- க. யாஸ்மின் சிராஜூதீன்
தொடக்கம் என்பது முதன்மைதான்
மனது அனுமதி தரனும்தான்....!!!
தொடங்கியப்பின் பம்பரம்தான்
சுழன்றுகொண்டேஇருக்கும்தான்
மனது தூங்கவிடாதுதான்
கல்வி,தொழில், வாழ்க்கை மேம்பாடு ...என்றுதான் ...!!!
திட்டங்களை தொடங்கவே
தயக்கம் என்றும் கொள்ளாதே
துணிந்து தொடங்கிவைத்திடு

நாளும் அதிலே நீந்திடு
தொடங்க தயக்கம் இருக்கும்தான்
தயங்கி பின்னே நிற்காதே
தொடக்கம் வெற்றியின்வாசலே....
அதிஷ்டம் என்பது எண்ணம்தான்
உழைப்பு அதிலே முதன்மைதான்
துணிந்து தொடங்கி வைத்திடு
துணிவை முதலீடு செய்திடு
தொடக்கம் என்பது முதல் வெற்றியே
முடிவு என்பது மகத்தான வெற்றியே
தொடக்கம் எல்லாம் வெற்றியாகாது
முடிவு நீயே சொல்லாதே.....!!!
காலத்தின் கையில் விட்டுவிடு...!!!
உழைப்பு மேலோட்டம் என்றாலே
வெற்றி ஆழத்தில் தங்குமே!!!
உழைப்பு ஆழம் என்றாலே
வெற்றி மிதந்து நம்மைச்சேருமே
தொடக்கம் தொடர்ந்து வளரனும்
மகுடம்தானே சூடனும்!!!!
எல்லா முடிவும் தொடக்கம்தான்
தொடக்கம் என்பது சிறப்புதான்
வெற்றி தோல்வி பொருட்டல்ல
செயல்கள் தொடங்கி செய்திடு
செம்மையாக வாழ்ந்திடு!!!
(கவிஞர் க.யாஸ்மின் சிராஜூதீன் இடைநிலை ஆசிரியர். ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி கரடிக்குப்பம். மேல்மலையனூர் ஒன்றியம் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர். 26.09.2014 முதல் இடைநிலை ஆசிரியராக 11 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். 2 ஆண்டுகளாக கவிதை, சிந்தனை துளிகள், சிறுகதை, வகுப்பறைக்கு பாடங்கள் தொடர்பான பாடல்கள் எழுதி வருகிறார். பிரதிலிபி தளத்தில் கவிதைகளைப் பதிவிட்டு வருகிறார். தொடுவானம் கவிதை குழுமம் நடத்தும் whatsApp வழியாக கவிதை எழுதும் போட்டியில் தொடர்ந்து கவிதை எழுதி வருகிறார்)
என்னது பிரியாணி இல்லையா?...தேர்தல் விலைப்பட்டியலில் பிரியாணி 'மிஸ்சிங்': அரசியல் கட்சிகள் அதிர்ச்சி
பாமக ராமதாஸின் அன்புமணிக்கு எதிரான வழக்கு: தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு
த்ரிஷா பிரச்சனையே தீரல...அதுக்குள்ள நயன்தாராவா? தொடரும் நடிகர்,நடிகைகள் மீதான விமர்சனம்
காலம் காத்திருந்து பதில் சொல்லும்...ஆதவ் அர்ஜூன் கருத்திற்கு ரஜினிகாந்த் பதில்
புதுச்சேரி திமுக கூட்டணியிலும் சலசலப்பு...தொகுதி பங்கீடு உறுதி செய்ய முடியாத நிலை
தமிழகம் உள்ளிட்ட 5 மாநில சட்டசபை தேர்தல்: 1,111 தேர்தல் பார்வையாளர்களை நியமினம்
சி.வி.சண்முகம் மன்னிப்பு கேட்க வேண்டும்... மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்
கேஸ் சிலிண்டர் பெற இனி biometric கட்டாயம்...மத்திய அரசு அதிரடி
திமுக அரசுக்கு எதிராக என்டிஏ கண்டன ஆர்ப்பாட்டம்: சென்னையில் எடப்பாடி பழனிசாமி ஆவேச உரை
{{comments.comment}}