60 வயதில் 2வது திருமணம் செய்த ஆசிஷ் வித்யார்த்தி.. குவியும் வாழ்த்துகள்

May 26, 2023,11:27 AM IST
சென்னை : பிரபல  நடிகரான ஆசிஷ் வித்யார்த்தி தனது 60 வது வயதில் 2வது திருமணம் செய்து கொண்டுள்ளார். இவரது திருமண போட்டோக்கள் வைரலான நிலையில், வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.

தில், பாபா, பகவதி படங்களில் வில்லனாகவும், கில்லி படத்தில் விஜய்க்கு அப்பாவாகவும் நடித்து பிரபலமானவர் நடிகர் ஆசிஷ் வித்யார்த்தி.  தமிழ், தெலுங்கு, கன்னடம் என பல மொழிப் படங்களில் நடித்துள்ள ஆசிஷ் வித்யார்த்தி, மகாராஷ்டிராவைச் சேர்ந்தவர். 



60 வயதாகும் இவர் தற்போது அதிக அளவிலான படங்களில் நடிக்கவில்லை. இந்த நிலையில், அசாமை சேர்ந்த பெண் ஒருவரை 2வது திருமணம் செய்து கொண்டுள்ளார். இவருக்கு சினிமா வட்டாரத்தை சேர்ந்த பலரும், நெட்டிசன்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

ஆரம்பத்தில் இந்தி படங்களில் குணசித்திர நடிகராக நடித்து வந்த ஆசிஷ் வித்யார்த்தி, விக்ரம் நடித்த தில் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு வில்லனாக அறிமுகமானார். இதைத் தொடர்ந்து பாபா, ஏழுமலை, பகவதி, தமிழன் உள்ளிட்ட பல படங்களில் வில்லனாக நடித்த இவர், கில்லி படத்தில்  விஜய்க்கு அப்பாவாக குணசித்திர வேடத்தில் நடித்திருந்தார். 

சமீப காலமாக தமிழ் சினிமாக்களில் தலை காட்டாமல் இருக்கும் ஆசிஷ் வித்யார்த்தி, தெலுங்கு, இந்தி, மலையாளம் மற்றும் பெங்காலி ஆகிய மொழிகளில் பிசியாக நடித்து வருகிறார். இவர் ஏற்கனவே ராஜோஷி என்பவரை திருமணம் செய்து கொண்டுள்ளார். இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். முதல் மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை பிரிந்து வாழ்ந்து வந்த ஆசிஷ் வித்யார்த்திக்கு தற்போது 60 வயதாகிறது.

இந்நிலையில் இப்போது ரூபாலி பருவா என்கிற அசாமை சேர்ந்த பெண்ணை 2வதாக திருமணம் செய்துள்ளார். சோஷியல் மீடியாவில் படு ஆக்டிவாக இருக்கும் ஆசிஷ் வித்யார்த்தி, மணக்கோலத்தில் இருக்கும் தனது போட்டோக்களை அதில் பகிர்ந்துள்ளார். இந்த போட்டோக்கள் செம வைரலாகி வருகின்றன. இவர்களுக்கு வாழ்த்துக்களும் குவிந்து வருகிறது. 

ஆசிஷ் வித்யார்த்தியின் 2வது திருமணம் மே 25 ம் தேதியன்று கொல்கத்தாவில் நடந்துள்ளது. இந்த திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். ஆசிஷ் வித்யார்த்தி திருமணம் செய்து கொண்டுள்ள பெண் கவுகாத்தியில் பேஷன் ஸ்டோர் ஒன்றை நடத்தி வருவதாக சொல்லப்படுகிறது.

சமீபத்திய செய்திகள்

news

இந்த வாழ்க்கை ஒரு கனவா?

news

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை.. முதல்வர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிச்சாமி அஞ்சலி

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் அக்டோபர் 30, 2025... இன்று மகிழ்ச்சி தேடி வரும் ராசிகள்

news

பணியாளர் நியமனத்தில் முறைகேடா?.. களங்கம் கற்பிக்க மத்திய அரசு முயற்சி.. அமைச்சர் கே. என். நேரு

news

2,538 பணியிடங்களுக்கு முறைகேடாக பணி நியமனம் செய்து ரூ.888 கோடி திமுக ஊழல்: அண்ணாமலை குற்றச்சாட்டு

news

Rain Rain come again.. தமிழ்நாட்டில் அடுத்த 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் தகவல்

news

மக்களைக் காக்க யாரும் எங்களுக்கு சொல்லித் தர வேண்டாம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

news

நவ. 5ல் சிறப்பு பொதுக்குழு: ஆழ் நீள் அடர் அமைதிக்குப் பிறகு.. பேசப் போகிறேன்.. விஜய் அறிக்கை

news

காலையில் மட்டுமில்லங்க..பிற்பகலிலும் உயர்ந்தது தங்கம் விலை.. இன்று மட்டும் சவரனுக்கு ரூ.2,000 உயர்வு

அதிகம் பார்க்கும் செய்திகள்