மும்பை: 2025 ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி தொடரை கைப்பற்றிய இந்திய அணிக்கு 58 கோடி பரிசு தொகை வழங்க உள்ளதாக பி .சி.சி.ஐ அறிவித்துள்ளது.
2025 ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி போட்டிகள் அண்மையில் துபாயில் நடைபெற்றது. இதில் மொத்தம் எட்டு அணிகள் பங்கேற்று இருந்தது. அப்போது குரூப் சுற்றில் இந்திய அணி விளையாடிய மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்று அரை இறுதிக்கு முன்னேறியது. அரையிறுதியில் ஆஸ்திரேலியாவுடன் போட்டியிட்டு அதிலும் வெற்றி கண்டது .

இதனைத் தொடர்ந்து, இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் இறுதிப் போட்டியில் மோதின. இந்த போட்டியில் இந்திய அணி நான்கு விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தி அபார வெற்றி பெற்று சாம்பியன்ஸ் பட்டத்தை வென்றது. சாம்பியன்ஸ் டிராபி தொடரில் அதிக முறை பட்டத்தை வென்ற அணி என்ற பெருமையைப் இந்திய அணி பெற்றுள்ளது. 2025 ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் தொடரில் இந்திய அணி ஒரு போட்டியிலும் கூட தோல்வியை தழுவவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், சாம்பியன்ஸ் டிராபி வென்ற இந்திய அணிக்கு பிசிசிஐ பரிசு தொகையை அறிவித்துள்ளது. அதன்படி, 2025 ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் கோப்பையை வென்ற இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூபாய் 58 கோடி பரிசு வழங்க உள்ளதாக அறிவித்துள்ளது. இந்த பரிசுத்தொகை இந்திய அணியில் இடம்பெற்ற வீரர்கள் மற்றும் பயிற்சியாளருக்கு தலா மூன்று கோடியும், துணை பயிற்சியாளருக்கு தலா 50 லட்சமும் பிரித்துக் கொடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது.
ஒரே சூரியன் .. ஒரே சந்திரன்.. ஒரே திமுக... பாட்ஷா ஸ்டைலில் அதிரடி காட்டிய முதல்வர் மு.க.ஸ்டாலின்
மனித நேயமும் மாற்றுத்திறனாளிகளும்.. தன்னம்பிக்கையும், தைரியமும் அவர்களை வழி நடத்தும்!
வாரத்தின் இறுதி நாளான இன்று தங்கம் விலை எவ்வளவு தெரியுமா? இதோ முழு விலை நிலவரம்!
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிலிருந்து.. வெளியேறுகிறாரா சஞ்சு சாம்சன்.. சிஎஸ்கேவுக்கு வருவாரா?
தமிழ்நாட்டில் இன்று 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு... சென்னை வானிலை மையம் தகவல்!
தாத்தா (கவிதை)
கோல்டன் பீகாக் விருது போட்டியில் சிவகார்த்திகேயனின் அமரன்.. கமல்ஹாசன் பெருமிதம்
திண்ணை வைத்த வீடு
வீதியும் கடலாகும்!
{{comments.comment}}