"வட மாநிலத் தொழிலாளர்கள் விவகாரம்".. திமுகவினர் மீது பாயும் அண்ணாமலை

Mar 04, 2023,02:53 PM IST
சென்னை : கடந்த சில நாட்களாக தமிழகத்தில் வட மாநிலத்தவர்கள் தாக்கப்படுவதாக பொய்யா தகவல் சோஷியல் மீடியாக்களில் வதந்தியாக பரவி வருகிறது. இந்த தகவலை உண்மை என நம்பி, வட மாநில செய்தி சேனல்கள் பலவும் செய்தி வெளியிட்டு வருகின்றன. இதையடுத்து பீகார் சட்டசபை கூட்டத்தில் பாஜக சார்பில் இந்த விவகாரமும் எழுப்பப்பட்டுள்ளது.



இந்த தகவலின் உண்மை தன்மை பற்றி தெரிந்து கொள்ளாமல் பீகாரில் பாஜக.,வினர் பல இடங்களில் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இன்று இந்த விவகாரம் பற்றி தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ளார். 



அண்ணாமலை தனது ட்வீட்டில், தமிழகத்தில் வட மாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக சோஷியல் மீடியாவில் பரவும் பொய்யான வதந்திகளை பார்க்கும் போது மனதிற்கு வேதனையாக உள்ளது. உலகம் ஒன்று என்ற கருத்தில் நம்பிக்கை கொண்டவர்கள் தமிழர்கள். நமது வட மாநில நண்பர்களுக்கு எதிரான பிரிவினையையும், வெப்பையும் தூண்டி விடுபவர்களை ஆதரிக்காதீர்கள்.

தங்கள் நிறுவனங்களில் வெளி மாநில தொழிலாளர்களின் பங்கு எவ்வளவு முக்கியமானது என்பதையும், அவர்களின் நலனுக்காக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் ஓட்டல் உரிமையாளர்கள் சங்கம் மற்றும் தென்னிந்திய மில்களின் கூட்டமைப்பு ஆகியன சார்பில் ஏற்கனவே விரிவான விளக்கம் அளித்து அறிக்கை வெளியிடப்பட்டு விட்டது. 

தமிழகத்தில் உள்ள பொது மக்களும், நமது மாநிலத்தின் உள் கட்டமைப்பு, உற்பத்தி, சேவை துறைகளில் வெளிமாநில சகோதர சகோதரிகளின் பங்களிப்பை புரிந்து கொண்டு அதை ஏற்றுக் கொண்டு, வரவேற்க துவங்கி உள்ளனர். ஆனால் திமுக எம்.பிக்களும், அமைச்சர்களும் அவர்களின் கூட்டணி கட்சியினரும் வட இந்தியர்களை, பானிப்பூரி வாலாக்கள் என தரக்குறைவாக குறிப்பிடுவதுடன், அவரை தமிழகத்தில் இருந்து வெளியேற்ற வலியுறுத்தி வருகின்றனர். திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியினருக்கும் இருக்கும் பார்வையை பொது மக்களோ, அரசோ, போலீசோ ஏற்க கூடாது.

பிரிவினையை கையில் எடுப்பது எப்போதும் திமுகவின் வழக்கம் தான். ஆனால் தற்போதுள்ள நிலையை சரி செய்ய வேண்டிய பொறுப்பு அவர்களுக்கு உள்ளது. இதை ஒரு வாய்ப்பாக எடுத்துக் கொண்டு தங்களின் தவறுகளை சரி செய்ய அவர்கள் முயற்சிக்க வேண்டும் என அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார். 

இதற்கு கருத்து பதிவிட்டுள்ள பலரும், ஏன் நீங்க மத்திய அரசிடம் சொல்லி, தவறான செய்திகளை வெளியிடும் வட இந்திய செய்தி சேனல்கள் மீது நடவடிக்கை எடுக்க வைக்க வேண்டியது தானே? வடக்கே இதை வைத்து போராட்டம் நடத்தி பிரச்சனை செய்வதே உங்க ஆளுங்க தான். ஆனால் நீங்க நைசாக இந்த பிரச்சனையை திமுக பக்கம் திருப்பி விட பார்க்கிறீர்கள். இதில் கூடவா அரசியல் செய்ய வேண்டும்? என கேள்வி கேட்டு வருகின்றனர்.

சமீபத்திய செய்திகள்

news

எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!

news

கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!

news

இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?

news

உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?

news

விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி

news

கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்

news

Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்

news

ருத்ர தாண்டவம் (சிறுகதை)

news

உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!

அதிகம் பார்க்கும் செய்திகள்