7ஜி பிருந்தாவன் காலனி.. ரீ ரிலீஸ்.. சோனியா அகர்வால் செம ஹேப்பி!

Sep 09, 2023,01:10 PM IST
சென்னை: சோனியா அகர்வாலுக்கு பெரிய பெயரைப் பெற்றுக் கொடுத்த படங்களில் ஒன்றான 70ஜி பிருந்தாவன் காலனி படம் ரீ ரிலீஸ் ஆகவுள்ளது. இதை மகிழ்ச்சியுடன் அறிவித்துள்ளார் சோனியா அகர்வால்.

செல்வராகவனின் கண்டுபிடிப்பான சோனியா அகர்வால், அவரது இயக்கத்தில் நடித்த எல்லாப் படங்களுமே சூப்பர் ஹிட்தான். காதல் கொண்டேன், 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை என எல்லாப் படங்களுமே சோனியா அகர்வாலுக்கு நல்ல பெயரைப் பெற்றுக் கொடுத்தன.



இதில் 7ஜி ரெயின்போ காலனி, தெலுங்கில் 7ஜி பிருந்தாவன் காலனி என்ற பெயரில் டப் ஆனது. இந்தப் படமும் சூப்பர் ஹிட்டாக ஓடியது. தற்போது இந்தப் படத்தை மீண்டும் ரிலீஸ் செய்யவுள்ளனர். செப்டம்பர் 22ம் தேதி இது மீண்டும் திரைக்கு வருகிறது.

இதுகுறித்து மகிழ்ச்சியுடன் கருத்து தெரிவித்துள்ளார் சோனியா அகர்வால். இது தொடர்பாக அவர் போட்டுள்ள டிவீட்டில், எனது முக்கியமான பேவரைட் படங்களில் ஒன்றான, எனக்கு மிகவும் பிடித்த 7ஜி பிருந்தாவன் காலனி மீண்டும் திரைக்கு வருவது குறித்து அறிந்து மகிழ்ச்சி அடைகிறேன். மிகப் பெரிய வெற்றிப் படமான இந்தப்படம் மீண்டும் ரசிகர்களை மகிழ்விக்கவிருப்பது குறித்து மகிழ்ச்சியில் உள்ளேன்.

கிட்டத்தட்ட 19 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு காதல் மாஜிக்கை கதையாக சொன்ன படம் திரைக்கு வருகிறது. இந்தம் படம் தொடர்பான அனைத்து நினைவுகளும் இன்னும் பசுமையாக உள்ளன. எப்போதும் அவை இருக்கும். உங்களது நண்பர்கள், குடும்பத்துடன் படத்தைப் பார்த்து மகிழ தயாராகுங்கள் என்று தெலுங்கு ரசிகர்களுக்கு அன்பு வேண்டுகோள் விடுத்துள்ளார் சோனியா அகர்வால்.

சமீபத்திய செய்திகள்

news

ஜெம் கிரானைட்ஸ் வீரமணி வழக்கில் லஞ்சம் வாங்கிய அதிகாரிகள் யார்? விசாரிக்க சிறப்பு குழு அமைப்பு!

news

"நிர்வாக அறிவு இருக்கிறதா?" – தவெக அரசை கடுமையாக விமர்சித்து மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை!

news

குற்றவாளிகள் ஒருவரையும் விடக்கூடாது: ஜெம் கிரானைட்ஸ் வீரமணி விவகாரத்தில் முதல்வர் அதிரடி உத்தரவு

news

ஜெம் கிரானைட் வீரமணி விவகாரம்: தவெக-திமுக இடையே முற்றும் மோதல்

news

ஆளுக்கு 8 ஓட்டு.. 9 மாத மழலை எடுத்துக் கொடுத்த சீட்டு.. கலகலப்பாக முடிந்த பள்ளித் தலைவர் தேர்தல்!

news

நடிகை அம்பிகா மீது சகோதரி ராதா பரபரப்பு புகார்: ரூ.46 கோடி மோசடி செய்ததாக போலீசில் புகார்

news

வங்கக்கடலில் தீவிரமடையும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி: இந்திய வானிலை மையம் எச்சரிக்கை!

news

ஏகாந்தம்.. அழகிய முழு நிலவொளியில் ஆனந்த ராகம் பாடி!

news

Short Story: காணாமல் போன கண்ணன்

அதிகம் பார்க்கும் செய்திகள்