சென்னை: தமிழ்நாடு சட்டசபையில் தமிழ்நாடு அரசின் 2024-25ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு இன்று தாக்கல் செய்கிறார். பட்ஜெட் குறித்த விவரங்களை அறிய எங்களுடன் இணைந்திருங்கள்.
சென்னை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு ஒன்றிய அரசு நிதி வழங்குவதில் தாமதம் ஏற்படுத்துவதாக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு குற்றம் சாட்டி உள்ளார். ஒன்றிய அரசின் செயல்பாட்டால் தமிழக அரசுக்கு நிதி சுமை ஏற்படுவதாக அமைச்சர் பேச்சு.
ராமநாதபுரம், ஏற்காட்டில் ரூ 56 கோடி செலவில் ரேடார்கள் அமைக்கப்படும். மாநில நெடுஞ்சாலைகள் ஆணையம் அமைத்திடும் சட்ட முன்வடிவு நடப்பு கூட்ட தொடரில் அறிமுகப்படுத்தப்படும். 25 கோடியில் ஆட்டிசம் உடையோருக்கு உயர்திறன் மையம் சென்னையில் அமைக்கப்பட உள்ளது.
சென்னை, மதுரை, கோவை, திருச்சி, சேலம்,உள்ளிட்ட ஐந்து மாவட்டங்களில் 1000 இடங்களில் இணைய வைஃபை வசதி ஏற்படுத்தப்படும்.
அடுத்த இரண்டு ஆண்டுகளில் 50 ஆயிரம் இளைஞர்களுக்கு அரசு பணி வழங்கப்படும். ஜூன் மாதத்திற்குள் பத்தாயிரம் அரசு பணியிடங்கள் நிரப்பப்படும். இதுவரை 60,567 இளைஞர்களுக்கு பணி நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
திருவான்மியூர் உத்தண்டி வரை போக்குவரத்து நெரிசலை குறைக்க ரூபாய் 665 கோடியில் 14 புறவழிச் சாலைகள் மற்றும் உயர் மட்ட மேம்பாலங்கள் அமைக்கப்படும். சொத்து வரி திரும்பப் பெறும் திட்டம் அனைத்து முன்னாள் படை வீரர்களுக்கும் விரிவுபடுத்தப்படும். இதனால் ஒரு லட்சத்து இருபது ஆயிரம் முன்னாள் படை வீரர்கள் பயனடைவர்.
சென்னையில் கைத்தறி, கைவினைப் பொருட்கள் விற்பனைக்காக ரூபாய் 227 கோடியில் வணிக வளாகம் அமைக்கப்படும். தமிழ்நாடு இந்தியாவில் பிற மாநிலங்களில் உற்பத்தியாகும் கைத்தறி, கைவினைப் பொருட்கள் விற்பனை செய்யப்படும். ரூபாய் 500 கோடியில் ஜவுளி தொழில் மேம்பாட்டு திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படும். கரூர், ஈரோடு, விருதுநகர், மாவட்டங்களில் சிறிய ஜவுளி பூங்காக்கள் அமைக்க 20 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்.
திருப்பரங்குன்றம் , திருநீர்மலை கோயில்களில் ரோப் கார் வசதிகள் ஏற்படுத்தப்படும். ரூ.5,718 கோடி மதிப்பிலான 6,071 ஏக்கர் கோயில் நிலங்கள் மீட்பு. 1,000 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோயில்களில் ரூ.100 கோடி மதிப்பில் திருப்பணிகள். பள்ளிவாசல்கள், தேவாலயங்கள் புனரமைப்புத் திட்டம்.
தமிழ்நாட்டில் 12 இடங்களில் புதிய நீரூற்று மின் நிலையங்கள் அமைக்கப்படும். இதற்காக ரூபாய் 60 ஆயிரம் கோடியில் பொதுத்துறை மற்றும் தனியார் பங்களிப்புடன் மின் திட்டங்கள் செயல்படுத்தப்படும்.
வளர்ந்து வரும் செயற்கை நுண்ணறிவு ஏ ஐ தொழில்நுட்பத்தை ஆக்கபூர்வமாக பயன்படுத்துவது குறித்த திட்டமிடல் முதலமைச்சர் மு க ஸ்டாலின் தலைமையில் தமிழ்நாடு செயற்கை நுண்ணறிவு இயக்கம் உருவாக்கப்படும். சென்னை பிராட்வே பேருந்து நிலையம் மேம்படுத்தப்படும். குறளகம் நவீனப்படுத்தப்படும்.
முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!
ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்
துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி
ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!
பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!
ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு
ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை