சென்னையில் முதல் முறையாக.. பார்முலா 4 கார் பந்தயம்.. இன்றும் நாளையும்.. விரிவான ஏற்பாடுகள்!

Aug 31, 2024,12:17 PM IST

சென்னை:   சென்னை தீவுத்திடலில் ஃபார்முலா 4 கார் பந்தயம் இன்றும் நாளையும் நடைபெறுகிறது.


தமிழ்நாட்டு விளையாட்டு துறை மேம்பாட்டு ஆணையம் சார்பில் ஃபார்முலா 4 கார் பந்தய நிகழ்வு இன்றும் நாளையும் நடைபெறுகிறது. இதற்கான ஒத்திகை நேற்று நடைபெற்றது. தீவு திடலை ஒட்டிய கொடி மரச்சாலையில் தொடங்கி ஓமத்தூரார் அரசினர் தோட்டம் வரையிலான அண்ணா சாலை, சுவாமி விவேகானந்தா சாலை, நேப்பியர் பாலம், போர் நினைவு சின்னம் ஆகியவற்றை உள்ளடக்கிய 3.5 மீட்டர் கிலோமீட்டர் நீளத்தில் இந்த கார் பந்தயம் நடத்த  ஏற்பாடுகள் தயார் நிலையில் உள்ளன.




இந்த கார் ரேஸ் மதியம் 2.30 மணிக்கு தொடங்கவுள்ளது. தொடர்ந்து மாலை 5.30 மணிக்கு சாகச நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளன.  இரவு நேரத்திலும் இந்த கார்ப் பந்தயம் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால் இன்றும் நாளையும் சென்னை முக்கிய சாலைகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.


இந்த கார் ரேஸ் போட்டிகளைக் காண வருபவர்கள் எந்த தடையும் இல்லாமல் நிகழ்ச்சியை பார்ப்பதற்கு அரசு சார்பில் பல்வேறு ஏற்பாடுகளை செய்து வருகிறது.


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

மக்களின் வாழ்வாதாரமாக இருக்கும்.. சிந்து நதியை தடுத்து நிறுத்தும் முடிவை மாற்றுங்கள்.. சீமான்

news

வீடு கட்டும் ஜல்லி, எம் சாண்ட் விலை உயர்வால் கட்டுமான செலவு 30% அதிகரிப்பு!

news

கோவை வந்த விஜய்க்கு பிரம்மாண்ட வரவேற்பு... தொண்டர்களின் ஆரவாரத்தால் ஸ்தம்பித்தது கோவை!

news

வலுக்கட்டாயமாக கடன் வசூலித்தால் 3ஆண்டு வரை சிறை.. சட்டசபையில் புதிய மசோதா தாக்கல்..!

news

நடுநிலையான விசாரணைக்கு பாகிஸ்தான் தயாராக உள்ளது: பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அறிவிப்பு!

news

கல்வி தான் நமக்கான ஆயுதம்...கல்வியை மட்டும் விட்டுவிடவே கூடாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

news

ஸ்டெர்லைட்டுக்கு ஒரு நீதி என்.எல்.சிக்கு ஒரு நீதியா? உடனடியாக ஆலையை மூட வேண்டும்: டாக்டர் அன்புமணி

news

India Vs Pakistan: இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே முழு அளவிலான போர் மூண்டால் என்னாகும்?

news

ஆம்... மகளிருக்கு உரிமை வேண்டும்..!!

அதிகம் பார்க்கும் செய்திகள்