"உங்களை சஸ்பெண்ட் பண்றோம்".. இந்திய மல்யுத்த சம்மேளனத்துக்கு "ஷாக்"!

Aug 24, 2023,06:46 PM IST
டெல்லி: இந்திய மல்யுத்த சம்மேளனம் இன்னும் தேர்தலே நடத்தாமல் இருப்பதால் அதை சஸ்பெண்ட் செய்வதாக சர்வதேச மல்யுத்த சம்மேளனம் அறிவித்துள்ளது.

ஏற்கனவே இந்திய மல்யுத்த சம்மேளனத் தலைவரும், பாஜக எம்பியுமான பிரிஜ்பூஷன் சரண் மீது பாலியல் மோசடிப் புகார்களை சுமத்தி இந்திய மல்யுத்த வீராங்கனைகள், வீரர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் சர்ச்சை நிலவி வருகிறது. இந்த அக்கப்போரில் தற்போது தேர்தலை மறந்து போனதால், சஸ்பெண்ட் நடவடிக்கையை இந்திய மல்யுத்த சங்கம் எதிர்கொண்டுள்ளது.



ஜூன் மாதமே  தேர்தல் நடத்தப்பட்டிருக்க  வேண்டும்.  ஆனால் தொடர் போராட்டங்கள் காரணமாக தேர்தலை நடத்த முடியாமல் போய் விட்டது. இதனால் சர்வதேச போட்டிகளில் இந்தியாவின் சார்பாக சம்மேளனத்திலிருந்து யாரையும் அனுப்ப முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

செப்டம்பர் 16ம்தேதி தொடங்கும் ஒலிம்பிக் தகுதிச் சுற்று உலக சாம்பியன்ஷிப் போட்டிகளில் நியூட்ரல் வீரர்களாகவே இந்தியாவின் சார்பில் பங்கேற்போர் கலந்து கொள்ள முடியும்.

பிரிஜ்பூஷன் சரண் மீதான புகார்களைத் தொடர்ந்து அவர் பதவி விலகினார். அதன் பின்னர் இந்திய ஒலிம்பிக் சங்கம், பூபேந்தர் சிங் பஜ்வா தலைமையில் ஒரு இடைக்கால நிர்வாகக் குழுவை அமைத்தது. இந்தக் குழு 45 நாட்களில் தேர்தலை நடத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டிருந்தது. ஆனால் தேர்தல் நடக்கவில்லை.

தேர்தலை நடத்த வேண்டும். இல்லாவிட்டால் சஸ்பெண்ட் நடவடிக்கையை எதிர்கொள்ள நேரிடும் என்று சர்வதேச மல்யுத்த சங்கம் எச்சரிக்கை விடுத்திருந்தது. ஆனால் அதை இந்திய மல்யுத்த சம்மேளனம் கண்டு கொள்ளாமல் விட்டு விட்டது. இதனால் தற்போது சஸ்பெண்ட் நடவடிக்கையை சர்வதேச சங்கம் எடுத்து விட்டது.

இந்த ஆண்டு 3வது முறையாக இந்திய மல்யுத்த சம்மேளனம் சஸ்பெண்ட் நடவடிக்கையை எதிர்கொள்கிறது. முதலில் ஜனவரி மாதம் சஸ்பெண்ட் செய்யப்பட்டது. பின்னர் மே மாதம் சஸ்பெண்ட் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது 3வது முறையாக சஸ்பெண்ட் ஆகியுள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

இந்தியாவின் 15வது துணை ஜனாதிபதியாக சி.பி.ராதாகிருஷ்ணன் தேர்வு.. 452 வாக்குகள் பெற்று வெற்றி

news

தவெக தலைவர் விஜய் சுற்றுப் பயணம்.. சனி, ஞாயிற்றை தேர்வு செய்ய இதுதான் காரணமா?

news

மக்களே அலர்ட்டா இருந்துக்கோங்க..இன்றும், நாளையும் 12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்

news

செங்கோட்டையன்-அமித்ஷா சந்திப்பு.. எடப்பாடி பழனிச்சாமிக்கு வைக்கப்படும் "செக்" ஆ?

news

மன அமைதிக்காக ஹரித்வாருக்குக் கிளம்பி.. டெல்லியில் அமித்ஷாவை சந்தித்த செங்கோட்டையன்!

news

Heart Attack: ராத்திரி நேரத்தில்தான் மாரடைப்பு அதிகமாக வருமா.. டாக்டர்கள் சொல்வது என்ன?

news

பீகார் சட்டசபைத் தேர்தல் களம்.. ஓவைசி வைக்கப் போகும் செக்.. இந்த முறை யாருக்கு?

news

நேபாளத்தில் வெடித்த பெரும் கலவரம்.. பின்வாங்கிய பிரதமர்.. நீங்கிய சமூக வலைதள தடை!

news

ஜிஎஸ்டி வரிக் குறைப்பால்.. அதிரடியாக விலையைக் குறைத்த ஆடி கார் நிறுவனம்.. 10% குறைந்தது

அதிகம் பார்க்கும் செய்திகள்