மக்களே ரெடியா.. தமிழ்நாட்டில்.. இன்று முதல் மே 13 வரை பரவலாக மழை பெய்யும்.. மஞ்சள் அலர்ட்!

May 09, 2024,05:37 PM IST

சென்னை: தமிழ்நாடு முழுவதும் இன்று முதல் ஐந்து நாட்களுக்கு பரவலாக மழை பெய்ய வாய்ப்பு உள்ளதால், மிதமான மழைக்கான மஞ்சள் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.


இது தவிர தமிழ்நாட்டில் இன்று 6 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும், மே 12ஆம் தேதி 7 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது.




மே மாதத்தில் நிலவும் அக்னி நட்சத்திர காலகட்டத்தில் இருந்து, வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வந்தது. ஆனால் கடந்த இரண்டு நாட்களாக வெயிலின் தாக்கம் சற்று தணிந்து தமிழ்நாடு முழுவதும் பரவலாக கோடை மழை பெய்து வருகிறது.


இந்த நிலையில் தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் இன்று முதல் அடுத்த ஐந்து நாட்களுக்கு பரவலாக மழை பெய்யக்கூடும் எனவும், ஒரு சில இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.


இன்று கனமழை நிலவரம்:


நெல்லை, தர்மபுரி, தேனி, தென்காசி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் ஆகிய 6 மாவட்டங்களில் இன்று கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.


மே 12 கனமழை நிலவரம்:


கோவை,திண்டுக்கல், தேனி,விருதுநகர், நெல்லை, குமரி தென்காசி, ஏழு மாவட்டங்களில் கன மழை எதிர்பார்க்கலாம்.


இது தவிர நாளை (10), நாளை மறுநாள் (11), மே 13 ஆகிய நாட்களில் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய பலத்த காற்றுடன் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும்.


வெயில் நிலவரம்:


இன்று முதல் அடுத்த ஐந்து தினங்களுக்கு தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும். 


தமிழ்நாட்டின் உள் மாவட்டங்களில் 106 டிகிரி ஃபாரன்ஹீட் வரை வெயில் சுட்டெரிக்கும்.  அப்போது இயல்பை விட இரண்டு முதல் மூன்று டிகிரி செல்சியஸ் வெப்பநிலை உயரும். சென்னையைப் பொறுத்தவரை சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும். 100 டிகிரிக்கும் குறைவாக வெயில் பதிவாகும்.

சமீபத்திய செய்திகள்

news

இனி கூட்டணியே தேவையில்லை.. திமுக தனித்துப் போட்டியிட வேண்டும்.. தொண்டர்கள் வலியுறுத்தல்

news

காங்கிரஸ் அணுகுமுறையால் திமுக கூட்டணிக்குத் தோல்வி.. திருமாவளவன் குற்றச்சாட்டு

news

பெண் சிங்கம்.. ராத்திரி 11 மணி.. தனி ஆளாய்.. மொத்த கும்பலையும் வேரறுத்த.. ரிதி ராஜ் ஐபிஎஸ்!

news

மீண்டும் போர் பதற்றம்: ஈரானிலிருந்து இந்தியர்கள் வெளியேற மத்திய அரசு அறிவுறுத்தல்!

news

மக்களின் குறை தீர்க்கும் தமிழ்நாடு அரசு.. முக்கிய இமெயில் முகவரிகள்.. நோட் பண்ணிக்கங்க!

news

முதல்வர் விஜயைச் சந்தித்து.. செஸ் விளையாடி.. ஜெயித்து வாழ்த்து பெற்றார் சாம்பியன் பிரக்ஞானந்தா!

news

தமிழ்நாடு மின் வாரிய ஹார்டு டிஸ்க் திருட்டு வழக்கு: சிபிசிஐடி-க்கு மாற்றி டிஜிபி உத்தரவு!

news

பா.ஜ.க-விலிருந்து விலகிய செய்தித் தொடர்பாளர் ஸ்ரீகாந்த் கருணேஷ்.. அண்ணாமலையுடன் இணைகிறாரா?

news

ராஜ்யசபா தேர்தல்: வேட்புமனுத் தாக்கலுக்கு இன்று கடைசி நாள்.. தவெக ஆதரவுடன் எம்.பி ஆகும் காங்.

அதிகம் பார்க்கும் செய்திகள்