சென்னை: பராமரிப்பு பணி காரணமாக பொன்னேரி கவரப்பேட்டை இடையே 13 மற்றும் 15 ஆகிய தேதிகளில் 27 புறநகர் ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
மார்ச் 13 மற்றும் 15 தேதிகளில் பொன்னேரி- கவரப்பேட்டை இடையே தண்டவாள பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இந்த பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெறுகிறது. இதன் காரணமாக பொன்னேரி - கவரப்பேட்டை ரயில் நிலையங்களுக்கு இடையே பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் 27 புறநகர் ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, பொன்னேரி கவரப்பேட்டை இடையே மார்ச் 13, 15 ஆகிய தேதிகளில் 27 புறநகர் ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது. மேலும், சென்னை - கும்மிடிப்பூண்டி இடையிலான ரயில் சேவையிலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக பயணிகள் வசதிக்காக சென்னை சென்ட்ரல் - பொன்னேரி, மீஞ்சூர், எண்ணூர் இடையே 10 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இதுகுறித்த விவரம்:

காலை 9 மணிக்கு மூர் மார்க்கெட் வளாகம் டூ பொன்னேரி ,
காலை 9.30 மணிக்கு மூர்மார்க்கெட் வளாகம் டூ எண்ணூர்,
காலை 10.30 மணிக்கு மூர்மார்க்கெட் வளாகம் டூ பொன்னேரி,
காலை 11.35 மணிக்கு மூர் மார்க்கெட் வளாகம் டூ மீஞ்சூர்,
மதியம் 11.42 பொன்னேரி டூ மூர் மார்க்கெட் வளாகம்,
மதியம் 12.40 சென்னை கடற்கரை டூ பொன்னேரி ,
மதியம் 12.43 மணிக்கு எண்ணூர் - மூர் மார்க்கெட் வளாகம்,
மதியம் 1.18 மணிக்கு பொன்னேரி - மூர் மார்க்கெட் வளாகம்,
மதியம் 2.59 மணிக்கு மீஞ்சூர் டூ மூர் மார்க்கெட் வளாகம்,
மதியம் 3.33 மணிக்கு பொன்னேரி டூ மூர் மார்க்கெட் வளாகம் என 10 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன என அறிவிக்கப்பட்டுள்ளது.
துரோகி என்றால் நான் விலகிக் கொள்கிறேன்.. எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்கிறேன்: ஜி.கே.மணி!
அமித்ஷாவின் வியூகள் திமுகவுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது: வானதி சீனிவாசன்
சாட் ஜிபிடியிடம் பயனுள்ள கேள்விகளைக் கேளுங்கள்: முகேஷ் அம்பானி மாணவர்களுக்கு அறிவுரை!
சரமாரியாக சுட்ட நபரை.. துணிச்சலுடன் பிடித்து மடக்கிய முஸ்லீம் வியாபாரி.. குவியும் பாராட்டுகள்
ரூ.1 லட்சத்தை தாண்டியது தங்கம் விலை... அதிர்ச்சியில் உறைந்த வாடிக்கையாளர்கள்!
100 நாள் வேலைத் திட்டத்தில் வருகிறது அதிரடி மாற்றங்கள்.. மாநில அரசுகளுக்கு சுமை அதிகரிக்கும்!
தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளராக மத்திய அமைச்சர் பியுஸ் கோயல் நியமனம்
ஆஸ்திரேலியா தாக்குதல் எதிரொலி.. இந்தியாவில் யூதர்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தல்!
தங்கம் விலையில் புதிய உச்சம்... சவரன் ஒரு லட்சத்தை நெருங்கியது தங்கம்!
{{comments.comment}}