டில்லி : உங்களின் மொபைல் போன் தொலைந்து விட்டது என்ற இனி எங்கும் அலை வேண்டாம். இவர்களிடம் புகார் கொடுத்தால் உங்கள் மொபைல் போன் கிடைக்கும். அது மட்டுமல்ல உங்களின் மொபைல் நம்பர் யாருடைய பெயரில் உள்ளது? உங்கள் பெயரில் தான் உள்ளதா? உங்களுடைய மொபைல் மற்றும் இன்டர்நெட் இணைப்பு பாதுகாப்பாக உள்ளதா? என்பது போன்ற பல விஷயங்களை தெரிந்து கொள்ளலாம்.
மத்திய தொலைத்தொடர்பு துறையின் அதிகாரப்பூர்வ இணையதளம் தான் TAFCOP. இந்த இணையதளத்திற்கு சென்றாலே இந்திய தொலைத் தொடர்பு சட்டம் குறித்த விபரங்கள், உங்களின் மொபைல் நம்பர் யாருடைய பெயரில் உள்ளது? அது உங்கள் பெயரில் தான் உள்ளதா? உங்களின் பெயரில் இருக்கும் பயன்படுத்தப்படாத மொபைல் எண் ரத்து செய்வது, இந்திய நம்பர்களில் இருந்து வரும் சர்வதேச போன் கால் தொந்தரவுகள், மொபைல் மூலம் நடக்கும் மோசடிகள், உங்களின் மொபைல் நம்பர் அல்லது இன்டர்நெட் இணைப்பு தவறாக பயன்படுத்தப்படுகிறதா? உங்களின் மொபைல் போன் தொலைந்தோ அல்லது திருடோ போய் விட்டதா? இப்படி மொபைல் போன்ற தொடர்பாக எந்த சேவையை பெற வேண்டும் என்றாலும் அல்லது புகார் அளிக்க வேண்டும் என்றாலும் இந்த இணையதளத்திற்கு சென்று தெரிவிக்கலாம்.

TAFCOP இணையதளத்திற்குள் செல்வதும் மிக சுலபம். உங்களின் மொபைல் நம்பரை முதலில் டைப் செய்து, கீழே கொடுக்கப்பட்டுள்ள Capche வையும் டைப் செய்து, Verify என்ற பட்டனை கிளிக் செய்தால் போதும், உடனடியாக நீங்கள் மேலே குறிப்பிட்ட உங்கள் மொபைல் நம்பருக்கு otp வரும். அதை அந்த கட்டத்தில் பதிவிட்டதும், login ஆகி விடும். மத்திய தொலைத்தொடர்பு துறை இணையதள பக்கத்தில் உங்களுக்கு தேவையான வசதியை தேர்வு செய்தாலே அதை எப்படி பயன்படுத்த வேண்டும், அதற்கு உங்களிடம் தேவையான விபரங்கள் என்ன இருக்க வேண்டும் என்பது உள்ளிட்டவைகள் மிக எளிமையாக கொடுக்கப்பட்டுள்ளது.
பயன்படுத்துவதற்கு மிக எளிமையாக இருக்கும் இந்த இணையதளத்தில் IMEI எண்ணை பதிவிட்டு, வேண்டிய விபரங்களை அளித்தால் தொலைந்து போன அல்லது திருடு போன உங்களின் மொபைல் போன் குறித்த விபரம் வந்து விடும். இந்த இணையதளம் மூலம் இதுவரை லட்சக்கணக்கான தொலைந்த மொபைல்கள் மீட்டுக் கொடுக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.
2023ம் ஆண்டு இந்திய தொலைத்தொடர்பு சட்டத்தின்படி தனிநபர் ஒருவர் 9 சிம் கார்டுகள் வரை மட்டுமே வைத்திருக்க வேண்டும். அதற்கு மேல் சிம் கார்டு கார்டு பயன்படுத்தினால் ரூ.2 லட்சம் வரை அபராதம் அல்லது சிறை தண்டனை அனுபவிக்க நேரிடும். அதனால் உங்கள் பெயரில் 9 சிம் கார்டிற்கு மேல் இருந்தால் உடனடியாக TAFCOP இணையதளத்திற்கு சென்று சரிபார்த்து, தேவையில்லாத எண்களை நீக்கி விடுங்கள். இதுவும் மிகவும் எளிது தான்.
உங்கள் பெயரில் இருக்கும் ஒரு மொபைல் நம்பரை பயன்படுத்தி TAFCOP இணையதளத்தில் login செய்தாலே போதும், உங்கள் பெயரில் இருக்கும் மொத்த மொபைல் எண்களின் பட்டியலும் வந்து விடும். அதில், this is not my number, not required, required என மூன்று option காட்டப்படும். உங்களுக்கு தேவை இல்லாத நம்பரை தேர்வு செய்து, தேவையில்லை என்பதை தேர்வு செய்து, அதில் வரும் நிபந்தனையை படித்து ஓகே அளித்தாலே, அது உங்கள் பெயரில் இருந்து நீக்கப்பட்டு விடும்.
தமிழ்நாட்டில் அடுத்த 2 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் அலர்ட்!
பசி,பட்டினியை போக்கவில்லை... தீபம் ஏற்ற வேண்டும் என கூறுகிறார்கள்: சீமான் ஆவேசம்!
வானுயர் ஜிஎஸ்டிபி வளர்ச்சி விகிதத்தில் தமிழ்நாடு சாதனை படைத்துள்ளது:முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
மெஸ்ஸியை பார்க்க முடியாமல் ரசிகர்கள் ஆவேசம்... ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட முதல்வர் மம்தா பானர்ஜி!
திமுக அரசின் துரோகத்திற்கு எதிராக தெருவுக்கு வந்த போராடும் அரசுஊழியர்கள்: அன்புமணி ராமதாஸ் வேதனை!
ஜிடிபி வளர்ச்சியில் தமிழ்நாடு புதிய சாதனை.. பெரிய மாநிலங்களில் நம்பர் 1 நாமதான்!
Flashback 2025.. தென்னிந்தியத் திரையுலகுக்கு பெரும் சோகம் தந்து விடைபெறும் 2025!
சினிமாத் துறையினரை தொடர்ந்து பாதிக்கும் மன அழுத்தம்.. உரிய கவுன்சிலிங் அவசியம்!
Amma's Pride ஆஸ்கர் விருதுக்குப் போட்டியிடும் சென்னையில் உருவான குறும்படம்!
{{comments.comment}}