கண்டதும் காதல்... ஈரம் சொட்ட சொட்ட அமலாபால்.. விறுவிறுவென மரம் ஏறி.. அசத்துறாரே!

Feb 27, 2023,10:23 AM IST
சென்னை : மலையாள நடிகையான அமலாபால், சிந்து சமவெளி படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமானார். முதல் படமே அமலா பாலுக்கு இமேஜை காலி செய்யும் படமாக அமைந்தது. பிறகு அவர் நடித்த மைனா படம் பாராட்டை பெற்று தந்ததால், தமிழ் சினிமாவில் கவனிக்கப்படும் நடிகையாகி விட்டார்.



பிறகு தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வளர்ந்த அமலா பாலுக்கு விஜய், விக்ரம் உள்ளிட்ட டாப் ஹீரோக்களுடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. சினிமாவில் பிஸியாக இருந்த போதே டைரக்டர் ஏ.எல்.விஜய்யை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு சினிமாவிற்கு பிரேக் விட்ட அமலாபால், திருமணம் முடிந்த மிக குறுகிய காலத்திலேயே விவாகரத்தை அறிவித்ததுடன், டைரக்டர் விஜய்யை விட்டு பிரிந்தார்.




விவாகரத்திற்கு பிறகு ஆடை படத்தில் இவர் நிர்வாணமாக நடித்த காட்சி, இவரது சினிமா வாழ்க்கைக்கு பெரிய சருக்கலாக அமைந்தது. அதற்கு பிறகு பட வாய்ப்புக்கள் இல்லாமல் போனதால் தியானம், வழிபாடு என தீவிரம் காட்டிய அமலாபால் மற்றொரு புறம் டாப்லெஸ் போஸ், கிளாமர் போட்டோஷூட் என நடத்தி சோஷியல் மீடியாவை அதிர வைத்தார். மற்றொரு புறம் ஜாலியாக ஊர் சுற்றுவது, பார்ட்டி பண்ணுவது போன்ற போட்டோக்களையும் இஸ்டாகிராமில் பகிர்ந்து வந்தார். இதனால் என்ன ஆச்சு அமலாபாலுக்கு என ரசிகர்கள் குழம்பி போயினர்.

இந்நிலையில் சமீபத்தில் பாகுபலி ரேன்ஜுக்கு பிகினி உடையில், மலை மீது அசால்டாக ஏறி, உயரமான இடத்தில் இருந்து கொட்டு அருவி விழும் இடத்தில் டைவ் அடிச்ச வீடியோவை வெளியிட்டு அனைவரையும் வாய் பிளக்க வைத்தார். பாலுபலி பிரபாசுக்கே டஃப் கொடுக்குற மாதிரி மலையில் ஏறும் வீடியோவிற்கு மாமாபலி என கேப்ஷன் பதிவிட்டிருந்தார் அமலாபால். இதனால் ரசிகர்கள் பலரும் அது என்ன மாமாபலி என டவுட் கேட்க துவங்கி விட்டனர்.

கருப்பு பிகினியில் அருவியில் செம ஆட்டம் போடும் போட்டோக்கள், வீடியோக்களை தொடர்ந்து வெளியிட்ட அமலாபால், தற்போது ஈரம் சொட்டும் உடையில், துளி கூட மேக்அப் இல்லாமல் இருக்கும் போட்டோக்களை வெளியிட்டுள்ளார். கொத்தாக தொங்கும் மலர்கள் கன்னத்தில் உரசும் போட்டோக்களை பகிர்ந்து, அதோடு, " கண்டதும் காதல்... அழகே உன்னை மீண்டும் சந்திப்பதில் மகிழ்ச்சி" என கேப்ஷன் பதிவிட்டுள்ளார்.

இந்த காதல் வார்த்தைகள் நிஜமாகவே இயற்கை அழகான மலர்களுக்கு தானா இல்லை அமலாபால் மீண்டும் காதலில் விழுந்துள்ளாரா என்ற சந்தேகத்தை பலரின் மனதிலும் கிளப்பி விட்டுள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!

news

கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!

news

இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?

news

உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?

news

விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி

news

கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்

news

Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்

news

ருத்ர தாண்டவம் (சிறுகதை)

news

உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!

அதிகம் பார்க்கும் செய்திகள்