சென்னை: தனக்கு பிறக்கப்போகும் குழந்தையின் பாலினத்தை வெளியிட்ட விவகாரத்தில், இன்று இர்ஃபானிடம் சுகாதாரத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பல்வேறு உணவகங்களுக்குச் சென்று உணவுகளை சுவைத்து அதனை வீடியோவாக யூடியூபில் வெளியிட்டு பிரபலமானவர் இர்ஃபான். இவருக்கு யூடியூபில் லட்சக்கணக்கான பாலோயர்கள் இருக்கிறார்கள். யூடியூப்பின் மூலம் பிரபலமான இவருக்கு கடந்த ஆண்டு திருமணம் நடந்தது. இர்பானின் மனைவி ஆலியா தற்போது கர்ப்பமாக உள்ளார். அவருக்கு என்ன குழந்தை பிறக்கும் என்பதை ஒரு பார்ட்டி வைத்து அறிவித்து இருக்கிறார். குழந்தையின் பாலினத்தை துபாயில் உள்ள மருத்துவமனையில் கண்டறிந்துள்ளார்.

இந்த விழாவின் இறுதியில், ஸ்கேன் முடிவுகளின் படி தங்களுக்கு பெண் குழந்தை தான் பிறக்க உள்ளதாக அறிவித்துள்ளார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் பாலினத்தை அறிவதும், வெளியிடுவதும் சட்டப்படி குற்றமாகும். இதனால் இர்பான் மீது வழக்கு பாயும் சூழல் ஏற்பட்டுள்ளது. சர்ச்சையைத் தொடர்ந்து தற்போது இர்பானின் வீடியோ நீக்கப்பட்டுள்ளது. அவரும் மன்னிப்பு கேட்பதாக தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த நிலையில் சென்னை நுங்கம்பாக்கத்தில் இர்ஃபானிடம் மருத்துவத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். அவரிடம் விளக்கம் கேட்ட பிறகு இந்த வழக்கை எப்படிக் கொண்டு போவது என்பது குறித்து அதிகாரிகள் முடிவெடுப்பார்கள் என்று தெரிகிறது.
அம்பிகையும், சொக்கரும் கை கோர்த்து அரசாண்ட மதுரை.. மீனாட்சி சுந்தரேஸ்வரர் சிறப்புகள்!
சார் மேடம் எங்கே.. அசர வைத்த ஏர்ஹோஸ்டஸ்.. மறக்க முடியாத பாஸ்டன் விமான பயணம்!
யானை பூனையாச்சு நீல வானத்தில் வெண்பஞ்சு திரள்.. மூவரி கவிதைகள்!
Happay Vinayagar Chaturthi: முழுமுதற் கடவுளே துணை நீயே
பட்டிமன்றத்தை பட்டி தொட்டியெங்கும் பயணிக்க வைத்த பண்பாட்டுத் தமிழன்!
Tasty Lunch Recipes: கமகமக்கும்.. சுவையான உருண்டை குழம்பு
பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும்.. இலக்கியத்தில் விநாயகர்!
அசுரனை அழிக்க ஆவணி சதுர்த்தியில் அருளிய விநாயகப் பெருமான்!
கருத்து மிகுந்தவளே கருத்துக்காளை மருமகளே உருத்தான சொந்தம் நீ உசுரான பந்தம் நீ!
{{comments.comment}}