சென்னை: வேளச்சேரி, செம்மஞ்சேரி என இருப்பதைப் போல் சேரி எனக் கூறினேன், அதில் தவறு இல்லை என நடிகை குஷ்பு கொடுத்துள்ள விளக்கத்துக்கு திமுகவைச் சேர்ந்த எழுத்தாளர் மனுஷ்யபுத்திரன் பதிலடியாக ஒரு கேள்வி கேட்டுள்ளார்.
நடிகர் மன்சூர் அலிகான திரிஷா குறித்து அவதூறாக பேசியது தொடர்பாக தனது சமூக வலைதளத்தில் கருத்து பதிவிட்டிருந்தார் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினரும் நடிகையுமான குஷ்பு. அப்போது சிலரை போல என்னால் சேரி மொழியில் பேச இயலாது என பதிவிட்டிருந்தது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில், சென்னை விமான நிலையத்தில் நேற்று குஷ்பு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், நான் அந்த மாதிரி பேசவே இல்ல, நான் ஏன் வருத்தம் தெரிவிக்க வேண்டும். கவர்மெண்ட் ரெக்கார்டுலயே சேரி என்ற வார்த்தை இருக்கிறது. வேளச்சேரி இருக்கு.. அதுக்கு என்னங்க அர்த்தம்.. செம்மஞ்சேரினு இருக்கு.. அதுக்கு என்ன அர்த்தம் என்னங்க கேக்குறேன்.. நீங்க எல்லாரும் தமிழ் தெரிஞ்சவங்க தானே.. சேரிக்கு என்ன அர்த்தம்? நீங்க எனக்கு விளக்கம் கொடுங்க.. அந்த வார்த்தையால தானே பிரச்சனை வருது.. எனக்கு தமிழ் தெரியாதுன்னு வச்சுக்கோங்க.. நீங்க எனக்கு விளக்கம் சொல்லுங்க என செய்தியாளர்களை நோக்கி கேட்டார்.
ஏற்கனவே குஷ்பு சேரி என்ற வார்தைக்கு பிரெஞ்ச் மொழியில் அன்பு என்று பொருள்படும் என்றும் வித்தியாசமான விளக்கத்தை அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது. உண்மையில் குஷ்பு, சேரி என்று சொன்னதற்காக யாரும் அவரை விமர்சிக்கவில்லை.. "சேரியில் பேசும் பாஷைக்கெல்லாம்" பதிலளிக்க முடியாது என்பது அந்த சேரி வாழ் மக்களின் மொழியைக் கொச்சைப்படுத்துவது போல உள்ளது என்பதுதான் குற்றச்சாட்டு.. அந்தக் குற்றச்சாட்டு குஷ்புவுக்குப் புரிந்ததா இல்லையா என்று தெரியவில்லை.
இந்த நிலையில் குஷ்புவின் தமிழ் ஆராய்ச்சியை நக்கலடித்துள்ளார் எழுத்தாளர் மனுஷ்யபுத்திரன். இதுதொடர்பாக அவர் தனது முகநூலில் போட்ட பதிவில், ஒருவரை குண்டு என்று பாடிஷேமிங் பண்ணினால், வத்தலகுண்டு மாதிரிதான் இதுவும் என்று சொல்லலாமா? மொழி ஆராய்ச்சியில் மகுடேஸ்வரனுக்கே டஃப் கொடுக்கிறாங்க என்று கூறியுள்ளார் மனுஷ்யபுத்திரன்.
Cauvery River water Issue: காவிரி நீர் பிரச்சனை எப்போது துவங்கியது? .. இதற்கு என்ன தான் தீர்வு?
முதல்வர் விஜய் கர்நாடகா வர வேண்டாம் : கர்நாடக முதல்வர் டி.கே.சிவக்குமார்
டாஸ்மாக் ஊழல் வழக்கு: செந்தில் பாலாஜிக்கு முன்ஜாமீன்...கைது செய்யவும் தடை
மின்சார கட்டணம் உயர்வு உண்மையா? - அமைச்சர் நிர்மல்குமார் விளக்கம்!
வருமான வரி தாக்கல் செய்ய இன்று கடைசி நாள்...தவறவிட்டால் அபராதம்
காவல் நிலையத்தில் ஆஜராவதில் இருந்து 6 நாட்கள் விலக்கு கோரி செந்தில் பாலாஜி மனு
2027 ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட்: 3 நாடுகளின் 12 மைதானங்களில் போட்டிகள் நடைபெறும்
ஜெர்மனியில் கடும் வெப்ப அலை: பலியானோர் எண்ணிக்கை 10,000 ஆக உயர்வு!
மேகதாது அணை விவகாரம்: தலைமைச் செயலகத்தில் முதல்வர் விஜய் தீவிர ஆலோசனை!
{{comments.comment}}