"ஈகை" மூலம் மீண்டும் அசத்த வரும்.. அஞ்சலி!

Jun 23, 2023,10:06 AM IST
சென்னை: திறமையான நடிகையாக அறியப்பட்ட அஞ்சலி மீண்டும் ஒரு அட்டகாசமான பாத்திரத்தில் கலக்க வருகிறார்.. ஈகை படத்தில்.

கற்றது தமிழ் மூலம் தமிழ்த் திரையுலகுக்கு அறிமுகமானவர் அஞ்சலி. முதல் படத்திலேயே அவர் பேசப்பட்டார். வெறும் அழகு மட்டும் என்னிடம் இல்லை.. சூப்பரான நடிப்புத் திறமையும் இருக்கிறது என்பதை அடுத்தடுத்து வந்த படங்களில் நிரூபித்தார்.



குறிப்பாக அங்காடித் தெரு, எங்கேயும் எப்போதும் ஆகிய படங்கள் அவருக்கு நல்ல நடிகை என்ற பெயரைப் பெற்றுக் கொடுத்தது. இந்த நிலையில் அஞ்சலி நடிக்கும் புதிய படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஈகை என்ற படத்தில் அஞ்சலி முக்கியப் பாத்திரத்தில், நாயகியாக நடிக்கவுள்ளார். இது அவரது 50வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.

இயக்குநர் பாரதிராஜா, தெலுங்கு நடிகர் சுனில், இளவரசு உள்ளிட்ட பலரும் நடிக்கும் இப்படத்தில் கதை நாயகியாக நடிக்கவுள்ளார் அஞ்சலி.  கிரீன் அமூசிமெண்ட் மற்றும் D3 புரொடக்சன்ஸ்  தயாரிக்கும்
இந்த படத்தின் துவக்கவிழா சென்னையில் நடைபெற்றது.

தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய மொழிகளிலும் இப்படம் உருவாகிறது. சென்னையில் தொடங்கி மும்பை, ஹைதராபாத் ஆகிய நகரங்களிலும் படப்பிடிப்பு நடைபெறவுள்ளதாம்.



அசோக் வேலாயுதம் இப்படத்தை இயக்குகிறார். இவருக்கு இதுதான் முதல் படம். என்ன மாதிரியான கதை இது என்று அவரிடம் கேட்டபோது,  சஸ்பென்ஸ் நிறந்த சமூக கருத்துள்ள படமாக உருவாகிறது, ஈகைக்குணம் குறைந்த இன்றைய நாட்களில் சமூகத்தில் நிலவும் வன்முறைகளும், மனிதாபிமானமற்ற வாழ்வியலும் நிறைந்த மனிதர்களுக்கு மத்தியில் அறம் நிறைந்த ஒரு பெண்ணின் வாழ்வில் நடக்கும் சம்பவங்களின் தொகுப்பு இந்த "ஈகை" என்று சொன்னார் அசோக் வேலாயுதம்.

சமீபத்திய செய்திகள்

news

பஹல்காம் ரத்தம் இன்னும் காயவில்லை.. அதற்குள் பாகிஸ்தானுடன் விளையாட்டா?.. பிசிசிஐக்கு எதிர்ப்பு!

news

முதல்வரின் கோரிக்கை மனு... தமிழ்நாடு வரும் பிரதமர் மோடியிடம் வழங்கப் போவது யார் தெரியுமா?

news

தமிழ்நாட்டுக்கு வரும் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திக்க எடப்பாடி பழனிச்சாமி திட்டம்!

news

நான் வெற்றி பெற்றவன்.. இமயம் தொட்டு விட்டவன்.. பகையை முட்டி விட்டவன்.. கமலுக்கு வைரமுத்து வாழ்த்து!

news

திமுக ஆட்சியின் போலீசுக்கே பாதுகாப்பு இல்லை... சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது: எடப்பாடி பழனிச்சாமி

news

கோவை, நீலகிரிக்கு இன்று ஆரஞ்ச் அலர்ட் - வானிலை ஆய்வு மையம் தகவல்!

news

வைகோவால் மனஉளைச்சல்.. ஆகஸ்ட் 2ம் தேதி உண்ணாவிரதம்.. அறிவித்தார் மல்லை சத்யா

news

கார்கில் வெற்றி தினம்.. தியாகிகளின் நினைவிடத்தில் குடும்பத்தினர், பொதுமக்கள் வீர அஞ்சலி

news

தாய்லாந்து-கம்போடியா எல்லை மோதல்.. கவனமாக இருக்குமாறு இந்தியர்களுக்கு அறிவுரை

அதிகம் பார்க்கும் செய்திகள்