75 ஆவது குடியரசு நாளில்.. 1,132 பேருக்கு .. குடியரசுத் தலைவர் பதக்கம்.. மத்திய அரசு அறிவிப்பு

Jan 25, 2024,12:21 PM IST

டெல்லி: இந்தியா முழுவதும் நாளை 75வது குடியரசு தின விழா சிறப்பாக கொண்டாடப்படும் நிலையில், 1,132 பேருக்கு குடியரசுத் தலைவர் பதக்கங்கள் வழங்க உள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. 


இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 24 பேருக்கும் குடியரசுத் தலைவர் பதக்கங்கள் வழங்கப்பட உள்ளது.


இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை நடைமுறைப்படுத்திய நாளான  ஜனவரி 26 ஆம் தேதியை குடியரசு தின விழாவாக கொண்டாடுகிறோம். இந்த குடியரசு தின விழா, இந்தியா முழுவதும் பெருமையுடனும், அரசியலமைப்புச் சட்டத்தை மதிக்கும் நாளாகவும் நாம் கொண்டாடுகிறோம்.




நாடு முழுவதும் உள்ள பள்ளி, கல்லூரிகள், அலுவலகங்கள், கட்சி அலுவலகங்கள், பொது இடங்கள் என அனைத்து இடங்களிலும் தேசிய கொடியேற்றுவது வழக்கம். அப்போது இந்திய சுதந்திரப் போராட்டத்தின் கலாச்சார நிகழ்வுகளை நினைவு கூறும் வகையில் பல்வேறு முக்கியமான கலை நிகழ்ச்சிகள் மற்றும் அணி வகுப்புகள் நடைபெறும். 


நாட்டின் தலைநகரான டில்லியில் உள்ள ராஜ்பாத்தில் இந்திய குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு தேசியக்கொடி ஏற்றி வைப்பார். பின்னர் பிரமாண்ட அணிவகுப்பும் நடைபெறும். பிரதமர் நரேந்திர மோடி, அமைச்சர்கள், பல்வேறு கட்சிகளின் தலைவர்கள், எம்பிக்கள்  உள்ளிட்டோர் கலந்து கொண்டு விழாவை சிறப்பிப்பர்.  இது மட்டுமல்லாமல் இந்திய அளவில் சிறப்பாக பணியாற்றிய காவல்துறை, தீயணைப்புத்துறை, ஊர்க்காவல் படை, உள்ளிட்டோருக்கு குடியரசுத் தலைவர் பதக்கங்கள் வழங்கப்படும். இதில் காவல் துறையின் நன்மதிப்பு செயல்பாடுகள் மற்றும் சாதனைகளின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவர்.


75வது குடியரசு தின விழாவின்போது, பல்வேறு பணிகளில் சிறந்து விளங்கும் 1132 பேருக்கு குடியரசு தலைவர் பதக்கங்கள் வழங்கப்படவுள்ளது. இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்தோர் 24 பேர் ஆவர்.


ஒவ்வொரு வருடமும் குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கு பெற வெளிநாட்டு தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்படும். இதன் அடிப்படையில் இந்த வருடம் பிரான்ஸ் அதிபருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இதனை ஏற்ற பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரன் குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக  பங்கேற்க உள்ளார்.  அந்நாட்டு ராணுவ குழுவும் குடியரசு தின விழா அணிவகுப்பில் பங்கேற்க உள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

எந்த ஷா வந்தாலென்ன?.. தமிழ்நாடு என்றைக்குமே டெல்லிக்கு Out of Control தான்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

news

கூட்டணி குறித்த முடிவுக்கு இபிஎஸ்சுக்கே அதிகாரம்..அதிமுக பொதுக்குழுவில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றம்

news

2026 சட்டசபைத் தேர்தலுக்கு முன் கூட்டணி விரிவாக்கம்.. ராஜ்யசபா தேர்தலை உற்று நோக்கும் தி.மு.க

news

விஜய்யின் பேச்சு அரசியல் முதிர்ச்சியின்மையை காட்டுகிறது:புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம்

news

தமிழகத்தில் இன்று முதல் அடுத்த 7 நாட்கள் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

news

அனைத்து ரேஷன் அட்டை தாரர்களுக்கும் பொங்கல் பரிசு: புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு

news

ஆஸ்திரேலியாவில்.. 16 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு சமூக ஊடகத் தடை.. எந்தெந்த செயலிகளுக்கு ஆப்பு?

news

தவெகவுடன் கூட்டணி வருமா?.. பதிலளிக்காமல் தவிர்த்த புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி

news

12 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நடிக்க வரும் அப்பாஸ்.. படம் பேரு என்ன தெரியுமா?

அதிகம் பார்க்கும் செய்திகள்