ஜிம்பாப்வேயை உலுக்கும் பஞ்சம்.. அதை விரட்ட அரசு எடுத்த முடிவு.. .. அதிர்ச்சியில் நாடுகள்!

Sep 18, 2024,06:41 PM IST

ஹராரே: நமீபியாவில் பஞ்சம் தலைவிரித்தாடியபோது, அந்த நாட்டு அரசு அமல்படுத்திய திட்டத்தை தற்போது ஜிம்பாப்வே அரசும் கையில் எடுத்திருப்பதால் வன விலங்கு ஆர்வலர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஜிம்பபாப்வே அரசின் இந்த செயல் மிகவும் கண்டனத்துக்குரியது என்று எதிர்ப்புக் குரல்கள் எழுந்துள்ளன. 


உலக அளவில் தற்போது பெரும் மிரட்டலாக மாறி வருவது காலநிலை மாற்றம் எனப்படும் கிளைமேட் சேஞ்ச். இதன் காரணமாக அதீத புயல்கள், அதீத மழை வெள்ளம் என்று சுற்றுச்சூழல் பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. இயற்கைப் பேரிடர்களையும் மனிதர்கள் அதிக அளவில் சந்தித்து வருகின்றன. பனி மலைகள் உருக ஆரம்பித்து விட்டன. கடல் நீர் மட்டம் உயர்ந்து வருகிறது. பூமியின் பல பகுதிகளில் வறட்சி தலைவிரித்தாடுகிறது. குடிநீர்ப் பஞ்சமும் பல நாடுகள் உச்சகட்டத்தில் உள்ளன. இதன் விளைவு.. பல நாடுகளில் பட்டினிச் சாவுகள் அதிகரித்துள்ளன. 




நமீபியாவில்  ஏற்பட்ட கடும் வறட்சியால் பஞ்சம் பட்டினி தலை விரித்து ஆடுகிறது என்ற செய்தி சமீபத்தில் வெளியானது. அங்குள்ள மக்கள் பசி தீர்க்க என்ன வழி என்று யோசித்த அந்த நாட்டு அரசு, காடுகளில் வாழும் யானை, மான்,  வரிக்குதிரை போன்றவற்றை வேட்டையாடி அந்த இறைச்சிகளை மக்களுக்கு உணவாக வழங்க நமீபியா அரசு  திட்டமிட்டது.  இது பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. இதனால் "சேவ் நமீபியா" என உலக நாடுகளில் சமூக வலைதளங்களில் மக்கள் தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தி வந்தனர். 


நமீபியாவில் ஏற்பட்ட பஞ்சத்தையே இன்னும் நம்மால் மறக்க முடியவில்லை. அதற்குள்ளாக அந்த வரிசையில் இன்னொரு நாடும் இணைஞ்சிருக்கு. இதுவும் ஆப்பிரிக்க நாடுதான். இதனால் மேலும் மக்கள் பீதி அடைந்துள்ளனர். ஆப்பிரிக்காவின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள மற்றொரு நாடான ஜிம்பாவே தான் இப்போது நமீபியாவின் வழியில் பஞ்சத்தில் சிக்கித் தவித்து வருகிறது.


இந்த நாட்டில் சுமார் 1.60 கோடிக்கும் அதிகமாக மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இங்கு நிலவி வரும் கடும் வறட்சியால் மக்கள் பசி பட்டினி உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகளை சந்தித்து வருகின்றனர். இந்த பாதிப்புகளில் இருந்து மக்களை மீட்க  ஜிம்பாப்வே அரசு  ஒரு விஷயத்தை கையில் எடுத்துள்ளது. அது என்னவென்றால் நமீபியாவைப் போலவே மக்களின் பசிப்பினியை போக்க ஜிம்பாப்வேயும் வருடத்திற்கு 160 யானைகளை கொள்வதற்கு முடிவு செய்துள்ளது. 


உலகத்திலேயே யானைகள் அதிகம் வாழும் இரண்டாவது நாடாக  ஜிம்பாப்வே  உள்ளது. இங்கு ஒரு லட்சத்திற்கும் அதிகமான யானைகள் வாழ்ந்து வருகின்றன. குறிப்பாக ஹவான் என்ற நகரில் மட்டும் 65 ஆயிரம் யானைகள் வாழ்கின்றனவாம்‌.  மக்கள் பசி பட்டினியில் இருப்பதால் யானைகளைக் கொன்று அதன் இறைச்சியை மக்களுக்குக் கொடுக்க ஜிம்பாப்வே அரசு திட்டமிட்டுள்ளது.


உலகின் பல பகுதிகளிலும் ஏற்படும் மோசமான வானிலை காரணமாகவும், வெயிலின் தாக்கம் அதிகரிப்பதன் காரணமாகவும் வறட்சியால் நாட்டில் தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. அதேபோல்தான் ஜிம்பாப்வே நாட்டிலும் தற்போது ஏற்பட்ட வறட்சியால் பஞ்சம் ஏற்பட்டதுடன் உயிர் பலிகளும் நிகழ்வதாக கேள்விப்பட்டதிலிருந்து பல்வேறு உலக நாடுகளும் அனைத்தும் தங்கள் அனுதாபங்களை தெரிவித்து வருகின்றனர். அதற்காக விலங்குகள் வேட்டையாடுவதை ஒருநாளும் ஏற்க மாட்டோம் என பல்வேறு நாடுகளில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. 


ஆனால் பசி பட்டினியை சமாளிக்க  எங்களுக்கு வேறு என்ன செய்வது என்று தெரியவில்லை என ஜிம்பாப்வே அரசு தெரிவித்துள்ளது. அதனால் நமீபியா அரசு செய்ததையே  நாங்களும் பின்பற்ற போகிறோம். இந்த இறைச்சிகள் ஊட்டச்சத்து குறைபாடு உள்ளவர்களுக்கு கொடுக்கப்படும் என அந்நாட்டு சுற்றுச்சூழல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்தச் செய்தி பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மேலும் இதனை கைவிட வேண்டும் எனவும் பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.


இந்த நிலை ஜிம்பாவேக்கு புதிதல்ல. ஏற்கனவே 1988 ஆம் ஆண்டு இதே போன்ற வறட்சியால் விலங்குகளை வேட்டையாடி மக்களுக்கு உணவாக கொடுக்கப்பட்டது என்பது நினைவிருக்கலாம். மனிதன் செய்யும் தவறுகளால் இயற்கை பாதிக்கப்படுகிறது. அந்த பாதிப்பை சரி செய்யவும், இயற்கை மீதே மனிதர்கள் கைவப்பதுதான் கொடுமையானது.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

பொய் சொல்வதில் இந்த 5 ராசிக்காரர்களை அடித்துக் கொள்ள ஆளே கிடையாதாம்!

news

கமலுடன் நடிக்கும் போது இதை மட்டும் செய்துடாதீங்க... என்ன சிம்பு இப்படி சொல்றார்?

news

Tourist Family review: மனிதம் வாழ வேண்டும் என்பதை கூறும் படம் டூரிஸ்ட் ஃபேமிலி!

news

No Live coverage: மீடியாக்களே உணர்ச்சிவசப்படாதீங்க.. அடக்கி வாசிங்க.. மத்திய அரசு கோரிக்கை

news

இந்தியா - பாகிஸ்தான் போர்ச் சூழல் எதிரொலி.. ஐபிஎல் போட்டிகள் ஒரு வாரத்துக்கு நிறுத்தம் - பிசிசிஐ

news

அன்னையர் தினம்.. அன்னை இன்றி அமையாது உலகு!

news

பாலிவுட் நாயகி கங்கனா ரணாவத்.. ஹாலிவுட்டில் அறிமுகமாகிறார்.. முக்கிய கதாபாத்திரத்தில்!

news

சிவகார்த்திகேயன் அம்மாவின் 70வது பிறந்த நாளை எப்படி கொண்டாடி இருக்கார் பாருங்க!

news

சர்வதேச செய்தி நிறுவனங்கள் உள்பட.. 8000 எக்ஸ் கணக்குகளை முடக்க மத்திய அரசு உத்தரவு!

அதிகம் பார்க்கும் செய்திகள்