஆர் பதிவு செய்ய உத்தரவிட்டுள்ளது. அதோடு, இந்த விவகாரம் குறித்து விசாரிக்க 5 பேர் கொண்ட சிறப்பு புலனாய்வு குழு ஒன்றையும் கோர்ட்டே அமைத்துள்ளது. அது மட்டுமல்ல, உறுப்பு திருட்டு என்பது மிகவும் சீரியசான விவகாரம் என்பதால் சிறப்பு புலனாய்வு குழுவின் விசாரணையை கோர்ட் தொடர்ந்து கண்காணிக்கும் என்றும் கூறி உள்ளார்.
கிட்னி முறைகேடு விவகாரத்தில் ஒருவேளை கோர்ட் உத்தரவுப்படி எஃப்ஐஆர் பதிவு செய்யப்படும் பட்சத்தில், அதில் நிதி முறைகேடு விவகாரமும் உள்ளடங்கும் என்பதால் அமலாக்கத்துறையும் இந்த விவகாரத்திற்குள் வரும். அப்படி அமலாக்கத்துறை உள்ளே வந்தால், இந்த வழக்கின் விசாரணை முடிந்து, தீர்ப்பு வரும் வரை தனலட்சுமி சீனிவாசன் கல்லூரிக்கு சொந்தமான அனைத்து வங்கி கணக்குகளும் முடக்கப்படும். அப்படி முடக்கப்பட்டால் ஆண்டாள் அழகர் கல்லூரியை வாங்குவது தொடர்பான மீதமுள்ள ரூ.100 கோடியை தேமுதிக.,விற்கு தர முடியாமல் போகும்.
கிட்னி முறைகேடு விவகாரம் பூதாகரமாகி வருவதால் திமுக-தேமுதிக கூட்டணி பேச்சுவார்த்தையும் ஆரம்ப கட்டத்துடன் நின்று விட்டதாக சொல்லப்படுகிறது. இதனால் பிரேமலதா விஜயகாந்த், மீண்டும் அதிமுக கூட்டணிக்கே திரும்பலாமா என்று பரிசீலித்து வருகிறாராம். இதன் காரணமாக தான் தவெக மாநாடு முடிந்ததும், "விஜய் எங்கள் தம்பி" என்றவர், அடுத்த சில நாட்களிலேயே தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டு, "யாராலும் விஜய்காந்த் ஆக முடியாது. அரசியல் ரீதியாக விஜயகாந்த் பெயரை விஜய் பயன்படுத்துவது தவறு" என கண்டனமும் தெரிவித்துள்ளார் என சொல்லப்படுகிறது.
வரைவு வாக்காளர் பட்டியல் வந்ததும் நாம் இன்னும் தீவிரமாக பணியாற்ற வேண்டும்.: முதல்வர் மு.க.ஸ்டாலின்
ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும் அனைவரும் கம்பி எண்ணப்போவது உறுதி: எடப்பாடி பழனிச்சாமி
அப்பா வின் ஆட்சியில் தொடர்ந்து காணாமல் போகும் அப்பாவி குழந்தைகள்: நயினார் நாகேந்திரன்
புதுச்சேரியில் தவெக பொதுக்கூட்டம்... தவெக தொண்டர்களுக்கு வெளியாகியுள்ள அறிவிப்பு என்ன தெரியுமா?
என் திரை வாழ்வை சீர்குலைக்க நடந்த சதி செயல்: நடிகர் திலீப் பேட்டி
ஒரு வாரமாக பயணிகளைப் படுத்தி எடுத்த இண்டிகோ.. முழுக் கட்டணத்தையும் திருப்பித் தர முடிவு
பெத்லஹேமில்.. 2 ஆண்டுகளுக்குப் பிறகு.. களை கட்டிய கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள்!
திருநாவுக்கரசரால் பாடப் பெற்ற திருகொண்டீஸ்வரம் .. பசுபதீஸ்வரர் கோவிலில் ஏகாதச ருத்ர யாகம்
எந்த மாற்றமும் இன்றி இருந்து வரும் தங்கம் விலை...வெள்ளியின் விலை நிலவரம் என்ன தெரியுமா?
{{comments.comment}}