- க.யாஸ்மின் சிராஜூதீன்
வானமகள் இருள் சூழ
இளந்தென்றல் தோழியாக
கருமேகம் அள்ளி வந்த நீரையெல்லாம் தெளித்து விட்டு
மேகம் எங்கோ மறைந்து போனது
வானமகள் நின்று ரசிக்கிறாள் .....
குடிசை வீட்டின் கூரையிலே
சொட்டு சொட்டாய் சொட்டுகிறாய் ...
மாடி வீட்டு வாசலிலே குழாய் வழியே ஓடி விளையாடுகிறாய்.....
குழந்தைகள் கூடி விளையாடுவது போலவே தெரு நிறைய ஓடுகிறாய்...

உனக்கு இசையை
தந்துதான் இடியும் மின்னலும் ஆடுது....
மின்னலின் அழகை காணவே கண்களும் பயந்து மூடுதே ...
இடியின் இசையை கேட்கவே
காதுகள் கூர்மையானதே
மனது பயந்து நடுங்குதே ....
மின்னல் அழகி உந்தன் காவலன் வீரன்தான்.....
வானில் வித்தை காட்டுது வண்ணவானவில் சிங்காரமாய்
வண்ணங்களை எங்கே எடுத்தாயோ
எங்கள்கண்களை கவரத்தான்....
திருவிழா போல வந்து சென்றாயே
மக்கள் மனதில் மகிழ்ச்சி தந்தாயே....
உலக உயிர்களைக் காத்தாயே....
மழை எங்கள் உயிர் நீரே..
சேமித்து வைப்போம் நிலத்தடி நீராய்
என்றும் பூமித்தாயின் மடியிலே
ஊற்றாய் நீயும் வாழவே ...
கோடி நன்றி சொல்லவே கோடிக்
கணக்கான கைகள் குவியுதே.....
வானமகள் நீர்தெளிக்க பூமித்தாயும்
மகிழ்ந்ததே....
(கவிஞர் க.யாஸ்மின் சிராஜூதீன் இடைநிலை ஆசிரியர். ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி கரடிக்குப்பம். மேல்மலையனூர் ஒன்றியம் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர். 26.09.2014 முதல் இடைநிலை ஆசிரியராக 11 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். 2 ஆண்டுகளாக கவிதை, சிந்தனை துளிகள், சிறுகதை, வகுப்பறைக்கு பாடங்கள் தொடர்பான பாடல்கள் எழுதி வருகிறார். பிரதிலிபி தளத்தில் கவிதைகளைப் பதிவிட்டு வருகிறார். தொடுவானம் கவிதை குழுமம் நடத்தும் whatsApp வழியாக கவிதை எழுதும் போட்டியில் தொடர்ந்து கவிதை எழுதி வருகிறார்)
World Daughters Day: இரவில் நீலாம்பரியாய் தாயாகி தாலாட்டுபவள் அவள்!!
சர்வதேச மகள்கள் தினம்.. மகாலட்சுமியின் ரூபமே பெண் குழந்தைகள்!
மகள் இல்லாக் குறையைப் போக்க வந்த மருமகள்!
தென்தமிழ் தலையங்கம்: சுற்றுலா.. மனிதத்தையும் தேசத்தையும் இணைக்கும் பாலம்!
மகாளயபட்சம்.. முன்னோர்களுக்குத் தர்ப்பணம், அன்னதானம் செய்வது சிறப்பு!
முதல்வர் ரிவ்யூ கூட்டம் நடத்தவில்லை; Reels தான் எடுத்துள்ளார்! - மு.க.ஸ்டாலின் கடும் தாக்கு
ஜெம் வீரமணி போக்சோ வழக்கு: சாந்தி மற்றும் கணவருக்கு ஜாமீன் வழங்க காவல்துறை எதிர்ப்பு
மின்சாரத் துறை அமைச்சர் நிர்மல் குமார் கலந்து கொண்ட விழாவில் மின்தடை
தென்தமிழ்த் தலையங்கம்: உலகம் இதற்கு முன்பு எதைப் பார்த்தெல்லாம் பயந்திருக்கிறது?
{{comments.comment}}