சென்னை : தமிழக சட்டசபை தேர்தல் முடிவுகளில் தற்போதைய நிலவரப்படி அதிக அளவிலான தொகுதிகளில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை வகித்து வருகிறது. இதனால் அந்த கட்சி தனிப்பெரும்பான்மையை பெறுமா என்ற கேள்வியும், ஆர்வமும் அனைவருக்கும் எழுந்துள்ளது.
118 தொகுதிகளில் வெற்றி பெற்றால் தவெகவால் தனித்து ஆட்சியமைக்க முடியும். அப்படி நடந்தால் விஜய் புதிய வரலாற்றைப் படைப்பார்.
தமிழக சட்டசபை தேர்தலில் பதிவான ஓட்டுக்கள் இன்று எண்ணப்பட்டு வருகிறது. இதில் முதல் சுற்றில் இருந்தே தவெக முன்னிலையில் இருந்து வருகிறது. தவெக 102 தொகுதிகளிலும், அதிமுக 69 தொகுதிகளிலும், திமுக 57 தொகுதிகளிலும் முன்னிலையில் இருந்து வருகின்றன.

சென்னையில் உள்ள 16 தொகுதிகளிலும் தவெக முன்னிலையில் இருந்து வருகிறது. தமிழக முழுவதும் தேர்தலில் போட்டியிட்ட 34 அமைச்சர்களில், முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 31 அமைச்சர்கள் பின்னடைவை சந்தித்து வருகின்றனர்.
தவெக தனிப் பெரும்பான்மை பெறுவதற்கு இன்னும் 16 இடங்கள் மட்டுமே தேவை. 120 இடங்களுக்கு மேல் தவெக முன்னிலை வகிக்கும் பட்சத்தில் தனிப்பெரும் கட்சியாக தமிழகத்தில் ஆட்சியை பிடிக்கவும் அதிக வாய்ப்புள்ளது. அப்படி தவெக அதிக இடங்களை கைப்பற்றும் பட்சத்தில் அது தமிழக அரசியல் வரலாற்றகிலேயே புதிய சாதனையாக அமையும்.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை திரையுலகிலிருந்து நடிகராக அரசியலில் புகுந்து ஆட்சியமைத்த சாதனைக்குரியவர் எம்ஜிஆர் மட்டுமே. எம்ஜிஆர், சினிமாவில் இருந்து அரசியலுக்கு வந்து தனிக்கட்சி துவங்கிய முதல் தேர்தலில் 33 சதவீதம் ஓட்டுக்களை பெற்றார். தற்போது வரை இது யாரும் முறியடிக்க முடியாத புதிய சாதனையாக இருந்து வருகிறது.
ஒருவேளை எம்ஜிஆர்., பெற்ற ஓட்டு சதவீதத்தை விட விஜய் கூடுதலாக பெற்றால் அது புதிய வரலாற்று சாதனையாக கருதப்படும். கடந்த 52 ஆண்டுகளாக தமிழகத்தில் எவரும் முறியடிக்க முடியாத சாதனையை விஜய் முறியடிக்க வாய்ப்புள்ளது.
பெரும்பாலான ஸ்டார் வேட்பாளர்களை பின்னுக்கு தள்ளி, தவெக வேட்பாளர்கள் முன்னிலையில் இருந்து வருவதும், திமுக.,வின் கோட்டை என கருதப்பட்ட சென்னையின் 16 தொகுதிகளிலும் தவெக.,வின் கை ஓங்கி இருப்பதும் விஜய்யின் மிகப் பெரிய பலத்தை காட்டுவதாக உள்ளது.
120 தொகுதிகளுக்கு மேல் தவெக கைப்பற்றும் பட்சத்தில் தனிப் பெரும் கட்சியாக தமிழகத்தில் ஆட்சி அமைக்க வாய்ப்புள்ளது. ஒருவேளை 100 க்கும் குறைவான இடங்களை தவெக பெரும்பட்சத்தில், தமிழகத்தின் அடுத்த முதல்வர் யார் என தீர்மானிக்கும் மிகப் பெரிய பொறுப்பு தவெக வசம் வருவதற்கும் அதிக வாய்ப்புள்ளது.
அதாவது விஜய் ஒன்று கிங் ஆவார்.. அல்லது கிங் மேக்கர் ஆவார்.. எப்படிப் பார்த்தாலும் விஜய் சாதித்து விட்டார் என்றுதான் சொல்ல வேண்டும்.
தமிழகத்தில் தீவிரமடையும் வடகிழக்கு பருவமழை: 27 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!
"பொய் வழக்கு...தில்லுமுல்லு அரசியல்!" – மன்னன் கைதுக்கு எடப்பாடி பழனிசாமி, செல்லூர் ராஜு கண்டனம்
கொளத்தூர் தவெக எம்எல்ஏ வி.எஸ்.பாபு டிஸ்சார்ஜா? அமைச்சர் அருண்ராஜ் விளக்கம்
கோவை பெரியார் அறிவுலகத்தில் ஊழல்? எழுத்தாளர் பெருமாள் முருகன் குற்றச்சாட்டிற்கு அமைச்சர் விளக்கம்
அதிமுக பிரமுகர் மன்னன் கைது: தவெக எம்எல்ஏ-விடம் ரூ.30 கோடி பேரம் பேசிய விவகாரத்தில் நடவடிக்கை!
தீபாவளி பண்டிகை 2026 : தமிழகம் முழுவதும் இன்று ரேஷன் கடைகள் இயங்கும் - அரசு அறிவிப்பு!
Deepavali Special Buses: தீபாவளி பண்டிகை - தமிழ்நாடு முழுவதும் 15,659 சிறப்பு பேருந்துகள் இயக்கம்
தமிழகத்தில் 5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்: டிசம்பர் 20-க்குள் நடத்த தேர்தல் ஆணையம் திட்டம்!
ரூ.100-க்கு 10 காய்கறிகள்! தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கூட்டுறவுத்துறை அதிரடி அறிவிப்பு!
{{comments.comment}}