ஹைதராபாத்: தெலங்கனாவை சேர்ந்த ராஜசேகர் என்பவர் ஒரே நேரத்தில் 5 அரசு வேலைகளை பெற்று சாதனை படைத்துள்ளார்.
இன்றைய காலகட்டத்தில் நல்ல வேலை கிடைப்பது என்பது பெரிய சவாலகவே இருந்து வருகிறது. படித்த படிப்பிற்கும் வேலை கிடைப்பதில்லை. சரி கிடைக்கும் வேலையை செய்யலாம் என்று எண்ணி தனியார் நிறுவனங்களில் பணிக்கு செல்பவர்களுக்கு நல்ல சம்பளம், மரியாதை எல்லாம் கிடைத்தாலும், பார்க்கும் வேலை எத்தனை நாட்களுக்கு நிலைக்கும் என்று தெரியாத நிலை இருந்து வருகிறது.
இதன் காரணமாகவே படித்த இளைஞர்கள் எப்படியாவது அரசு வேலைக்கு செல்ல வேண்டும் என்று நினைக்கின்றனர். பணி பாதுகாப்பு, அரசு சலுகைகள், குறிப்பிட்ட வயதுவரை நிரந்தர வருமானம் உள்ளிட்ட பல காரணங்களினால் அரசு வேலையை வாங்க வேண்டும் என்று பலர் கருதுகின்றனர். ஒரு காலகட்டத்தில் படித்து முடிந்தால் அரசு வேலை என்று இருந்தது. அது தற்போது அரிதாகி விட்டது. இன்றைய காலகட்டத்தில் அரசு வேலைக்கு சொல்ல வேண்டும் என்றால் பல தேர்வுகளை எழுத வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. அதற்காக அதிகளிவில் பணத்தையும், நேரத்தையும் செலவிலத்து வருகின்றனர் இன்றைய இளைய தலைமுறையினர்.

பல முறை தேர்வுகளை எழுதுகின்றனர். எப்படியாவது ஒரு தேர்விலாவது மதிப்பெண்களை பெற்று விட வேண்டும் என்ற எண்ணத்துடன் படித்து வருகின்றனர். இப்படி படித்தாலும் 1 மார்க் 2 மார்க்கில் பணி கிடைக்காத சூழலும் எற்படுகிறது. ஆனால், தெலுங்கானாவின் கரீம்நகரை சேர்ந்த ராஜசேகர் என்பவர் ஒரே நேரத்தில் 5 அரசு வேலைகளை தேர்வின் மூலம் பெற்றுள்ளார்.
தற்போது ஆசிரியராக பணியாற்றி வரும் ராஜசேகர் TGT, PGT, Junior Lecturer, Group-4, TGPSC முடிவுகள் அனைத்திலும் தேர்ச்சி பெற்றுள்ளார். இது எப்படி சாத்தியமானது என்று கேட்டதற்கு ஒவ்வொரு தேர்வையும் சவாலாக எடுத்துக் கொண்டதால் இது சாத்தியமானதாக அவர் தெரிவித்து வருகிறார். தனது அண்ணன்தான் தனது ரோல்மாடல் என்றும் அவரிடமிருந்து நிறைய கற்றுக் கொண்டதாகவும் ராஜசேகர் கூறியுள்ளார் ஏற்கனவே பல பட்டங்களைப் பெற்றுள்ள ராஜசேகர் தொடர்ந்து படித்து வருவதாகவும் கூறுகிறார். தான் மட்டுமல்ல, திட்டமிட்டு சின்சியராக தேர்வுக்கு தயார் செய்து கொண்டாலும் எல்லோராலும் தன்னைப் போலவே தேர்ச்சி பெற முடியும் என்றும் இவர் கூறுகிறார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
சென்னை புத்தகக் கண்காட்சி 2026.. தேதி சொல்லியாச்சு.. புத்தகப் பிரியர்களே.. ரெடியாகுங்க!
தென்காசி மற்றும் திருநெல்வேலியில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் கொடுத்த அலர்ட்!
மாமதுரைக்குத் தேவை வளர்ச்சி அரசியலா அல்லது அரசியலா?.. முதல்வர் மு.க.ஸ்டாலின்
இந்தியா முழுவதும் இன்று ஒரே நாளில் 500க்கும் மேற்பட்ட இண்டிகோ விமானங்கள் ரத்து
திருப்பரங்குன்றம் தீப வழக்கு... தீர்ப்பு ஒத்திவைப்பு: உயர்நீதிமன்ற மதுரைக் கிளை
நான் எந்த சூழ்நிலையிலும் தனிக் கட்சி ஆரம்பிப்பேன் என்று சொல்லவில்லை ஓ. பன்னீர்செல்வம்!
சென்னையில்.. 10 லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்படும் அபாயம்!
ரெப்போ வட்டி விகிதம் குறைப்பு.. ரிசர்வ் வங்கி நடவடிக்கை.. இஎம்ஐ குறையலாம்!
திருவண்ணாமலை தூய்மைப் பணியாளர்களை.. கையெடுத்து கும்பிட்டு நன்றி சொன்ன கலெக்டர்
{{comments.comment}}