சென்னை: முதல்வரின் அமெரிக்க பயணம் காரணமாக, விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்படவுள்ளதாக ஒரு தகவல் கிளம்பியுள்ளது.
உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி என்ற பேச்சு இப்போது நேற்று அல்ல, பல மாதங்களாகவே அவ்வப்போது கிளம்பி வந்து கொண்டுதான் உள்ளது. சேலத்தில் கடந்த ஜனவரி 21ல் திமுக இளைஞரணி மாநில மாநாடு நடந்தபோது உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்படும் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. அப்போது, துணை முதல்வர் பதவி என்பது வதந்தி என்று முதல்வர் ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டார். இதுகுறித்து உதயநிதி ஸ்டாலின் கூறும்போது, முதல்வருக்கு துணையாக எல்லா அமைச்சர்களும் இருக்கப்போகிறோம் என்றும், எனக்கு துணை முதல்வர் பதவி வழங்குவது குறித்து முதல்வர் தான் முடிவு செய்வார் என்றும் உதயநிதி தெரிவித்தார். இந்த நிலையில் தற்போது மீண்டும் இந்த வதந்தி கிளம்பியுள்ளது.
ஜூலை 10ம் தேதி நடக்கும் விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் முடிந்தவுடன் இம்மாத இறுதியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அமெரிக்கா செல்ல உள்ளார். முதல்வரின் அமெரிக்க பயணம் குறித்து சட்டமன்றத்தில் டிஆர்பி ராஜா ஏற்கனவே கூறியிருந்தார். அப்போது அவர் கூறுகையில்,"தமிழ்நாடு முதல்வர் முக ஸ்டாலின் அடுத்தமாதம் அமெரிக்கா செல்ல இருக்கிறார். தமிழகத்திற்கு முதலீடுகளை ஈர்க்கும் வகையில் உலக முதலீட்டாளர்களை சந்திக்க அவர் அமெரிக்கா செல்கிறார்" என்று கூறியிருந்தார்.
பல சந்தர்பங்களில் உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்படும் என்று வதந்திகள் கிளம்பி வந்த நிலையில் தற்போது மீண்டும் இது வெடித்துக் கிளம்பியுள்ளது. முதல்வர் ஸ்டாலின் அமெரிக்காவில் அதிக நாட்கள் தங்க திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அப்படி இருந்தால், முதல்வர் பொறுப்பை யாரிடமாவது ஒப்படைத்து விட்டுச் செல்ல வேண்டியிருக்கும். எனவே அதற்கு வசதியாக, உதயநிதி ஸ்டாலினை துணை முதல்வராக்க திட்டமிடடப்படுவதாக இப்போதைய செய்திகள் கூறுகின்றன.
இந்த முறையும் இது வதந்தியாக இருக்குமா அல்லது நிஜமாகவே உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராகப் போகிறாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
செயல் தலைவர் பதவி அடுத்து யாருக்கு.. டாக்டர் ராமதாஸின் சாய்ஸ் இவரா?.. பரபரக்கும் பாமக!
பாமக வின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து அன்புமணி நீக்கம் : டாக்டர் ராமதாஸ் அதிரடி
125 சீட்.. திமுக கூட்டணியில் குண்டைப் போட்ட காங்கிரஸ் தலைவர்.. திமுக.,விலும் ஆரம்பமானது கலகம்
சட்டசபைத் தேர்தல் வேலையில் மும்முரம் காட்டும் பிரதான கட்சிகள்.. குழப்பத்தில் கூட்டணி கட்சிகள்
இது வேட்டையாட வரும் சிங்கம் அல்ல.. வேடிக்கை காட்ட வரும் சிங்கம்: விஜய்யை விமர்சித்த சீமான்!
13 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அலர்ட்!
ஆடு, மாடு மாநாட்டை தொடர்ந்து மலைகள், கடல்கள், ஆறுகளுக்கு அடுத்தடுத்து மாநாடு நடைபெறும் : சீமான்!
தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி மொழி ஏற்பு!
திருமண உதவித் திட்டம்: 5,460 தங்க நாணயங்கள் கொள்முதலுக்கு டெண்டர் அறிவிப்பு
{{comments.comment}}