டெல்லி: 2024ம் ஆண்டில் கூகுளில் அதிகம் தேடப்பட்ட டாப் 10 படங்களில் லிஸ்ட் தற்போது வெளியாகியுள்ளது. இதில் தமிழில் மட்டும் இரண்டு படங்கள் இடம் பிடித்துள்ளன.
இந்திய சினிமாவில் ஆண்டுதோறும் 1000த்திற்கும் மேற்பட்ட படங்கள் வெளியாகின்றன. அவற்றில் ரசிகர்களை கவர்ந்துள்ள படங்கள் என்றால் சொற்பமான படங்கள் மட்டுமே. அதிலும், வசூலில் சாதனை படைத்த படங்கள் என்றால், அவற்றை விரல் விட்டு எண்ணி விடலாம். அந்த அளவிற்கு கம்மியான படங்கள் மட்டுமே ஹிட் ஆடிக்கும்.
அவ்வாறு ஹிட் கொடுக்கும் படங்களை மட்டுமே மக்கள் கூகுளில் தேடுவார்கள். தற்போது 2024ம் ஆண்டின் இறுதியில் இருப்பதால், 2024ம் ஆண்டு கூகுளில் தேடிய 10 படங்களின் பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது. இந்தப் பட்டியலில் தமிழிலிருந்து மகாராஜா மற்றும் கோட் ஆகியவை மட்டுமே இடம் பிடித்துள்ளன.
அதிகபட்சமாக இந்தியிலிருந்து 3 படங்களும், தெலுங்கில் 3 படங்களும் அதிக அளவில் தேடப்பட்டுள்ளன. மற்ற நான்கு படங்களில் தமிழில் 2ம், மலையாளத்தில் 2ம் அடங்கும்.
டாப் 10 பட்டியல்:
1. ஸ்ட்ரீ 2 ( ஹிந்தி)
2. கல்கி (தெலுங்கு)
3. 12த் ஃபெயில் (ஹிந்தி)
4. லாப்பட்டா லேடீஸ் (ஹிந்தி)
5. ஹனுமன் (தெலுங்கு)
6. மகாராஜா (தமிழ்)
7. மஞ்சுமல்பாய்ஸ் (மலையாளம்)
8. கோட் - தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல்டைம் (தமிழ்)
9. சலார் (தெலுங்கு)
10. ஆவேஷம் (மலையாளம்)
இந்தப் பட்டியலில் இடம் பிடித்துள்ள விஜய் சேதுபதியின் மகாராஜா திரைப்படம் 6வது இடத்திலும், விஜய் நடிப்பில் வெளியான தி கோட் திரைப்படம் 8வது இடத்திலும் இடம் பெற்றுள்ளன. தமிழில் வெளியான இந்த இரண்டு படங்களில் தி கோட் படத்தை பின்னுக்கு தள்ளி முன்னேறியுள்ளது மகாராஜா.
வசூலில் கோட் படம் பெரும் சாதனை படைத்திருந்தாலும் கூட மகாராஜா படம் அகில இந்திய அளவில் பரவலாக பேசப்பட்டது என்பது நினைவிருக்கலாம். விஜய் சேதுபதியின் மகாராஜா திரைப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் இந்தியில் டப் செய்யப்பட்டு வெளியானது. இதனால், வட மாநில ரசிகர்கள் மத்தியில் இப்படம் பெரிய அளவில் ஹிட்டானது குறிப்பிடத்தக்கது.
நெட்பிளிக்ஸ் தளத்தில் அதிகம் பார்க்கப்பட்ட தமிழ் திரைப்படமும் இது தானாம். இதை தொடர்ந்து மகாராஜா திரைப்படம் தற்போது சீன மொழியிலும் வெளியாகி ரூ.60 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து அசத்தியும் உள்ளது.
கோட் படம் 2024ம் ஆண்டில் அதிகம் வசூலித்த படம் என்ற பெருமையுடன் இந்தப் பட்டியலில் இடம் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
அரசு ஊழியர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. முதல்வர் மு க ஸ்டாலின் வெளியிட்ட முக்கிய அறிவிப்புகள்!
அட்சய திருதியை முன்னிட்டு.. தங்கத்தின் விலை தொடர் சரிவு.. வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி..!
Swearing in: அமைச்சராக இன்று மாலை பதவி ஏற்கிறார்.. மனோ தங்கராஜ்
ஜனாதிபதி கையால் பத்மபூஷன் விருதை பெற.. குடும்பத்துடன் டெல்லிக்கு கிளம்பினார்.. நடிகர் அஜித்!
Cabinet Reshuffle: பொன்முடி, செந்தில் பாலாஜி நீக்கம்.. மனோ தங்கராஜ் மீண்டும் அமைச்சராகிறார்!
அமைச்சர்கள் நீக்கம்.. தானாக எடுத்தது அல்ல.. தவிர்க்க முடியாமல் எடுக்கப்பட்டது.. டாக்டர் தமிழிசை
IPl 2025.. எல்லை தாண்டி எகிறி அடிக்கும் வீரர்கள்.. ஐபிஎல்லில் இதுவரை குவிக்கப்பட்ட Super சிக்சர்கள்!
துபாய், சிங்கப்பூர், கொழும்பு வழியாக.. பாகிஸ்தானுக்கு தங்கு தடையின்றி செல்லும்.. இந்தியப் பொருட்கள்!
பஹல்காம் தாக்குதல் .. மத்திய அரசு, ராணுவம் குறித்து விமர்சனம்.. நாடு முழுவதும் 19 பேர் கைது
{{comments.comment}}