ஹைதராபாத்: நடிகையும், அரசியல்வாதியுமான விஜயசாந்தி பாஜகவிலிருந்து விலகிய நிலையில் இன்று காங்கிரஸ் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார்.
தெலுங்கு, தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் நூற்றுக்கணக்கான படங்களில் நடித்துள்ளார் விஜயசாந்தி. தெலுங்கில் லேடி சூப்பர்ஸ்டார் என்று அழைக்கப்பட்டார். மெகா ஸ்டார் சிரஞ்சீவிக்கு இணையான புகழைப் பெற்றவரும் கூட. அதேபோல தமிழிலும் ரஜினியுடன் மன்னன், கமல்ஹாசனுடன் இந்திரன் சந்திரன், விஜயகாந்த் உள்ளிட்டோருடனும் நடித்துள்ளார்.
தெலுங்குத் திரைப்படங்களில் அதிரடி வேடங்களில் நடித்ததற்காக 'லேடி அமிதாப்' என்று பிரபலமானவர் விஜயசாந்தி. முதன்முதலில் 1997லில் விஜயசாந்தி பாஜகவில் இணைந்தார். பின்னர் 2005ல் அந்த கட்சியில் இருந்து விலகி தனிக்கட்சி (தளி தெலங்கானா) தொடங்கினார். பின்னர் சந்திரசேகரராவின் டிஆர்எஸ் கட்சியில் இணைந்த அவர் 2009ல் தேர்தலில் வெற்றி பெற்று எம்.பியானார். அதன் பிறகு அதிலிருந்தும் விலகி 2014ல் காங்கிரஸ் கட்சியில் இணைந்த அவர் 2020ல் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி மீண்டும் பாஜகவில் இணைந்தார்.

இப்படி நிலையில்லாமல் மாறி மாறி கட்சி தாவி வந்த விஜயசாந்தி இப்போது மீண்டும் பாஜகவை விட்டு விலகியுள்ளார். அவரது அரசியல் நிலைப்பாடுகள் தொடர்ச்சியாக மாறிக் கொண்டே இருப்பதால்தான் அவரது அரசியல் ஸ்திரமும் நிலையில்லாமல் இருக்கிறது. தெலங்கானா சட்டசபைத் தேர்தலில் போட்டியிட அவர் ஆர்வமாக இருந்தார். ஆனால் பாஜக சீட் தரவில்லை. இதனால் அதிருப்தியடைந்தே அவர் பாஜகவை விட்டு வெளியே வந்து விட்டார்.
பாஜகவை விட்டு வெளியேறிய அவர் இன்று காங்கிரஸுக்கே மீண்டும் திரும்பினார். ஹைதராபாத்தில் உள்ள தெலங்கானா மாநில காங்கிரஸ் தலைமையகத்தில் கட்சித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே முன்னிலையில் தன்னை காங்கிரஸில் இணைத்துக் கொண்டார் விஜயசாந்தி.
முன்பு காங்கிரஸ் கட்சியின் பிரச்சார பீரங்கியாக திகழ்ந்தவர் விஜயசாந்தி. தற்போதைய தெலங்கானா தேர்தலிலும் அவர் காங்கிரஸுக்காக தீவிரப் பிரசாரம் செய்வார் என்று தெரிகிறது. அதேசமயம் வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் அவர் மேடக் தொகுதியில் போட்டியிடக் கூடும் என்று தெரிகிறது. அதுதொடர்பான வாக்குறுதி அவருக்கு அளிக்கப்பட்ட பிறகே அவர் காங்கிரஸுக்குத் தாவி வந்தார் என்று கூறப்படுகிறது.
2026 சட்டசபைத் தேர்தலில் புதுச்சேரி மாநிலத்திலும் தவெக கொடி பறக்கும்...விஜய் அதிரடி பேச்சு
நாகப்பட்டினத்தில் இன்று மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்!
சென்னையில் நாளை கூடுகிறது.. அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு.. முக்கிய முடிவு எடுக்கப்படுமா?
எனது கையெழுத்தை போலியாக போட்டுள்ளனர்: அன்புமணி மீது ராமதாஸ் பரபரப்பு குற்றச்சாட்டு!
TVK Vijay.. விஜய்யின் தமிழ்நாடு பிரச்சார பேச்சு Vs புதுச்சேரி பேச்சு... எது பெஸ்ட்?
லக்னோவில் நடந்த ஸ்கவுட் நிகழ்ச்சியில்.. ஜொலித்த தமிழ்நாடு மாணவி!
Most Searched Athlete: அதிரடி காட்டிய இந்திய வீரர் அபிஷேக் ஷர்மா.. பாகிஸ்தானில் காட்டிய எழுச்சி
எடப்பாடியார் அதிரடி.. கேஏ செங்கோட்டையனின் அண்ணன் மகனை இழுத்த அதிமுக!
முதல் மாதத்தில் உடையவனே தஞ்சம்.. பத்தாம் மாதத்தில் அழகான குழந்தை.. தாய்மையின் பேரழகு!
{{comments.comment}}