டெல்லி: ஒருவருக்கு பொழுதுபோக்கு என்பது வித்தியாசமாகவும், தொழிலாகவும், மகிழ்ச்சியாரமாகவும், திருப்திகரமாகவும், அமையும். ஆனால் இங்கு ஒரு பெண்ணின் வினோதமான பொழுதுபோக்கு பலரையும் வியக்க வைத்துள்ளது..!
அடடே ஆச்சரியக்குறி என்று சொல்லிக் கொண்டே படிக்க ஆரம்பியுங்கள். பொழுதுபோக்கு என்பது மனதுக்கு ஓய்வையும், மகிழ்ச்சியையும் தருகிறது. அதாவது மனித வாழ்க்கையில் வேலைப்பளு அதிகமாக இருக்கும் காலத்தில், பொழுதுபோக்கு என்பது ஒரு தேவையாக மாறியுள்ளது. இது ஒருவரின் மன அழுத்தத்தை குறைத்து, சுறுசுறுப்புடன் வாழ்க்கையை முன்னேற்ற உதவுகிறது. அதேபோல் பொழுதுபோக்கு மூலம் மகிழ்ச்சியும் அதிகரிக்கிறது.
பொழுதுபோக்கு பலவகையாக இருக்கலாம். அவை ஒருவரின் தனிப்பட்ட விருப்பங்கள் மற்றும் திறமைகளுக்கு ஏற்ப இருக்கும். அதன்படி, தனிநபர்கள் தங்களின் பொழுதுகளைக் கழிக்க சிலர் பாடல்கள் கேட்பதை விரும்புவார்கள், சிலர் புத்தகங்களைப் வாசிப்பார்கள், கவிதை எழுதுதுவார்கள், சிலரோ படம் பார்த்து ரசிப்பார்கள். அதேபோல் கைவினை பொருட்கள் செய்தல், தோட்டத் தொழில், விளையாட்டு, வீடுகளை தூய்மை செய்தல், அலங்கரித்தல், நடனம் ஆடுவது, யோகா போன்றவற்றில் ஈடுபடுவார்கள்.

அதைப்போல் ஒவ்வொருவருக்கும் அவர்களின் விருப்பத்திற்கு ஏற்றவாறு பொழுதுபோக்கு வழிமுறைகள் உள்ளன. இவை நமது கற்பனை திறனை வளர்க்கும், நம் உள்ளத்தின் அமைதியை பாதுகாக்கும் ஒரு நல்ல வழியாக அமைகின்றன. மேலும், சில பொழுதுபோக்குகள், தொழிலாகவும் மாற்றிக் கொள்கின்றனர். எடுத்துக்காட்டாக, புகைப்படக்கலை, இசை, எழுத்து போன்றவற்றின் மூலம் ஒருவர் ஆர்வத்தைத் தொழிலாக மாற்றி கொள்கின்றனர்.
எல்லா நாளும் வேலை, கடமை, ஓட்டம் என்று யாராலும் இருக்க முடியாது. சில நேரங்களில் நம்மை நாமே சந்தோஷப்படுத்திக்கொள்ள வேண்டியது அவசியம். அத்தகைய சந்தோஷம் தரும் எளிய வழியே பொழுதுபோக்கு. இப்படி நம் உலகில் தனிப்பட்ட விருப்பங்கள் மற்றும் திறமைகளை பல்வேறு பொழுது போக்குகளில் ஈடுபடுத்தி தனது பாடைப்பாற்றலில் பலரும் சிறந்து விளங்கி வருகின்றனர்.
ஆனால் இங்கு ஒரு பெண் வினோத பொழுதுபோக்கு ஒன்றை ரசித்து செய்து வருகிறாராம். என்னம்மா இதெல்லாம் ஒரு பொழுது போக்கா என சொல்லும் அளவிற்கு அந்த பெண்ணின் பொழுதுபோக்கு உள்ளது. அப்படி என்ன அந்தப் பெண்ணின் விசித்திரமான பொழுதுபோக்கு அப்படித்தானே கேக்குறீங்க. வாங்க தெரிந்து கொள்வோம்.
அதாவது கொசுக்களை பிடித்து அடித்துக் கொன்று, அதை ஒரு டைரி போல ரெடி செய்து அதில் ஒட்டி வைத்து அந்த சம்பவம் குறித்த சிறு குறிப்பையும் சேர்த்து நோட் செய்து வருகிறாராம் இந்தப் பெண். கேட்டதுமே ஜெர்க் ஆகத் தோணுதுல்ல.. தொடர்ந்து படிங்க பாஸ்!
இன்ஸ்டாகிராமில் பிரபலமான அகன்ஷா ராவத் என்ற பெண்ணின் தங்கைதான் இவர். கொசுக்களை கொலை செய்து அதை சேமித்து வைக்கும் வினோதம் பழக்கம் கொண்டவர். இறந்த கொசுக்களை பட்டியலிட்டு அதற்கு பெயர் சூட்டி இறந்த நேரம் நாள் எல்லாவற்றையும் குறித்து வருகிறார் இந்தப் பெண். அகன்ஷா ராவத் தனது தங்கையின் இந்த பழக்கத்தை வீடியோவாக பதிவிட்டு வெளியிட்டுள்ளார்.
இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. இதெல்லாம் ஒரு பொழுதுபோக்காம்மா.. அடிச்சோமா.. தூக்கிப் போட்டு போனோமான்னு இல்லாம, ஏம்மா இந்த வேண்டாத வேலை என்று பலரும் செல்லமாக அலுத்துக் கொள்கிறார்களாம்!
பகுதிநேர ஆசிரியர்கள் சிறப்பு மதிப்பெண் அடிப்படையில் பணி நிரந்தரம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
குற்றவாளிகளை காப்பாற்ற மட்டுமே திமுக ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறது: அண்ணாமலை குற்றச்சாட்டு!
8% ஆரம்பித்து 0.17 சதவீதத்தில் வந்து நிற்கும் தேமுதிக.. எதிர்பார்க்கும் சீட்டுகள் எத்தனை?
எனக்கு போட்டியாக இந்தியாவில் எந்த கட்சியும் இல்லை..பூமிக்காக அரசியல் பேசும் ஒரே தலைவன் நான்: சீமான்
அமெரிக்காவை உலுக்கும் பெர்ன் பனிப்புயல்:. ஸ்தம்பித்த வாழ்க்கை.. காலியான சூப்பர் மார்க்கெட்டுகள்!
மக்களே தயாராக இருங்க... நாளை 9 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு..வானிலை மையம் அறிவிப்பு!
டி20 உலகக் கோப்பைத் தொடரிலிருந்து வங்கதேசம் அதிரடி நீக்கம்?.. ஸ்காட்லாந்துக்கு வாய்ப்பு!
ஓபிஎஸ் - அமைச்சர் சேகர்பாபு திடீர் சந்திப்பு: தமிழக அரசியலில் புதிய திருப்பம்?
என்னாது கேரள சட்டசபைத் தேர்தலில் நான் போட்டியிடப் போறேனா?.. பாவனா பதில்!
{{comments.comment}}