நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் கார் கதவை சற்றும் யோசிக்காமல், பட்டென்று திறந்து விட்டார் ஒரு பெண் டாக்டர். அப்போது அந்த வழியாக வந்த டூவீலர் காரர் கார் கதவு மீது மோதி கீழே விழுந்து அடிபட்டு பரிதாபமாக உயிரிழந்து போனார்.
நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர் டாக்டர் சித்ரா. இவர் கடந்த ஆகஸ்ட் 31ம் தேதி காரை தெருவின் ஒரமாக நிறுத்தி விட்டு, அக்கம் பக்கம் உள்ள எதையும் கவனிக்காமல் சட்டென்று கார் கதவை திறந்துள்ளார். கொஞ்சம் கூட யோசனையே இல்லாமல் கதவைத் திறந்து விட்டார் டாக்டர் சித்ரா.

அப்போது பின்னால் பைக் வருவதை கவனிக்காமல் கார் கதவை திறந்ததால், எதிர் பாராத விதமாகபைக்கை ஓட்டி வந்த சரவணன் கார் கதவு மீது மோதி தூக்கி வீசப்பட்டார். சம்பவத்தை பார்த்து அதிர்ந்து போன அருகில் இருந்தவர்கள் விரைந்து வந்து சரவணனை மீட்டனர். ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு அவர் உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். சரவணனை பரிசோதித்த டாக்டர்கள் அவர் இறந்துவிட்டார் என்று கூறினர்.
இச்சம்பவம் குறித்த தகவல் தெரிந்த போலீசார் விரைந்து வந்து சம்பவம் குறித்து அக்கம் பக்கத்தினரிடம் விசாரித்தனர். சிசிடிவி பூட்டேஜைப் பார்த்ததில், சித்ராவின் அலட்சியமும், அஜாக்கிரதையுமே இந்த விபத்துக்குக் காரணம் என்று தெரிய வந்தது. இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இச்சம்பவத்தில் பதிவான சிசி டிவி பூட்டேஜ் தற்பொழுது சமூக வளைதலங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. பெண் டாக்டரின் அஜாக்கிரதையால் ஒரு அப்பாவி உயிர் பறி போனது வேதனையையும், அதிர்ச்சியையும் அளித்துள்ளது.
தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக எதிர்க்கட்சிகள் பிரம்மாண்ட பேரணி
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் 2026: வாக்குப்பதிவு நிறுத்தம்...போலீசுடன் திமுக வாக்குவாதம்!
தென்தமிழ் தலையங்கம்: டேட்டிங் ஆப் முதல் குழந்தைப் பேறு வரை.. சிங்கப்பூருக்கு வந்த சோதனை!
உன்னை என் மனதுக்குள் வைப்பேன் அன்பே!
சிந்தனைச் சிதறல்.. உணவையும் உறவையும் உள்ளன்போடு பகிர்வதில் நிறைவு காண்போம்!
நெருப்பும் நீரும்!
ஸ்வீட் மச்சான்.. அட நம்ம ஸ்மித் மச்சார்தாங்க.. இந்தியன் டா.. காலரைத் தூக்கி விட்டுக்கலாம்!
மனம் கொத்திப் புடவை .. ஒரு நிமிடக் கதை (28)
Assembly By Election: நாளை மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் 2026: அனைத்து ஏற்பாடுகளும் தயார்
{{comments.comment}}