சின்ன சின்ன பூனை.. செல்லமான பூனை.. கருப்பு வெள்ளை கலரில் அசத்தும் கலக்கலான பூனை!

Aug 08, 2024,04:32 PM IST
புதுடெல்லி: இன்று ஆகஸ்ட் 8ஆம் தேதி சர்வதேச பூனைகள் தினம் அனுசரிக்கப்படுகிறது. பூனையைப் பிடிக்காதவங்க யாருமே இருக்க முடியாது. அந்த அளவுக்கு க்யூட்டான விலங்குதான் இந்த பூனைகள்.

பூனைகளைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும் அவற்றை பாதுகாப்பதன் அவசியத்தை பிரதிபலிக்கவும்  சர்வதேச பூனைகள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. பூனைகளின் இனத்தை பாதுகாக்கும் விதமாக சர்வதேச பூனைகள் தினம் கொண்டாடப்படுவதாக 2002 ஆம் ஆண்டு விலங்குகள் நல வாரியத்தால் அறிவிக்கப்பட்டது. அதன்படி ஒவ்வொரு வருடமும் ஆகஸ்ட் எட்டாம் தேதி சர்வதேச பூனைகள் தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது.



இந்தியாவில் பூனைகளுக்கும் மனிதர்களுக்கும் இடையே நீண்ட காலமாக ஒரு உறவு உண்டு. அது என்னவென்றால்  பூனைகளின் பொசு பொசு பொசு  உடல் அமைப்பு, அதன் கண்கள், சிறுத்தையைப் போன்ற முகத்தோற்றம் என இது அனைத்தையும் கவர்ந்தவர்கள் சிலர். ஒரு சிலரோ நாம் வெளியே கிளம்பும் போது பூனை இடதுபுறமாக சென்றால் அது நல்ல சகுனமென்றும், வலது புறமாக சென்றால் அது கெட்ட சகுனம் என்றும் மக்களிடத்தில் நீங்கா நம்பிக்கைகள் இருந்து வருகின்றன. குறிப்பாக பூனை குறுக்கே வந்தால் சகுன தடையாகவும் எண்ணுகின்றனர்.

இப்படியாக பூனைகளுக்கும் மனிதர்களுக்கும் மற்றும் இடையே பழங்காலம் முதல் தற்போது வரை பிரிக்க முடியாத உறவு நீடித்தது வருகிறது. ஆனாலும் பூனைகளைப் போல அருமையான விலங்கு வேற எதுவுமே கிடையாதுங்க. இதனால்தான் பலர் பூனைகளை செல்ல பிராணிகளாகவே வளர்த்தும் வருகின்றனர்.

சரி அதை விடுங்க.. பூனைகள் பற்றிய சில சுவாரஸ்ய தகவல்கள் உங்களுக்காக!





உலகம் முழுவதும் 40 வகையான பூனை இனங்கள் உள்ளன. அதில் 8 வகைகள் மட்டுமே இந்தியாவில் இருப்பதாக கூறப்படுகிறது.

பூனைகள் 100க்கும் மேற்பட்ட வித்தியாசமான சத்தங்களை எழுப்பக் கூடிய திறன் கொண்டது. பூனைகளால் கடல் நீரை குடிக்க முடியும்.

 பூனைகள் இருட்டில் நன்றாக பார்க்கும் திறன் கொண்டவை. அதனால் அதன் கண்கள்பார்வை மிகவும் கூர்மையாக இருக்கும். 

பூனையும் மிகவும் சுத்தமான விலங்கு. தன் நேரத்தின் பெரும் பகுதியை உடலின் மேற்பகுதியை  நாக்கால் நக்கி சுத்தம் செய்வதில் செலவிடுமாம். 

ஒரு பூனை தமது வாழ்நாளில் 150 குட்டிகள் வரை போடும். 

மனிதர்களின் கைரேகை இருப்பது போலவே பூனைகளுக்கு மூக்கு ரேகைகள் இருக்குமாம்.

 மனிதனுக்கு பார்க்கத் தேவைப்படும் ஒளியில் ஆறில் ஒரு பங்கு ஒளியிலேயே பார்க்கக் கூடிய திறன் கொண்டது.

பூனைகளின் உள்ளங்கால்கள் வழியாக வியர்வை வெளியேற்றும்.

 32 மாடிகள் உயரத்திலிருந்து விழுந்தாலும் பூனைகள் உயிர்பிழைத்து விடும்.

 பூனைகளின் மோப்ப சக்தி மனிதர்களை விட 14 மடங்கு அதிகம்.

சமீபத்திய செய்திகள்

news

Aliya Riaz: யார் இந்த அலியா ரியாஸ்.. ஏன் இப்படி திடீரென வைரலாகியுள்ளார்?

news

Singapen Helpline Number: பெண்களே.. 1091 என்ற எண்ணை அழைத்தால்.. சிங்கப்பெண் படை விரைந்து வரும்!

news

FIFA WorldCup 2026: உலகக் கோப்பை கால்பந்து.. அமெரிக்காவில் அசத்தும் ஈரான்.. டிரம்பை கலாய்த்து மீம்ஸ்

news

பிரிட்டன் அரசியல்: 10 டவுனிங் ஸ்ட்ரீட்டின் சுழலும் கதவு.. கீர் ஸ்டார்மரும் பதவி விலகல்!

news

கையடக்கத்தில் பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்.. அசத்தலாக சாதிக்கும் நெல்லை ஆசிரியர் பொன் ரேகா!

news

Chettinadu Recipes: செட்டிநாடு அடுப்படியில் அதிரடி ஸ்வீட்.. மணக்க மணக்க கோதுமை அல்வா!

news

Monday Motivation: வாழ்வித்த வாழ்த்துகள் (சிறுகதை)

news

Tamil Short Story: நிறைவேறாத கல்லூரிக்கனவு!

news

தில்லைக்கூத்தன் கோயில்.. சிதம்பரம் தில்லை நடராஜர் திருக்கோவில் சிறப்புகள்!

அதிகம் பார்க்கும் செய்திகள்