ஆபாச வார்த்தைகளுடன் ஓடிடியில் வந்த படம்.. பாஜக அதிர்ச்சி.. நடிகருக்குக் கண்டனம்!

Feb 17, 2023,03:02 PM IST
சென்னை: பொங்கலுக்கு வெளியான தமிழ்ப் படத்தில் ஆபாச வசனத்தை பிரபல ஹீரோவே பேசியிருப்பதையும், அது ஓடிடியில் அப்படியே வந்திருப்பதற்கும் பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக பாஜக துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி வெளியிட்டுள்ள அறிக்கை:



திரைப்படங்களை முறைப்படுத்துவதற்கு திரைப்பட சான்றிதழ் வாரியம் செயல்பட்டு வருகிறது. திரைப்படங்கள் வெளியாவதற்கு முன் இந்த வாரியத்தின் உறுப்பினர்கள் இந்த படங்களை பார்வையிட்டு விதிகளின் படி காட்சிகள் உள்ளனவா என்பதை கண்டறிந்து விதிமீறல்கள் உள்ள காட்சிகளை, வசனங்களை நீக்க சொல்லிய பின்னர் மீண்டும் பார்வையிட்டு திரைப்படத்தை வெளியிடுவதற்கான சான்றிதழை அளிப்பார்கள். திரைப்பட சான்றிதழ் வாரியத்தை பொறுத்த வரை ஆபாசமான, அதிக வன்முறை மிக்க காட்சிகளையும், தரக்குறைவான வசனங்களை மட்டுமே நீக்க சொல்வது வழக்கம்.



சமீப காலங்களில் இணைய வழி சினிமா திரை (OTT)மூலம் இந்த படங்கள் விரைவில் வெளிவருகின்றன. அப்படி இணைய வழி திரையில் வெளிவரும் வேளையில், நீக்கப்பட்ட காட்சிகளை, வசனங்களை அதில் இணைத்து வெளியிடுகின்றனர்.அதாவது எது தவறு, ஆபாசம், விதி மீறல் என்று குறிப்பிட்டு நீக்கப்பட பரிந்துரைக்கப்பட்டனவோ அவைகளை இணைத்து திரையிடுகின்றனர். இது அப்பட்டமாக சமுதாயத்திற்கு தீங்கிழைக்கக் கூடிய செயலாகும். சமீபத்தில் பொங்கலையொட்டி வெளியான ஒரு பிரபல நடிகர் நடித்த படத்தில் இடம்பெறாத சில காட்சிகளும், வசனங்களும் OTT திரையில் வெளியிடப்பட்டுள்ளது அதிர்ச்சியளிக்கிறது. 

அந்த படத்தில் தரக்குறைவான வார்த்தைகளை அந்த பிரபல நடிகரே  உச்சரிப்பது கடும் கண்டனத்திற்குரியது. குறிப்பாக பலமுறை திரைப்பட சான்றிதழ் வாரிய குழுவால் நீக்கப்பட்ட வார்த்தைகள் இடம்பெற்றுள்ளது சமுதாய சீரழிவுக்கே வழிவகுக்கும். இது குறித்து அத்திரைப்படம் தொடர்பான முக்கிய பிரமுகர் ஒருவரிடம் பேசிய  போது, இது போன்ற தகாத, தீய சொற்களை தமிழக இளைஞர்கள் 
அதிகம் விரும்புவதாக சொன்னது பேரதிர்ச்சியை அளிக்கிறது.

சமுதாயத்தை சீர்படுத்த வேண்டிய,முறைப்படுத்த வேண்டிய கடமை ஒவ்வொருவருக்கும் உள்ளது.ஆனால்,தங்களின் பட வெற்றிக்காக, வியாபாரத்திற்காக அடுத்த தலைமுறையை  சீரழிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. இணைய வழி திரைக்கு சில சுயகட்டுப்பாடுகளை விதித்திருக்கிறது அரசு. அதை பின்பற்ற வேண்டியது திரை துறையினரின் கடமை. எது தவறு, தீங்கானது, ஆபாசமானது, சட்டத்திற்கு புறம்பானது என்று குறிப்பிடப்பட்டு திரைத்துறையினரால் ஏற்றுக்கொள்ளப்பட்டு அகற்றப்பட்டதோ, அதையே வேறொரு வழியில் மக்களிடம் கொண்டு செல்வது துரோகம் அல்லவா?

குறிப்பாக தங்களின் ஆதர்ச நாயகர்களாக பாவித்து கொண்டிருக்கும் இளைய சமுதாயத்தை சீரழிக்கும் விதத்தில் காட்சிகளோ, வசனங்களோ இடம்பெறாமல் கவனித்து கொள்ள வேண்டியது பிரபல கலைஞர்களின் கடமையல்லவா?. சுய கட்டுப்பாடுகளை விதித்து கொண்டு, சுய தணிக்கைகளை மேற்கொள்ள வேண்டியவர்கள் அரசின் கட்டுப்பாடு இல்லையென்ற ஒரே காரணத்திற்காக சமுதாயத்தை சீரழிக்கலாமா? அதிலும் பிரபலமான நடிகர்கள், இயக்குனர்கள் பொறுப்புணர்வோடு நடந்து கொள்ள வேண்டாமா?

அரசின் வழிகாட்டுதல்களின் படி, சட்டத்தின் அடிப்படையில் நடக்க வேண்டியது திரைத்துறையினரின் கடமை மற்றும் பொறுப்பு. அதை விடுத்து, பணத்திற்காக, வியாபாரத்திற்காக சமூகத்தை சீரழிக்கும் அவலங்களை திணிப்பது கேட்டை விளைவிக்கும்.இருக்கும் சுதந்திரத்தை முறையாக பயன்படுத்துவதே அழகு. இல்லையேல், அந்த சுதந்திரம் கேள்விக்குறியாகி விடும் என்று கூறியுள்ளார் நாராயணன் திருப்பதி.

சரி, நாராயணன் திருப்பதி எந்தப் படத்தைச் சொல்கிறார்.. துணிவா அல்லது வாரிசா?

சமீபத்திய செய்திகள்

news

சோமவார பிரதோஷம்.. சிவபெருமானுக்கான விரதங்களிலேயே மிகவும் சிறந்தது!

news

தெலங்கானாவில் விபரீதம்.. அரசுப் பேருந்துடன் ஜல்லி லாரி மோதி.. பயங்கர விபத்து

news

மீண்டும் ஏற்றம் கண்ட தங்கம், வெள்ளி விலை... சவரனுக்கு ரூ.320 உயர்வு!

news

வடக்கு ஆப்கானிஸ்தானை உலுக்கிய சக்தி வாய்ந்த நிலநடுக்கம்.. பெரும் சேதம் எனத் தகவல்

news

கடற்பாசி ஜெல்லி.. சாப்பிட்டிருக்கீங்களா.. சூப்பர் டேஸ்ட்டி.. சுப்ரீம் ஸ்வீட்டுங்க!

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் நவம்பர் 03, 2025... இன்று நன்மைகள் தேடி வரும் ராசிகள்

news

அம்மாவை அதிகமாக மௌனங்களோடு பேச விடாதீர்கள்!

news

சமையல் அறையில்.. நான்!

news

'NO' சொல்ல தயக்கமா?.. தயங்காமல் சொல்லுங்க.. சொல்ல வேண்டிய இடத்தில்!

அதிகம் பார்க்கும் செய்திகள்