பாகு, அஜர்பைஜான்: உலகக் கோப்பை செஸ் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியின் டை பிரேக்கரின் முதல் சுற்றை வென்று, 2வது சுற்றை டிரா செய்ததால், நார்வே வீரர் மாக்னஸ் கார்ல்சன் சாம்பியன் ஆனார். உலகின் முதல் நிலை வீரரான அவர் உலக சாம்பியன் பட்டம் வெல்வது இதுவே முதல் முறையாகும்.
18 வயதேயான இந்தியாவின் பிரக்ஞானந்தா, கார்ல்சனுக்கு கடும் போட்டியைக் கொடுத்தார். இறுதிப் போட்டியின் இரு சுற்றுக்களையும் டிராவில் முடித்தார். இதனால் போட்டி டை பிரேக்கருக்குப் போனது. டை பிரேக்கரில் இரு சுற்றுக்களிலும் கார்ல்சன் அதிரடியாக ஆடியதால் சாம்பியன் பட்டம் அவருக்குப் போய் விட்டது.
இந்தப் போட்டியில் பிரக்ஞானந்தா வென்றிருந்தால் இரண்டு சாதனைகளை அவர் படைத்திருக்க முடியும். மிகவும் இளம் வயது சாம்பியன் மற்றும் அவருக்கு இது முதல் பட்டம் என்ற சாதனையே அவை. அவை தற்போது கைநழுவி போய் விட்டன. ஆனால் செஸ் உலகை தனது திறமையான ஆட்டத்தால் திரும்பிப் பார்க்க வைத்து விட்டார் பிரக்ஞானந்தா.
செஸ் தரவரிசையில் 2 மற்றும் 3வது நிலையில் உள்ள வீரர்களை வீழ்த்தித்தான் அவர் இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். அங்கும் கூட முதல் நிலை வீரரான கார்ல்சனை ரெகுலர் சுற்றுக்களில் திணறடித்து விட்டார். டை பிரேக்கரின் முதல் சுற்றிலும் கூட கார்ல்சன் போராடித்தான் வெல்ல முடிந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
கதை அல்ல நிஜம்.. "ரோஷினியின் டைரி" .. அவள் எழுதிய வரிகள் நிஜமானது!
Sunday Special: சுவையான மக்ரூனி பிரியாணி.. சாப்ட்டுப் பாருங்க.. கிறங்கிப் போய்ருவீங்க!
கதை கேளு... கதை கேளு!
Malliga Selvaraj: அன்னை மடி!
தென்தமிழ் தலையங்கம்: திரைக்கலைத் தாத்தா சிங்கீதம் சீனிவாச ராவ்!
Asiad 2026 Cricket: தங்க மகளிரைப் பின்பற்றி.. பாகிஸ்தானை வீழ்த்தி தங்கம் வென்ற இந்திய ஆடவர்!
தவெக வேட்பாளர் குறித்து உருவக் கேலி: திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு முதல்வர் விஜய் கண்டனம்!
தாராபுரம் தவெக வேட்பாளரை உருவகேலி செய்த விவகாரம் : மு.க.ஸ்டாலின் மீது புகார்
மதுராந்தகம் இடைத்தேர்தல்: செங்கல்பட்டு மாவட்டம் முழுவதும் 4 நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடல்
{{comments.comment}}