Guinnes Record: ஒரு மணி நேரத்தில் 1500 புஷ் அப்கள்.. 59 வயது பெண்மணி அசத்தல்.. கனடாவில்!

Nov 29, 2024,05:16 PM IST

டோரன்டோ:  கனடாவைச் சேர்ந்த டோனாஜீன் வைல்ட் என்ற 59 வயதான பெண்மணி, ஒரு மணி நேரத்தில் 1,575 புஷ்  அப் எடுத்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.

நம் ஊர்களில் தாத்தா-பாட்டி என்றால் வயதாகி இருக்கும், கையில் கம்பு ஊன்றிக்கொண்டு நடக்க முடியாமல் மெதுவாக நடப்பார்கள் என்று தான் நம் நாட்டு பேரக்குழந்தைகளுக்கு தெரியும். ஆனால் கனடா நாட்டில் 59 வயதாகும் பெண்மணி ஒருவர், தனது பேரக்குழந்தைகளுக்கு மிகப் பெரிய சாதனை படைத்து தான் ஒரு ரோல்மாடல் பாட்டி என்பதைக் காண்பித்துள்ளார். அதுவும் என்ன சாதனை தெரியுமா?  சொன்னால் வியந்து போவீர்கள்.



கனடா நாட்டை சேர்ந்த டோனாஜீன் வைல்ட் என்ற 59 வயதான பாட்டி ஒரு மணி நேரத்தில் 1,575 புஷ் அப்களை செய்துள்ளார். இது அவருக்கு 2வது உலக சாதனை ஆகும். தனது முந்தைய சாதனையை முறியடித்து தற்போது இந்த கின்னஸ் சாதனை படைத்துள்ளார். கடந்த வாரம் ராக்கி மலைகளின் அடிவாரத்தி்ல் உள்ள ஆல்பர்ட்டாவின் பீசரில் உள்ள தனது வீட்டில் இந்த சாதனையை செய்துள்ளார். 

60 நிமிடங்களில் 1,575 புஷ் அப்களை எடுத்துள்ளார். ஒவ்வொரு புஷ்அப்பிற்கும் புஷ்அப்பின் அடிப்பகுதியில் 90 டிகிரி முழங்கை வளைவு மற்றும் மேலே தள்ளும் போது முழு கை நீட்டிப்பு தேவை என்ற நிபந்தனைகளுடன் இந்த சாதனையை செய்துள்ளார். அவர் இதற்கு முன்னர் செய்த சாதனையை 17 நிமிடங்களுக்கு முன்னதாக செய்து முறியடித்துள்ளார்.

இந்த சாதனையை தொடங்கிய போது,  அவரது 12 பேரக்குழந்தைகளும் அவரை உற்சாகப்படுத்தியுள்ளனர். அப்போது MY GRANDMA IS OFFICIALLY AMAZING!!! என்று எழுதப்பட்டபோஸ்டர் அவருக்கே அருகில் பேரக்குழந்தைகள் எழுதி வைத்திருந்தனர்.

உங்க வீட்டு பாட்டிகளுக்கு இந்த செய்தியைப் படிச்சுக் காட்டுங்க.. என்ன பண்றாங்கன்னு பார்க்கலாம்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

யாருடன் கூட்டணி?...நாளை முடிவெடுக்கிறார் பாமக நிறுவனர் ராமதாஸ்

news

ஜனநாயகன் மட்டுமல்ல பராசக்தி படத்திற்கும் இன்னும் சென்சார் கிடைக்கல

news

GOLD RATE:தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வு... வெள்ளி கிராமிற்கு ரூ.4 குறைவு!

news

தேசியக் கட்சிகள் இல்லாமல் திராவிடக் கட்சிகளால் ஜெயிக்க முடியாதா??

news

காலை உணவு சாப்பிடுவதற்கு சரியான நேரம் எது? ஏன்?

news

ஜனநாயகன் பட தீர்ப்பை எதிர்த்து சென்சார் போர்டு மேல்முறையீடு

news

விஜய்யின் ‘ஜனநாயகன்’ படத்திற்கு யு/ஏ சான்று...சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு

news

இபிஎஸ் உடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு...பேச்சுவார்த்தையில் நடந்தது என்ன?

news

விஜய்யின் ‘ஜனநாயகன்’ பட வழக்கு: நாளை காலை 10.30 மணிக்கு தீர்ப்பு

அதிகம் பார்க்கும் செய்திகள்