ஆதிபுருஷ் படத்தை தடை செய்யுங்க...பிரதமர் மோடிக்கு சினிமா தொழிலாளர்கள் சங்கம் கடிதம்

Jun 20, 2023,03:05 PM IST
டில்லி : பிரபாஸ் நடத்த ஆதிபுருஷ் படத்தை உடனடியாக தடை செய்ய கோரி அனைத்து இந்திய சினிமா தொழிலாளர்கள் சங்கம் சார்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. 

டைரக்டர் ஓம் ராவத் இயக்கிய ஆதிபுருஷ் படம் இந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளில் ஜூன் 16 ம் தேதி ரிலீஸ் செய்யப்பட்டது. ராமாயணத்தை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட இந்த படத்தில் பிரபாஸ், சைஃப் அலி கான், கிருத்தி சனோன் உள்ளிட்டோர் நடத்திருந்தனர். அதிக செலவில் எடுக்கப்பட்ட இந்திய படங்களில் ஒன்றான இந்த படம் கடுமையான விமர்சனங்களையும், கிண்டல் கேலிகளையும் சந்தித்து வருகிறது. 



அதே சமயம் இந்தி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்ற இந்த படம் ஷாருக்கான் நடித்த படங்களை விட முதல் நாளில் அதிக வருமானத்தை பெற்றது. இந்நிலையில் இந்த படத்தின் திரைக்கதை மற்றும் வசனங்கள் ஸ்ரீ ராமரையும், அனுமனையும் இழிவுபடுத்தும் வகையில் அமைந்துள்ளது. ஆதிபுஷ் படம் ஒட்டுமொத்த இந்துக்களின் உணர்வுகளையும் காயப்படுவதாக அமைந்துள்ளது. இந்தியா மட்டுமின்றி உலகமின் பகுதிகளிலும் உள்ள பக்தர்கள் ராமரை வணங்கி வருகின்றனர்.

வீடியோ கேம்களில் வரும் ராமர், ராவணன் கேரக்டர்களை போல் அவர்கள் பேசும் வசனங்களை இந்துக்களை காயப்படுத்துவதாக உள்ளன. அதனால் இந்த படத்திற்கு உடனடியாக தடை விதிக்க வேண்டும். ஓடிடி தளங்களிலும் இந்த படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும். அதோடு இந்த படத்தின் டைரக்டர் ஓம் ராவத், படத்தின் தயாரிப்பு நிறுவனம் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து ஸ்ரீராமர், சீதா, அனுமன் ஆகியோரின் மீதான மரியாதையை காப்பாற்ற வேண்டும் என இந்திய சினிமா தொழிலாளர்கள்  சங்கத்தின் சார்பில் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

நலம் காக்கும் ஸ்டாலின்.. உங்கள் குடும்பத்தின் நலன்.. முதல்வர் மு.க.ஸ்டாலின் அழைப்பு

news

கவினும் நானும் உண்மையாக காதலித்தோம்... எங்க அப்பா அம்மாவுக்கு தொடர்பில்லை... சுபாஷினி விளக்கம்!

news

கிராமங்களில் உள்ள சிறு குறு கடைகளுக்கு உரிமம் தேவையில்லை: தமிழக அரசு!

news

அரசு ஊர்க்காவல் படையினருக்கு காலமுறை ஊதியம் வழங்கி, பணி நிலைப்படுத்த வேண்டும் - சீமான்!

news

பாஜக கூட்டணியில் இருந்து விலகினார் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ்

news

மோடியா இந்த லேடியா என்று கேட்டு அதிர விட்டவர் ஜெயலலிதா.. அடுத்தடுத்து அதிரடி காட்டும் ஓபிஎஸ்!

news

மாலேகான் குண்டுவெடிப்பு.. பாஜக முன்னாள் எம்.பி. பிரக்யா தாக்கூர் உட்பட 7 பேர் விடுதலை

news

பாஜக மாநில அளவிலான பதவியில் குஷ்பு.. விஜயதாரணிக்கு இந்த முறையும் பதவி இல்லை!

news

மத்திய அரசுக்கு நேற்று.. மாநில அரசுக்கு இன்று.. கண்டனத்திலும் பேலன்ஸ் செய்யும் ஓ.பி.எஸ்!

அதிகம் பார்க்கும் செய்திகள்