சென்னை : தேர்தல் ஆணையம் தமிழ்நாட்டில் அமல்படுத்தவுள்ள தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தத்திற்கு (SIR ) எதிராக அனைத்து கட்சிகளையும் ஒன்று சேர்த்து எதிர்ப்பை தெரிவிக்க வேண்டும் என்று திமுக திட்டமிட்டுள்ளது. இதற்காக நவம்பர் 2ம் தேதி தமிழகத்தில் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டியுள்ளது. இதில் கலந்து கொள்ளுமாறு தவெக தலைவர் விஜய்க்கும் திமுக அழைப்பு அனுப்பியுள்ளது.
அனைத்து கட்சிகளுக்கும் முறையாக அழைப்பு அனுப்பிய திமுக, விஜய்யின் தவெக., கட்சியை அழைக்க திமுக தலைமை நிலைய செயலாளர் பூச்சி முருகனை நேரில் அனுப்பி வைத்துள்ளது. ஆனால் இந்த அழைப்பை ஏற்று, கட்சி தலைவர் என்ற முறையில் விஜய் இந்த கூட்டத்திற்கு செல்வாரா என்பது தான் அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது. ஆனால் உண்மையில் இந்த அனைத்துக் கட்சிக் கூட்டம் என்பது ஒரு புறம் பாஜக எதிர்ப்பு கூட்டமாக திமுக நடத்தினாலும், மற்றொரு புறம் இது தவெக.,விற்கு வைக்கும் அரசியல் செக் என்று தான் சொல்ல வேண்டும்.
இந்த அனைத்து கட்சி கூட்டத்திற்கு தவெக சென்றாலும் அது அரசியல் ஆக்கப்பட்டு, நெருக்கடியை ஏற்படுத்தும். செல்லாவிட்டாலும் நெருக்கடியான நிலையை தான் தவெக.,விற்கு ஏற்படுத்தும். பாஜக.,வை கொள்கை எதிரி என விஜய் ஏற்கனவே பலமுறை கூறி விட்டார். அதனால் அவர்களுடன் கூட்டணி என்பது கிடையவே கிடையாது என கரூர் சம்பவத்திற்கு முன்பு வரை பேசிய அனைத்து பிரச்சார கூட்டங்களிலும் கூறி உள்ளார் விஜய். அப்படி பார்த்தால், பாஜக.,விற்கு எதிராக திமுக கூட்டி உள்ள அனைத்துக் கட்சி கூட்டத்தில் தவெக பங்கேற்கலாம்.

ஆனால் கரூர் சம்பவ விவகாரத்தில் திமுக உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் தவெக தான் இந்த பொறுப்பு, விஜய் தான் குற்றவாளி என குற்றம்சாட்டிக் கொண்டிருந்த போது, தவெக.,வை அந்த இக்கட்டான சிக்கலில் இருந்து வெளியே வருவதற்கு வழி ஏற்படுத்திக் கொடுக்கும் வகையில், அரசின் கவனக்குறைவு தான் காரணம் என மற்றொரு கோணத்தில் இந்த விவகாரத்தை கையாண்டு, தவெக.,விற்கு ஆதரவாக பேசியது பாஜக மற்றும் அதிமுக கட்சிகள் தான்.
இதை மனதில் வைத்து, ஒருவேளை அனைத்து கட்சி கூட்டத்திற்கு செல்லாமல் விஜய் புறக்கணித்தால், பாஜக உடன் கூட்டணி வைக்க விஜய் முடிவு செய்து விட்டார். பாஜக.,வின் பி டீம் தான் விஜய். அதனால் தான் பாஜக.,விற்கு எதிராக செயல்பட மனமில்லாமல் அனைத்துக் கட்சி கூட்டத்தை தவெக புறக்கணித்தது என்ற விமர்சனங்களை திமுக உள்ளிட்ட கட்சிகள் முன் வைக்கும். ஒருவேளை அனைத்துக் கட்சி கூட்டத்தில் விஜய் கலந்து கொண்டால், ஆதவ் அர்ஜூனா மூலமாக திமுக.,வுடன் தவெக ரகசிய உறவு வைத்துள்ளதாக சொல்லப்படும் விமர்சனங்கள் மீண்டும் முன் வைக்கப்படும்.
இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ள விஜய்யே நேரடியாக வந்தால் முதல்வரை அவர் முதல் முறையாக நேரில் சந்திக்கும் வகையில் அது அமையும். அதேசமயம், செய்தியாளர்களையும் சந்திக்க வேண்டிய கட்டாயம் விஜய்க்கு நேரலாம். அவர்களை சமாளிப்பது ஒரு சவாலானது என்பதால் விஜய் நேரடியாக பங்கேற்க மாட்டார் என்றும் அவருக்குப் பதில் புஸ்ஸி ஆனந்த் அல்லது ஆதவ் அர்ஜூனா போன்றோரை அனுப்பி வைக்கலாம் என்று கருதப்படுகிறது.
அனைத்து கட்சி கூட்டத்தில் கலந்து கொண்டாலும், கலந்து கொள்ள விட்டாலும் தவெக மீது அரசியல் விமர்சனங்கள் முன் வைக்கப்படும் என்பதால் இந்த சவாலை விஜய் எப்படி கையாள போகிறார்? என்பதை பார்க்க தமிழக அரசியல் களம் ஆர்வமாக கவனித்துக் கொண்டிருக்கிறது.
இந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பங்கேற்க அதிமுக, பாஜக தவிர்த்து 64 கட்சிகளின் தலைவர்களுக்கு திமுக அழைப்பு விடுத்துள்ளது. பாமகவைப் பொறுத்தவரை டாக்டர் ராமதாஸுக்கே அழைப்பு போயுள்ளது. டாக்டர் அன்புமணிக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை.
தண்ணீர் திறந்தது கர்நாடகா : காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
"தனிமைப்பட்டு நிற்கிறார் CM" – காவிரி விவகாரத்தில் மு.க.ஸ்டாலின் கடும் விமர்சனம்
கொளத்தூர் தொகுதியில் தேர்தல் முறைகேடு? - திமுக என்.ஆர்.இளங்கோ பரபரப்பு பேட்டி!
ஒற்றுமையின்றி செயல்படுபவர்களுக்கு கட்சியில் இடமில்லை : ராகுல் காந்தி எச்சரிக்கை
கபிணி அணையிலிருந்து தண்ணீர் திறப்பு.. போராட்டக்காரர்களுக்கு டி.கே.சிவக்குமார் எச்சரிக்கை
வணிக பயன்பாட்டு எல்பிஜி சிலிண்டர் விலை ரூ.200 குறைவு: ஓட்டல் உரிமையாளர்கள் நிம்மதி!
வேளாண் பட்ஜெட் 2026: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வைத்து சிறப்பு பூஜை செய்த அமைச்சர் வினோத்!
கட்டணச்சலுகை இல்லாவிட்டாலும் UDID அட்டை இருந்தால் சிறப்பு பெட்டிகளில் பயணிக்கலாம்!
தோப்பு வெங்கடாசலம் கட்சிப் பொறுப்பிலிருந்து விடுவிப்பு: திமுக தலைமை அதிரடி அறிவிப்பு!
{{comments.comment}}