- தமிழ்மாமணி எழுத்தாளர் இரா. கலைச்செல்வி
அந்தப் பழைய வீட்டின் கம்பீரமான கதவு பலவருடங்களாகப் பூட்டப்பட்டிருந்தது. சுவரில் தொங்கும் பழைய மின்சாரப் பெட்டியும், பின்னிக் கிடக்கும் கம்பிகளும் அந்த வீடு பல வருடங்களாக திறக்கப்படவில்லை என்பதை சுட்டிக்காட்டியது. அந்த வீட்டின் பாழடைந்த தோற்றம் வீட்டின் மர்மத்தை அதிகரித்தன.
ஊர் மக்கள் அதைத் ‘தீய சக்தி உள்ள வீடு’ என்று ஒதுக்கித் தள்ளினர். ஆனால், ஒரு நாய் அந்த வீட்டின் வாசலில் தினமும் காவல் காத்தது. அது எப்போதும் அமைதியாகக் கதவையே பார்த்துக் கொண்டிருக்கும்.
நகரத்தில் படித்துவிட்டுத் திரும்பிய இளம் ஓவியன் கவின், அந்த வீட்டின் பழமையான அமைதியால் ஈர்க்கப்பட்டான். ஒரு மாலை வேளையில், தன் தூரிகையால் அந்தப் பூட்டிய கம்பீரமான கதவை, வாசலில் காவல் காக்கும் அந்த நாயுடன் அப்படியே வண்ண ஓவியமாக வரையத் தொடங்கினான்.
அவன் ஓவியத்தை முடித்து விட்டு, அந்த வீட்டின் பூட்டினை லேசாக தொட்டான். தொட்ட நிமிடத்தில்... திடீரென அந்த வீட்டின் பூட்டு "கிளிக்" என்ற சத்தத்துடன் திறந்தது.
மெல்லத் திறந்த கதவின் பின்னால் ஒரு பழங்காலப் பெட்டியும், அதனுள் ஒளிந்திருந்த அபூர்வமான கலை ஓவியங்களும் கவின் கண்களில் பட்டது . கிடைப்பதற்கு அறிய பழங்கால ஓவியங்கள் அவை.

கவினின் வருகைக்காகவே அந்த ஓவியங்கள் காத்திருந்தாதோ ..? அந்த அபூர்வ ஓவியங்களைத்தான் அந்த நாய் காவல் காத்து வந்ததோ என்னவோ.!
ஆனால் அஞ்சிய ஊர் மக்களுக்கு அந்த வீடு மர்மமாகவே தெரிந்தது. கவினுக்கோ, அது ஒரு திறக்கப்படாத கலைக் கருவூலமாக தோன்றியது!
அது குறித்து அருகிலுள்ள காவல் நிலையத்திற்கு தெரியப்படுத்தினான் கவின். காவல் அதிகாரி கவினை வெகுவாகப் பாராட்டி, அதில் ஒரு சிறந்த ஓவியத்தை கவினுக்கு பரிசளித்தார்.
மக்களின் தேவை இல்லாத பயத்தால் அந்த கலைக் கருவூல ஓவியங்கள் வெகு நாட்களாக யாராலும் பார்க்கப்படாமல் இருந்துள்ளது என்பதை நினைத்து ,அவ்வூர் மக்கள் வெட்கி தலை குனிந்தனர் .
(சிவகங்கையைச் சேர்ந்த எழுத்தாளர் இரா. கலைச்செல்வி, தமிழ்நாடு அரசின் தலைமை செயலகத்தில் பல்வேறு துறைகளில் பணியாற்றி ஓய்வு பெற்ற உயர் அரசு அதிகாரி ஆவார் . அவரின் கணவர் மத்திய அரசில் பணியாற்றி ஓய்வு பெற்ற தலைமை விஞ்ஞானி. எழுத்தின் மீதும் , வாசிப்பின் மீதும், தீராக் காதல் கொண்ட அவர், நீண்ட காலமாக எழுதி வருகிறார். அகில இந்திய வானொலியில் இவரது பல கதைகள் ஒளிபரப்பாகி உள்ளன. கதைகளைத் தவிர, கவிதைகளும், ஆய்வு கட்டுரைகளையும் அதிகம் எழுதி வரும் இவர் உளவியலில் முதுகலை பட்டமும் பெற்றவர். சாதனைச் செல்வி, சாதனைப் பெண், தமிழ் மாமணி, தங்கத்தாரகை, சேவா ரத்னா , கவிஞாயிறு, கவியருவி, கவிச்செம்மல், உழைப்பாளர் திலகம், மகாகவி, செம்மொழி கலைஞர் விருது, கலைரத்னா போன்ற 30 க்கும் மேற்பட்ட விருதுகளையும் அவர் பெற்றுள்ளார்)
கருவறைக் கல்லறை!
மனநலன் காப்போம்.. மனம் செம்மையானால்.. மருந்தே தேவையில்லைங்க!
காத்திருந்த கருவூலம்
தேவையில்லை...!
தெய்வமாய்த் தெரியும் தேவதை போல் ஒரு ஆருயிர் நீ எனக்கு!
மாமன் காரன் பெத்த புள்ளே மனசைத் தொறந்து பேசும் புள்ளே!
சென்னையில் இன்று முதல்வர் விஜய்யை சந்திக்கிறார் ராகுல் காந்தி
மன்னித்து அருளக் கூடியவர் அன்னூர் மன்னீஸ்வரர்!
நீங்கா நினைவுகள்
{{comments.comment}}