"எவ்வளவு உயரத்தில் பறந்தாலும்.. கீழே வந்தாகணும்".. அப்படீன்னா ரத்னாவுக்கு வேலை போயிருச்சா?

Nov 02, 2023,10:41 AM IST

சென்னை: லியோ சக்சஸ் மீட்டில் இயக்குநர் ரத்னகுமார் பேசிய பேச்சை விஜய் ரசிகர்கள் கொண்டாடி வைரலாக்கியுள்ளனர். அதேசமயம், இந்தப் பேச்சு ரஜினிகாந்த் ரசிகர்களை கடுப்பாக்கியுள்ளது.


இயக்குநர் லோகேஷ் கனகராஜின் நெருங்கிய நண்பர்தான் ரத்னகுமார். இவரும் இயக்குநர்தான். மேயாத மான், ஆடை ஆகிய படங்களை இயக்கியுள்ளார். மிக மிகத் தீவிரமான விஜய் வெறியரும் கூட. அஜீத்தை கடுமையாக சாடி, திட்டி, விமர்சித்து முன்புடி வீட்டெல்லாம் போட்டு அதகளப்படுத்தியவர்.


இந்த நிலையில் சமீப காலமாக லோகேஷ் கனகராஜுடன் இணைந்து பயணித்து வருகிறார் ரத்னகுமார். மாஸ்டர் படத்தில் இருவரும் இணைந்து பணியாற்றினர். அதேபோல விக்ரம், இப்போது லியோ என இந்தப் பயணம் தொடர்கிறது.




இந்த நிலையில் நேற்று லியோ சக்சஸ் மீட் சென்னையில் நடந்தது. இதில் ரத்னகுமாரின் பேச்சு பெரும் பரபரப்பாக வைரலாகி விட்டது. இந்த நிகழ்ச்சியில் ரத்னகுமார் தான் சினிமாவுக்கு வர விஜய்தான் காரணம் என்றும் விஜய் படங்களால் ஈர்க்கப்பட்டே தான் சினிமாவுக்கு வந்ததாகவும் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார். விஜய்யவை வெகுவாக புகழ்ந்த அவர் பேசிய அடுத்த பேச்சுதான் பரபரப்பானது.


"பறவைகள் எவ்வளவு உயரத்தில் பறந்தாலும்.. பசிச்சா.. கீழே வந்துதான் ஆகணும்"


இதுதான் ரத்னகுமார் பேசிய பேச்சு.. இந்தப் பேச்சின்போது ஸ்டேடியமே அதிரும் படி கைத்தட்டல் மிரட்டியது.. விடாமல் கை தட்டிக் குவித்து விட்டனர் ரசிகர்கள்.  விஜய் ரசிகர்கள் இப்படி உற்சாகமடைய காரணம் உள்ளது.


ஜெயிலர் பட ஆடியோ வெளியீட்டின்போது ரஜினிகாந்த் பேசும்போது காக்கா கழுகு கதை ஒன்றைச் சொன்னார். அப்போது கழுகுக்கு இணையாக காக்கா பறக்க நினைக்கும்.. ஆனால் முடியாது.. ஆனால் கழுகு உயர உயரப் பறந்து கொண்டே போகும் என்றார்.  அவர் காக்கா என்று சொன்னது விஜய்யைத்தான் என்று பரபரப்பு கிளம்பியது. கடுமையான வாதப் பிரதிவாதங்கள் சமூக வலைதளங்களில் வெடித்தன.


இதை மனதில் வைத்துத்தான் ரத்னகுமார் இப்படி பதிலடியாக பேசினார் என்று கூறப்படுகிறது. இதைத்தான் விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.


சரி இது இருக்கட்டும்.. இப்படிப் பேசிய ரத்னகுமாரை, ரஜினியை வைத்து அடுத்த படத்தை இயக்கப் போகும் லோகேஷ் கனகராஜ், தனது டீமில் வைத்திருப்பாரா.. ரத்னகுமார், ரஜினியுடன் இணைந்து அந்தப் படத்தில் பணியாற்றுவாரா.. தெரியவில்லை.. பொறுத்திருந்து பார்ப்போம்.

சமீபத்திய செய்திகள்

news

எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!

news

கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!

news

இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?

news

உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?

news

விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி

news

கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்

news

Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்

news

ருத்ர தாண்டவம் (சிறுகதை)

news

உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!

அதிகம் பார்க்கும் செய்திகள்