டெல்லி: குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில் பீகார் முதல்வர் நிதீஷ் குமாரை நிறுத்த பாஜக திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
குடியரசுத் துணைத் தலைவராக இருந்து வந்த ஜெகதீப் தன்கர், உடல் நலத்தைக் காரணம் காட்டி பதவி விலகி விட்டார். அவரது ராஜினாமாவை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு ஏற்றுக் கொண்டார். இதனால் விரைவில் குடியரசுத் துணைத் தலைவர் பதவிக்கான தேர்தல் நடைபெறவுள்ளது.
இந்தப் பதவிக்கு யார் அடுத்து வரப் போகிறார் என்பது பெரும் எதிர்பார்ப்பைக் கிளப்பியுள்ளது. பாஜக தரப்பில் சர்பிரைஸ் ஒன்றை வைத்திருப்பதாக கூறப்படுகிறது. அதாவது பீகார் முதல்வர் நிதிஷ் குமார் அடுத்த குடியரசுத் துணைத் தலைவராக வாய்ப்புள்ளதாக பல செய்திகள் தெரிவிக்கின்றன.
நிதிஷ் குமார் தலைமையில் NDA கூட்டணி பீகார் சட்டமன்றத் தேர்தலை சந்திக்க தயாராகி வரும் நிலையில், இது சாத்தியமில்லாததாக தோன்றலாம். ஆனால், நிதிஷ் குமார் தனது முதல்வர் பதவியை விட்டுக்கொடுத்து எதிர்கால தலைமுறைக்கு வழிவிட தயாராகி வருவதாக அந்த மாநிலத் தலைவர் உபேந்திர குஷ்வாஹா கூறியிருப்பது இந்த யூகங்களுக்கு மேலும் வலு சேர்க்கிறது.
டெல்லி துணைநிலை கவர்னர் வி.கே. சக்சேனா மற்றும் ஜம்மு காஷ்மீர் துணைநிலை கவர்னர் மனோஜ் சின்ஹா ஆகியோரின் பெயர்களும் இந்த பதவிக்கு பரிசீலிக்கப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சக்சேனாவுக்கு "பெரிய பதவி" வழங்கப்படலாம் என்றும், சின்ஹாவின் பதவிக்காலம் ஆகஸ்ட் மாதத்தில் முடிவடைவதால் அவர் இந்த பதவிக்கு சரியான தேர்வாக இருப்பார் என்றும் சொல்லப்படுகிறது.
ராஜ்யசபா துணைத் தலைவர் ஹரிவன்ஷ் நாராயண் சிங், ஆளும் அரசாங்கத்தால் நம்பப்படும் ஐக்கிய ஜனதா தளம் கட்சி எம்பி ஆவார். இவரது பெயரும் பரிசீலனையில் உள்ளது. ஆனால் நிதீஷ் குமார் பெயர்தான் பலமாக அடிபடுகிறது. நிதீஷ் குமாரை டெல்லிக்கு வரழைத்து குடியரசுத் துணைத் தலைவராக்கி விட்டு, பீகார் முதல்வர் பதவியை பாஜக எடுத்துக் கொள்ள முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. இந்த டீலுக்கு நிதீஷ் குமார் ஒப்புக் கொள்வாரா என்று தெரியவில்லை.
மறுபக்கம், தேர்தலை நடத்துவதற்கான பணிகளை தேர்தல் ஆணையம் தொடங்கியுள்ளது. இதற்காக, நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் உறுப்பினர்களைக் கொண்ட electoral college-ஐ அமைக்கும் பணியும் தொடங்கியுள்ளது. குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலுக்கான தேர்தல் அதிகாரிகளையும் தேர்தல் ஆணையம் நியமித்து வருகிறது. தேவையான அனைத்து ஏற்பாடுகளும் முடிந்தவுடன், தேர்தலுக்கான அட்டவணை விரைவில் அறிவிக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
மக்களே உஷார்... இன்று 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு... சென்னை வானிலைம மையம்!
குடியரசுத் துணைத் தலைவர் பதவி.. பீகார் முதல்வர் நிதீஷ் குமாரை நிறுத்த பாஜக திட்டம்?
மருத்துவமனையில் இருந்தபடியே.. கலெக்டர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை!
TNPSC குரூப் 4 தமிழ்ப் பாடத்துக்கான தேர்வை ரத்து செய்து மறுதேர்வு நடத்த வேண்டும்: அண்ணாமலை
தயாரிப்பு நிறுவனம் தொடர்ந்த வழக்கு: நடிகர் ரவி மோகனுக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவு!
Indoor and Outdoor plant.. மணி பிளான்ட்:.. மணி மணியா வளர்க்கலாம்.. அழகா இருக்கும்!
தமிழக மக்கள் உரிமை மீட்புப் பயணம்: உரிமை மீட்க... தலைமுறை காக்க... இலட்சினையை வெளியிட்டது பாமக!
தமிழகம் முழுவதும் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது... மதுரை ஆதினத்தை துன்புறுத்தக்கூடாது: அண்ணாமலை
வானில் ஒரு அதிசயம்.. ஆனால் வரும் ஆகஸ்ட் மாதம் இல்லையாம்.. 2027ல்தான் நடக்கப் போகுதாம்!
{{comments.comment}}