ஓபிசி, தலித், சிறுபான்மையினர் இணைந்தால்.. பாஜகவை வீழ்த்தலாம்.. அகிலேஷ் யாதவ்

Jun 17, 2023,03:55 PM IST
லக்னோ:  பிற்படுத்தப்பட்டோர், தலித்துகள் மற்றும் சிறுபான்மையினர் இணைந்து கை கோர்த்து, அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒருங்கிணைந்து பிரமாண்ட கூட்டணி அமைத்து போட்டியிட்டால் பாஜகவை உறுதியாக வீழ்த்த முடியும் என்று சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ் யாதவ் கூறியுள்ளார்.

2024 லோக்சபா  தேர்தலில் பாஜகவை எப்படி வீழ்த்துவது என்றுதான் நாட்டில் உள்ள அத்தனை எதிர்க்கட்சிகளும் பெருத்த யோசனையில் உள்ளன. ஆனால் பிரமாண்டக் கூட்டணி உருவாவது என்பது இதுவரை கானல் நீராகவே உள்ளது. அனைத்து முக்கிய கட்சிகளையும் ஓரணியில் இணைக்க பல்வேறு தரப்பிலும் தீவிர முயற்சிகள் நடந்து கொண்டேதான் உள்ளன. 



இந்த நிலையில் சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், என்டிடிவி மாநாட்டில் கலந்து கொண்டு பேசினார். அப்போது பாஜகவை வீழ்த்த அவர் ஒரு பார்முலாவை பரிந்துரைத்தார். அவர் கூறுகையில், பாஜகவை வீழ்த்த பிற்படுத்தப்பட்டோர், தலித்துகள் மற்றும் சிறுபான்மையினர் ஒன்றிணைய வேண்டும்.

உத்தரப் பிரதேசத்தில் உள்ள 80 தொகுதிகளிலும் பாஜக வீழ்த்தவேண்டும். நாட்டை விட்டு அக்கட்சியை அப்புறப்படுத்த வேண்டும். அனைத்து தேசிய கட்சிகளும் எங்களுக்குத் துணை நின்றால் இது சாத்தியம். எந்த மாநிலத்தில் எந்தக் கட்சி வலுவானதோ அந்தக் கட்சிக்கு அதிக இடங்களைத் தர வேண்டும். அதுதான் வெற்றி தேடித் தர உதவும்.

நாங்கள் எப்போதுமே நியாயமான, நேர்மையான கூட்டணிப் பங்காளியாக இருந்திருக்கிறோம். பகுஜன் சமாஜ் கட்சியுடன் கூட்டணி வைத்துள்ளோம். காங்கிரஸுடன் இணைந்துள்ளோம். அப்போதெல்லாம் இடப் பங்கீடு  தொடர்பாக எங்களால் பிரச்சினை வந்ததில்லை என்பதை அனைவரும் அறிவர் என்றார் அகிலேஷ் யாதவ்.

சமீபத்திய செய்திகள்

news

தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறக்க முடியாது: கர்நாடக முதல்வர் டி.கே.சிவக்குமார் அறிவிப்பு!

news

வினாத்தாள் கசிவுக்கு 10 ஆண்டு சிறை ரூ.10 கோடி அபராதம்: தேர்வு சீர்திருத்த மசோதா நிறைவேற்றம்

news

முட்டாள்கள்...ராகுல் காந்தியின் பேச்சால் கொந்தளித்த பாஜக எம்.பி.,க்கள்

news

பள்ளி மாணவர்களுக்கு சத்துணவில் வாரம் ஒரு நாள் சிக்கன் பிரியாணி

news

2031ல் தமிழகத்தில் பாமக ஆட்சி : பாமக பொதுக்கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ் பேச்சு

news

டெலிகிராம் நிறுவனர் பாவெல் துரோவுக்கு பிடிவாரண்ட்: தேடப்படும் குற்றவாளியாக அறிவிப்பு!

news

டாஸ்மாக் குடோன்கள் மற்றும் மதுபான ஆலைகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை

news

பாமக தலைவராக மீண்டும் டாக்டர் அன்புமணி தேர்வு.. வடிவேல் ராவணன், திலகபாமாவுக்கும் மீண்டும் பதவி

news

முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி வீடு உட்பட 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி ரெய்டு!

அதிகம் பார்க்கும் செய்திகள்