#64YearsofKamalism... கமலுக்கு சினிமா வயசு 64.. கொண்டாடும் ரசிகர்கள்!

Aug 12, 2023,01:52 PM IST
சென்னை : உலக நாயகன் என்று ரசிகர்களால் போற்றப்படும் கமலஹாசனின் திரைப்பயணம் 64 வருடங்களுக்கு முன் இதே நாளில் தான் துவங்கியது. இதை அவரது ரசிகர்கள் சோஷியல் மீடியாவில் கொண்டாடி வருகின்றனர். 

தனது 4 வது வயதில் களத்தூர் கண்ணம்மா படத்தின் மூலம் திரையுலகிற்கு குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் கமலஹாசன். குழந்தை நட்சத்திரம், அசிஸ்டென்ட் டைரக்டர், துணை நடிகர், ஹீரோ, நடன கலைஞர், பாடகர், பாடலாசிரியர், திரைக்கதை எழுத்தாளர், இயக்குனர், தயாரிப்பளர் என சினிமாவின் அத்தனை ரோல்களிலும் பணியாற்றி விட்டார் கமல்ஹாசன். சமீப ஆண்டுகளாக டிவி நிகழ்ச்சி தொகுப்பாளர் என்ற பரிமாணத்தையும் எடுத்து விட்டார்.



இந்த 64 ஆண்டு கால திரைப்பயணத்தில் கமல் பண்ணாதது வில்லன் ரோல் தான். அதையும் தற்போது பாலிவுட்டில் நடித்து வரும் கல்கி 2829 ஏடி படத்தின் மூலம் நிறைவேற்றி விட்டார் கமல். சினிமாவை தொடர்ந்து அரசியலிலும் தனக்கென தனி இடத்தை பிடித்து விட்டார் கமல். அரசியல், சினிமா இரண்டிலும் பிஸியாகவும் அனைவராலும் எதிர்பார்க்கப்படும் நபராகவும் இருக்கும் ஒரே நபர் கமல் தான். 4 வருடங்களாக படங்களில் நடிக்காமல் பிரேக் எடுத்து விட்டு, விக்ரம் படத்தில் நடித்த போதிலும் ரசிகர்கள் அதை பிளாக்பஸ்டர் படமாக்கி வரவேற்பை அளித்துள்ளனர்.

கமல் திரையுலகிற்கு வந்து 64 ஆண்டுகள் ஆனதை கொண்டாடும் விதமாக அவரது மகளும், நடிகையுமான ஸ்ருதிஹாசன் ட்விட்டரில்,  64 years of ulaganayagan kamal hassan என்ற தலைப்பில் சிறப்பு போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதோடு அவர் பதிவிட்டுள்ள போஸ்டில், " ஏற்றங்கள், இறக்கங்கள், வெற்றிகள், சவால்கள். அவர் அனைத்தையும் பார்த்து விட்டார். ஆனால் எதுவும் உலகநாயகனுக்கும், திரையுலகை உயர்த்துவதற்காக அவர் எடுத்துக் கொண்ட முயற்சிக்கும் இடையே எதுவும் வர முடியவில்லை. 6 தசாப்தங்களாக சினிமாவில் ஈடு இணையற்ற பேரரசராக இருக்கும் அவர் தனது 64 வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறார்" என குறிப்பிட்டுள்ளார்.

இந்த போஸ்டர் மற்றும் ஸ்ருதியின் போஸ்டினை ராம்கமல் பிலிம்ஸ் நிறுவனமும் பகிர்ந்துள்ளது. இதற்கு ரசிகர்கள் வாழ்த்து மழை பொலிந்து வருகின்றனர். இதனால் #64YearsOfKamalism, #KamalHaasan ஆகிய ஹேஷ்டேக்குகள் ட்விட்டரில் டிரெண்டாகி வருகின்றன.

சமீபத்திய செய்திகள்

news

ஜெம் கிரானைட் வீரமணி விவகாரம்: தவெக-திமுக இடையே முற்றும் மோதல்

news

நடிகை அம்பிகா மீது சகோதரி ராதா பரபரப்பு புகார்: ரூ.46 கோடி மோசடி செய்ததாக போலீசில் புகார்

news

"நிர்வாக அறிவு இருக்கிறதா?" – தவெக அரசை கடுமையாக விமர்சித்து மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை!

news

மா(மே)ரியம்மாள் பவனம்.. ஒரு நிமிடக் கதை (19)

news

வங்கக்கடலில் தீவிரமடையும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி: இந்திய வானிலை மையம் எச்சரிக்கை!

news

என் தமிழ்.. ஏன் தமிழ்?

news

ஏகாந்தம்.. அழகிய முழு நிலவொளியில் ஆனந்த ராகம் பாடி!

news

Short Story: காணாமல் போன கண்ணன்

news

மிளகு பொங்கல் வாசம் மிடுக்காய் பரவி வீசும் பலகாய்கறி சாம்பார் படக்கென பசி தூண்டும்!

அதிகம் பார்க்கும் செய்திகள்