- தி. மீரா
உலக ரோஸ் தினம் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 22 அன்று கடைபிடிக்கப்படுகிறது. இது புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தைரியம், நம்பிக்கை மற்றும் மகிழ்ச்சியை ஊட்டும் நோக்கில் கொண்டாடப்படும் சிறப்பு நாளாகும்.
இந்த நாள் மெலிண்டா ரோஸ் (Melinda Rose) என்ற 12 வயது கனடாச் சிறுமியின் நினைவாக உருவாக்கப்பட்டது. அவர் அஸ்கின் டியூமர் (Askin’s Tumour) எனும் அரிதான வகை இரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தார்.
மருத்துவர்கள் அவருக்குச் சில வாரங்களே வாழ்நாள் எனக் கூறிய நிலையில், அவர் 6 மாதங்கள் உயிருடன் இருந்தார்; அந்தக் காலத்தில் புற்றுநோயாளிகளுக்கு நம்பிக்கையூட்டும் விதமாகச் செயல்பட்டார்.
இந்த நாளைத்தான் தற்போது உலக ரோஜா தினமாக கொண்டாடுகிறார்கள். இதன் முக்கிய நோக்கம் என்னவென்றால், புற்றுநோயாளிகளுக்கு மன வலிமையும் நம்பிக்கையும் ஊட்டுதல், புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வைப் பரப்புதல், நோயாளிகள், அவர்களின் குடும்பத்தினர் மற்றும் பராமரிப்பாளர்களுக்கு அன்பையும் ஆதரவையும் வெளிப்படுத்துதல் ஆகியவையாகும்.

இந்த நாளில் உலகம் முழுவதும் பல்வேறு மருத்துவமனைகள், தொண்டு நிறுவனங்கள் மற்றும் சமூக அமைப்புகள்
புற்றுநோயாளிகளுக்கு ரோஜாப் பூக்களை வழங்கி மகிழ்விக்கின்றனர். சிறப்பு நிகழ்ச்சிகள், விழிப்புணர்வுப் பேச்சுகள் மற்றும் ஊக்கமளிக்கும் செயல்பாடுகளை ஏற்பாடு செய்கின்றனர். புற்றுநோய் தடுப்பு மற்றும் முன்கூட்டியே கண்டறிதல் பற்றிய தகவல்களைப் பரப்புகின்றனர்.
அப்புறம் இன்னொரு விஷயம்.. பிப்ரவரி 7 அன்று கொண்டாடப்படும் ரோஜா தினம் (Rose Day) வேறு; அது காதலர் வாரத்தின் முதல் நாளாகக் கொண்டாடப்படுகிறது. அது காதலர்களுக்கானது, அன்புக்கானது. ஆனால் செப்டம்பர் 22 அன்று வரும் உலக ரோஸ் தினம் புற்றுநோயாளிகளுக்கான சிறப்பு நாளாகும், இது பரிவுக்கானது.
உங்களுக்குத் தெரிந்த புற்றுநோய் போராளிகளுக்கு ரோஜா வழங்கி அவர்களுக்கு உங்களது அன்பையும், பரிவையும் தெரிவியுங்கள்.
World Rose Day: உலக ரோஸ் தினம் ஏன் இன்னிக்கு கொண்டாடுறோம் தெரியுமா?
போலி நம்பர் பிளேட் காரில் பயணித்தாரா திருமாவளவன்? - இணையத்தில் வைரலாகும் சர்ச்சைச் வீடியோ
Swarnalakshmi Writes: செப்டம்பர் 22.. இன்னிக்கு என்ன நாள் தெரியுமா..?
Inclusive Education in My Classroom: Every Child Matters
Tuesday Special Recipe: நெல்லிக்காய் பச்சடி!
பிரே பண்ணிட்டு சாப்பிடுவோமா?.. நீட்டிக்கப்பட்ட காலை உணவுத் திட்டம்.. தொடங்கி வைத்தார் முதல்வர் விஜய்
ஜெம் கிரானைட்ஸ் வீரமணி வழக்கில் லஞ்சம் வாங்கிய அதிகாரிகள் யார்? விசாரிக்க சிறப்பு குழு அமைப்பு!
"நிர்வாக அறிவு இருக்கிறதா?" – தவெக அரசை கடுமையாக விமர்சித்து மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை!
குற்றவாளிகள் ஒருவரையும் விடக்கூடாது: ஜெம் கிரானைட்ஸ் வீரமணி விவகாரத்தில் முதல்வர் அதிரடி உத்தரவு
{{comments.comment}}