டில்லி : பொய்யான செய்திகள் அல்லது தவறாக வழிநடத்தும் தகவல்களை பரப்பினால் 3 ஆண்டு வரை சிறை தண்டனை பெற்று தரும் புதிய சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இதற்கான சட்ட மசோதா நேற்று லோக்சபாவில் தாக்கல் செய்யப்பட்டது.
மத்திய அமைச்சர் அமித் ஷா, நேற்று பாரதிய நியாய சன்கிதா என்ற சட்ட மசோதாவை தாக்கல் செய்தால். அதில் இந்திய குற்றவியல் சட்டங்கள் திரும்பப் பெறப்படுவதாகவும் அதற்கு பதிலாக மாற்றப்பட்ட புதிய சட்டங்கள் கொண்டு வரப்படுவதாகவும் அவர் தெரிவித்தார். இதன்படி,195 வது சட்டப் பிரிவின் படி, தவறான தகவல்கள், செய்திகள் ஆகியவற்றை பொதுவெளியில் பரப்பினால் அவர்களுக்கு 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கும் வகையில் புதிய சட்டம் வழிவகை செய்வதாக தெரிவித்தார்.
இந்தியாவின் இறையாண்மை, ஒற்றுமை அல்லது பாதுகாப்பிற்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் தவறான தகவல்களை பதிவிட்டாலோ அல்லது பரப்பினாலோ 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனையோ அல்லது அபராதமோ அல்லது இரண்டுமோ விதிக்கப்படும் என அமித்ஷா தெரிவித்துள்ளார். பொது அமைதிக்கு எதிரான குற்றங்களை தடுக்கும் வகையிலான சட்ட மசோதாவை தாக்கல் செய்து பேசிய அமித்ஷா இதனை தெரிவித்துள்ளார்.
இந்திய குடிமக்களுக்கு அளிக்கப்படும் உரிமைகளை பாதுகாக்கும் வகையிலான 3 சட்ட மசோதாக்களை அமித்ஷா நேற்று தாக்கல் செய்தார். பாரதிய நியாய சன்கிதா, பாரதிய நகாரிக் சுரக்ஷா சன்கிதா, பாரதிய சக்ஷ்யா ஆகிய 3 சட்ட மசோதாக்கல் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. பிரதமர் மோடியின் சுதந்திர தின உரையின்போது அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில் இந்த சட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.
முதல்வர் மு.க.ஸ்டாலின் இடத்துக்கு நிச்சயமாக உதயநிதி வருவார்: துரைமுருகன் புகழாரம்!
இளைஞர்களை ரவுடிகளாக்க எதிர்க்கட்சிகள் முயற்சி...பிரதமர் கடும் குற்றச்சாட்டு
பார்லிமென்ட் குளிர்கால கூட்டத்தொடர் டிசம்பர் 1 முதல் ஆரம்பம்
ஒரே சூரியன் .. ஒரே சந்திரன்.. ஒரே திமுக... பாட்ஷா ஸ்டைலில் அதிரடி காட்டிய முதல்வர் மு.க.ஸ்டாலின்
மனித நேயமும் மாற்றுத்திறனாளிகளும்.. தன்னம்பிக்கையும், தைரியமும் அவர்களை வழி நடத்தும்!
வாரத்தின் இறுதி நாளான இன்று தங்கம் விலை எவ்வளவு தெரியுமா? இதோ முழு விலை நிலவரம்!
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிலிருந்து.. வெளியேறுகிறாரா சஞ்சு சாம்சன்.. சிஎஸ்கேவுக்கு வருவாரா?
தமிழ்நாட்டில் இன்று 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு... சென்னை வானிலை மையம் தகவல்!
தாத்தா (கவிதை)
{{comments.comment}}