பாலிவுட்டுக்குப் போகிறாரா லோகேஷ் கனகராஜ்.. அட ஹீரோ இவராமே.. பரபரக்கும் கோலிவுட்!

Aug 19, 2024,01:37 PM IST

சென்னை: பிரபல இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அடுத்து இயக்கும் பான் இந்தியா திரைப்படத்தில் அமீர்கானை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இச்செய்தி ரசிகர்கள் மத்தியில் குஷியை ஏற்படுத்தியுள்ளது.


தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் ஒருவராக விளங்கும் இயக்குனர் லோகேஷ தமிழ் சினிமாவில் மாநகரம் திரைப்படம் மூலம் அறிமுகமானவர். இப்படத்தின்  மிகச்சிறந்த கதைக்களம் அனைத்து தரப்பு ரசிகர்கள் இடையே மிகப்பெரிய வரவேற்பு பெற்று இப்படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் என சொல்லும் அளவிற்கு பாராட்டு பெற்றார். அந்த அளவிற்கு முதல் படமே தமிழ் சினிமாவில் இவரின் தரத்தை உயர்த்தியது. 




அதன் பின்னர் விஜய் நடிப்பில் மாஸ்டர் படத்தை இயக்கி இருந்தார். இப்படமும் பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்தது. இதனை தொடர்ந்து தமிழ் திரை உலகில் உச்ச நட்சத்திரங்களை வைத்து இயக்க ஆரம்பித்த லோகேஷ் கனகராஜ் தமிழ் சினிமாவின் அச்சாணியாக உருவெடுத்தார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளிவந்த கமல் நடித்த விக்ரம், கார்த்தி நடித்த கைதி, உள்ளிட்ட படங்கள் மாபெரும் ஹிட் கொடுத்தது. அந்த வரிசையில் மீண்டும் விஜய் நடிப்பில் வெளிவந்த லியோ படமும் பெருவாரியான வரவேற்பைப் பெற்றது. கலவையான விமர்சனங்கள் கிடைத்தாலும் கூட லியோ தமிழ் சினிமாவின் முக்கியப் படங்களில் ஒன்றாக மாறியுள்ளது.


தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினி நடிக்கும் கூலி படத்தை இயக்கி வருகிறார் லோகேஷ் கனகராஜ். இப்படத்தை முடித்துவிட்டு கார்த்தி நடிப்பில் 2019 ஆம் ஆண்டு வெளியான கைதி படத்தை தொடர்ந்து கைதி  2 படத்தை  இயக்குவதாக தகவல்கள் வெளியாகி இருந்தது.


இந்த நிலையில் பாலிவுட்டில் கால் பதிக்கப் போகிறார் இயக்குனர் யோகேஷ் கனகராஜ் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன. பாலிவுட்டின் உச்ச நடிகரான அமீர்கானை வைத்து பான் இந்தியா படத்தை இயக்க பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இது ரசிகர்களிடையே பெரும் ஆர்வத்தைத் தூண்டியுள்ளது. இந்த படத்தை புஷ்பா படத்தின் தயாரிப்பாளரான மைதிலி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது


ஏற்கனவே தமிழ்நாட்டு இயக்குநரான ஏ.ஆர்.முருகதாஸ், ஆமிர்கானை வைத்து பல வருடங்களுக்கு முன்பு கஜினி படத்தை இயக்கி அதை பிளாக்பஸ்டர் ஹிட்டாக்கிக் கொடுத்தார். அந்த வரிசையில் லோகேஷ் கனகராஜும் இணைவாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்


சமீபத்திய செய்திகள்

news

செயல் தலைவர் பதவி அடுத்து யாருக்கு.. டாக்டர் ராமதாஸின் சாய்ஸ் இவரா?.. பரபரக்கும் பாமக!

news

பாமக வின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து அன்புமணி நீக்கம் : டாக்டர் ராமதாஸ் அதிரடி

news

125 சீட்.. திமுக கூட்டணியில் குண்டைப் போட்ட காங்கிரஸ் தலைவர்.. திமுக.,விலும் ஆரம்பமானது கலகம்

news

சட்டசபைத் தேர்தல் வேலையில் மும்முரம் காட்டும் பிரதான கட்சிகள்.. குழப்பத்தில் கூட்டணி கட்சிகள்

news

இது வேட்டையாட வரும் சிங்கம் அல்ல.. வேடிக்கை காட்ட வரும் சிங்கம்: விஜய்யை விமர்சித்த சீமான்!

news

13 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அலர்ட்!

news

ஆடு, மாடு மாநாட்டை தொடர்ந்து மலைகள், கடல்கள், ஆறுகளுக்கு அடுத்தடுத்து மாநாடு நடைபெறும் : சீமான்!

news

தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி மொழி ஏற்பு!

news

திருமண உதவித் திட்டம்: 5,460 தங்க நாணயங்கள் கொள்முதலுக்கு டெண்டர் அறிவிப்பு

அதிகம் பார்க்கும் செய்திகள்