சென்னை: தமிழ்ப் படைப்புலகம் அடுத்தடுத்து இரு பெரும் இழப்புகளை சந்தித்துள்ளது. நேற்று நடிகர் டெல்லி கணேஷ் காலமான துயரத்தில் மக்கள் இருக்கும்போது இன்று இன்னொரு துயரமாக எழுத்தாளர் இந்திரா செளந்தரராஜனை எழுத்துலகம் பறி கொடுத்துள்ளது.
பழம்பெரும் நடிகர் டெல்லி கணேஷ் நேற்று இரவு காலமானார். தூக்கத்திலேயே அவரது உயிர் பிரிந்துள்ளது. இன்று நடிக்கப் போக வேண்டும் என்று சொல்லி விட்டுத்தான், வீட்டில் உள்ளோரிடம் வழக்கம் போல சகஜமாக பேசியிருந்து விட்டுத்தான் தூங்கப் போனார் டெல்லி கணேஷ். ஆனால் தூக்கத்திலேயே அவர் மீளாத் துயலில் ஆழ்ந்துள்ளார்.
இந்த சோகத்தின் வலி இன்னும் போகாத நிலையில் இன்று எழுத்தாளர் இந்திரா செளந்தரராஜன் மதுரையில் மறைந்துள்ளார். அவரது மறைவு எழுத்துலகை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. தமிழின் ஆகச் சிறந்த எழுத்தாளர்களில் ஒருவர் இந்திரா செளந்தரராஜன். மிகவும் எளிமையான மனிதர், நல்ல மனித நேயர், அனைவரிடமும் அன்பாக பழகக் கூடியவர். அவரது மறைவு எழுத்தாளர்களையும், அவரது வாசகர்களையும் மட்டுமல்லாமல் தமிழ் கூறும் நல்லுலகையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
இருவரது மறைவுக்கும் பிரபல எழுத்தாளர் ராஜேஷ் குமார் இரங்கல் தெரிவித்துள்ளார். நடிகர் டெல்லி கணேஷ் குறித்த எழுத்தாளர் ராஜேஷ் குமார் எழுதியுள்ள இரங்கல் குறிப்பு:
ஒரே ஒரு முறை
டெல்லி கணேஷ் அவர்களை 10 வருடங்களுக்கு முன்பு
பொள்ளாச்சியில் நடந்த
சண்டமாருதம் படப்பிடிப்பில்
சந்தித்தேன்.
நான் அங்கே இருந்த 12 மணி நேரத்தில்
படப்பிடிப்பு இல்லாத நேரங்களில்
என்னோடு மட்டுமே
பேசிக் கொண்டு இருந்தார்.
சிரிக்க சிரிக்க
பேசினார்.
எழுத்தாளர்களின் மேல்
அவருக்கு அலாதிப் பிரியம்
பார்த்தது ஒரு முறைதான்.
ஆனால்
பல வருடங்கள்
பழகியது போன்ற உணர்வு.
அவருடைய ஆன்மா
இறைவனின்
நிழலில்
நிம்மதி பெறட்டும்.
பிரபல தமிழ் எழுத்தாளர் இந்திரா செளந்தரராஜன் .. மதுரையில் காலமானார்
எழுத்தாளர் இந்திரா செளந்தரராஜன் குறித்து ராஜேஷ் குமார் எழுதிய இரங்கல்:
இடி
மேல்
இடி..
அருமை நண்பர்
எழுத்தாளர்
இந்திரா செளந்தரராஜன்
மறைவு.
தாங்கிக் கொள்ள
இதயம்
மறுக்கிறது.
கண்ணீருடன்
நெஞ்சார்ந்த
ஆழ்ந்த
அஞ்சலி.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
ராணிப்பேட்டை, திருவள்ளூர் மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்..9 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்: வானிலை மையம்
சட்டமன்றத் தேர்தலில் இ.யூ.முஸ்லிம் லீகிற்கு 5 தொகுதிகளை கேட்க உள்ளோம்: கே.எம். காதர் மொகிதீன்
டாடாவின் புதிய சாதனை: ஒரே மாதத்தில் ஒரு லட்சம் கார்கள் விற்பனை!
இலங்கையில் பரபரப்பு.. கட்சி அலுவலகத்தில் வைத்து.. எதிர்க்கட்சி பிரமுகர் சுடப்பட்டார்!
தொடர் மழையால் காவிரி டெல்டா விவசாயிகளுக்கு இரட்டை இடி:ஆய்வு செய்து இழப்பீடு வழங்க வேண்டும்:அன்புமணி
அதிரடியாக குறைந்தது தங்கம் விலை... இன்று மட்டும் சவரனுக்கு ரூ.2400 குறைவு!
அரபிக் கடல்.. வங்கக் கடல்.. 2 தாழ்வுகள்.. லேட்டஸ்ட் நிலவரம் என்ன.. மழை எப்படி இருக்கும்?
சிறப்புக் குழந்தைகளின் செல்லம்.. வசந்தா செல்வகுமாரி.. வியக்க வைக்கும் பெண்மணி!
மகாலட்சுமி முகம் கொண்ட மங்கலா.. மீண்டும் மங்கலம் (5)
{{comments.comment}}